Jump to ratings and reviews
Rate this book

குருதி தேடும் இயந்திரங்கள்

Rate this book
உயர் தொழில்நுட்பம் ஒன்று சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால் எப்படிப்பட்ட விளைவுகள் நேரலாம் என்பதை கூறுவதே இக்கதை.

2030 அக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை சில ஜந்துக்கள் தாக்குகின்றன. இந்திய உளவுப்பிரிவுகள் ஒன்றின் தலைவரான விக்ரம், அதைப் பற்றி ஆராய முற்படுகிறார். அந்த ஜந்துக்கள் அனைத்தும் ஏலியன்கள் என்ற மற்றவர் கோணத்திலிருந்து மாறுபட்டு அவர் அதை வேறு விதமாக அணுகுகிறார்.

அவை என்ன?

அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது?

அவற்றை எப்படி அழிப்பது?

அவரின் இக்கேள்விகளுக்கு விடைகான மற்றொரு இந்திய நிறுவனத்தின் தலைவர் குகனை நாடுகிறார். அவரின் உதவியால் அவைகள் ஏலியன்கள் அல்ல, மனிதர்களால் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரோபோட்கள் என்பதை கண்டறிகிறார். அவரும் அவரின் உதவியாளர்களும் அந்த ரோபோட்களை உருவாக்கியவர்கள் யார் என்பதை கண்டறிய எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு பின்னடைவையே கொடுக்கின்றன. அவற்றை தயாரித்தவர்களைப் பற்றி அறிந்த ஒரு சிலரை விக்ரமின் உதவியாளர்கள், அவர்களிடமிருந்து தங்களுக்கு ஏதாவது தகவல் கிடைக்குமா என அணுகுகின்றனர். ஆனால் உதவியாளர்கள் அணுகும் சில மணிநேரங்களுக்கு முன் அச்சிலரும் கொல்லப்படுகின்றனர். இப்படி ஒவ்வொரு கட்டமாக கடந்து

அந்த ரோபோட்டுகளை உருவாக்கியவர்கள் யார்?

அவர்களின் குறிக்கோள் என்ன?

அவர்களை எப்படி அழிப்பது?

என்ற கேள்விகளுக்கு விடை கூறுவதே இக்கதை.

404 pages, Kindle Edition

Published January 4, 2019

1 person is currently reading
7 people want to read

About the author

M.Kousikan

2 books1 follower
A physics graduate of Govt. Arts College, Coimbatore and MCA from Bharathidasan University, Thiruchirappalli and working in Information Technology industry for 20 years and currently working in a startup as product head.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (58%)
4 stars
3 (17%)
3 stars
2 (11%)
2 stars
2 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
2,121 reviews1,109 followers
March 7, 2019
தமிழில் வெளிவந்த அறிவியல் புதினங்களின் வரிசையில் இந்தக் கதைக்கு ஒரு சிறப்பான இடம் கிடைக்கும்.

நற்செயல்களுக்காகவே தொடங்கப்படும் ஆராய்ச்சியின் முடிவுகள் அதை நடைமுறைப்படுத்துபவனின் புத்தியை சார்ந்தே அமையும்.

விவசாயத்திற்காகத் தீபிகா நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்ட ஆராய்ச்சியைப் பணத்திற்காக அவளுக்கே தெரியாமல் விற்பதில் இருந்து தொடங்கும் துரோகத்தின் சங்கிலி பலரை பிணைத்து அதன் பலனை இந்தியா சில வருடங்களுக்குப் பிறகு அழிவுகளின் வழியே அனுபவிக்க ஆரம்பிக்கிறது.

தொழில்நுட்பத்தைக் கையாண்ட விதமும் அதை பற்றிய விரிவான விளக்கங்களும் கதையின் போக்கிலே சொல்லப்பட்டதால் சோர்வடையாமல் கதையின் உள்ளே ஆர்வத்துடன் அமிழ்ந்து கொள்ளமுடிகிறது.

தொழில்நுட்ப உத்திகளை நுழைத்த விதமும் அதைக் கோர்த்து இறுதியில் இந்தியாவில் அழிக்க நினைத்து எது என்பதைத் தெரிந்து கொண்ட நொடியில் கதையின் உச்சகட்ட ஆட்டம் சூடுபிடிக்கிறது.

நல்லதை நிலை நிறுத்த போராடுபவனின் திறத்தை மேம்படுத்திக் காட்ட அவனுக்குச் சரிசமமான எதிரியை முன் நிறுத்துவது முக்கியம்,அப்படி நின்ற குகனின் கதாபாத்திர அமைப்பே போராட்டத்தின் வீரியத்தைச் சுவாரசியமாக்கியது.
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
April 26, 2019
தமிழில் நல்லதொரு அறிவியல் புதினம்

தமிழில் நல்லதொரு அறிவியல் புதினம். அங்கங்கே வரும் அறிவியல் கருத்துகளை, எளிய முறையில் தேவயான அளவிற்கு விளக்கத்துடன் எழுதியுள்ளார் ஆசிரியர். கதை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாகவும், அதே நேரத்தில் சுவாரஸ்யமான மொழி நடையில் எழுதியிருப்பதால், கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சில் படிக்க முடிகிறது.
1 review
February 8, 2019
Imagination Vera level

Very good book with lots of imaginations. Artificial intelligence and robotics concept are well explained. All the best author .
1 review
February 17, 2019
Worst punctuations.

Worst punctuations make this book unbearable to read. Spoils the understanding at many places. Unable to differentiate between narrative and actual dialogs and hence have to re-read at so many places. 2 stars for emp logic. Avoid this at any cost.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.