90-களின் ஆரம்பத்தில் பிறந்த ‘அனோஜன் பாலகிருஷ்ணன்’ இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சமகால புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். ஏற்கனவே “சதைகள்” என்கிற சிறுகதைத்தொகுப்பு இலங்கையில் வெளியாகியிருந்தது. “பச்சை நரம்பு” பத்துக்கதைகள் அடங்கிய இவரது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பாகும். கல்குதிரை, காலச்சுவடு, சிலேட், அம்ருதா, ஆக்காட்டி, அகாநாழிகை, புதிய சொல் போன்ற இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. *** அனோஜன் பாலகிருஷ்ணன்சொந்த ஊர் அரியாலை யாழ்ப்பாணம். வயது இருபத்தைந்து. முதலாவது சிறுகதைப் புத்தகம் ‘சதைகள்’ 2016ல் இலங்கையில் வெளியாகியிருந்தது. ‘பச்சை நரம்பு’ இவரது இரண்டாவது சிறுகதைப் புத்தகம்.
தடங்களாற்ற நடை வசப்பட்டிருக்கிறது, அனோஜனுக்கு. ஆனால் அதை வைத்து குறிப்பிட்ட ஒரு உறவுச்சிக்களை பற்றிக்கொண்டு மட்டும் திரும்பத்திரும்ப சுழன்று வருவது என் என்று புரியவில்லை. அப்படி தொட்டுவரும் கருவில் அதன் ஆழம் ஏதுமின்றி ஒரு விடலைத்தனம் மட்டும் படர்ந்து வருவது சலிப்பளிக்கிறது. // செல்வமக்கா கண்களை அழுத்தி மூடினார். அவர் கழுத்துப் புடைத்து பச்சை நரம்பு ஒன்று தெரிவதைக்கண்டேன். என் அம்மாவிடம் நான்கு வயதில் முலைப்பால் குடிக்கும்போது இப்படி நரம்பைக் கண்டது நினைவில் வந்தது. அதே நரம்பு தீபாவின் கழுத்திலும் இருந்ததுபோல் ஓர் எண்ணம் உடனே தோன்றியது. எல்லாம் புரிந்ததுபோல் இருந்தது.// இப்படி ஒவ்வொரு கதையும் முடிவில் ஒரு வரிசை அடைத்து வைத்திருக்கிறார். மூளையை எவ்வளவு கசக்கினாலும் அதில் எந்த புரிதலோ, எந்தவொரு குறியீடோ இருப்பதாகத் தெரியவில்லை. வெறும் வார்த்தைத் தோரணம் மட்டுமே https://umayaal.wordpress.com/2018/04...
Author has Spontaneous writing and is able to achieve intensity. But limited themes (effect of war and sex in individual's life). Wishes for next collection.