Jump to ratings and reviews
Rate this book

மகான்- Mahaan

Rate this book
தாமிரபரணி நதி கரையிலே ஒரு பெரும் இராஜ்ஜஜியம், அதை ஆண்டு வந்த சரித்திரர்கள். அந்த பெரும் இராஜ்ஜியத்தை வீழ்த்த போகும் ஒரு சூழ்ச்சியை பற்றிய கதை. மகான் என்ற சித்தாந்தத்தை வேறு கோணத்தில் விளக்கப் போகும் கதை. வீரம் நிறைந்த சரித்திர குல மன்னர் வளஞ்செழியன், தந்திரங்கள் நிறைந்த படைத்தளபதி வீரசேணா, நாட்டிற்காக தன் குடும்பத்தையே இழந்த மந்திரி இளங்குமரன், மகான் என்ற சித்தாந்தத்தை விளக்க வரும் பொதிகை மலை சித்தார் சந்திராட்டியார் மற்றும் இந்த பெரும் வளனூர் சாம்ராஜ்ஜியம் உங்களை அன்போடு வரவேற்கிறது

397 pages, Kindle Edition

Published December 24, 2017

3 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (50%)
4 stars
1 (25%)
3 stars
0 (0%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Saravanan N.
2 reviews3 followers
October 24, 2022
நிகழ்காலத்தில் தொடங்கி கடந்தகாலத்திற்கு சென்று மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வரும் கதையின் போக்கும் சுவாரஸ்யமும் மிக அருமை. வாசகர்களுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள கதையின் போக்கும், வீரம், துரோகம், இன்பம், துன்பம் என எல்லாவற்றிலும் ஓங்கி நிர்கிறார் எழுத்தாளர் TP. நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம்
Profile Image for Rathinasamy.
4 reviews5 followers
February 24, 2019
என் நிலம் சார்ந்த கதைகளை தேடி அலைந்து திரிந்த எனக்கு என் நிலத்தை சார்ந்த அண்ணன் ஒருவர் நான் நேசிக்கும் பொருநை கரையோரம் வாளும் கேடயமும் உரசும் சத்தம் கேட்கும் கதை ஒன்றை சொல்கிறேன் என துவங்குகிறார். திரைத்துறைக்கு எழுதிய கதை நாவலாக உங்கள் முன்னால் என்று அண்ணனே சொல்லிவிட்டார். ஆகவே இதன் மீது நான் வைக்கலாம் என நினைக்கும் கேள்விகளுக்கு இடம் இல்லாமல் போகிறது.

எதற்காக இந்த நாவலை கொண்டாட வேண்டும்?
யார் மகான் என்ற கேள்விக்கு இந்த நாவல் பதில் சொல்லலாம். ஆனால் எனக்கு இந்த நாவல் பிடித்து போக காரணம் அவ்வளவு பெரிய கேள்விக்கு பதில் சொல்வதால் அல்ல. இந்த நாவலில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு முக்கியமானது, ஆழமானது. அதை கொண்டாட வேண்டும். அந்த கதாபாத்திரங்களை அப்படி உருவாக்கி அதில் உரையாடல்களை இப்படி செதுக்கியதால் தமிழன் பிரபாகரையும் இந்த நாவலையும் கொண்டாட வேண்டும்.

நான் இந்த நாவலை கொண்டாட முதல் 50 பக்கங்கள் மட்டுமே போதுமானது. வரலாறுகளின் மீது நேசம் கொண்டவன் என்ற முறையில் இதில் நடக்கும் உரையாடல்கள் எல்லாம் இந்த தலைமுறைக்கு சொல்ல நினைத்தவை. நான் பொருநை கரையோரம் நடக்கும் போர் மற்றும் ஆலங்குளம் பகுதிதான் கதை களம் என்பதால் மட்டுமே முதலில் இந்த நாவலை வாசிக்க துவங்கினேன். ஆனால் வாசிக்க துவங்கிய சில நிமிடங்களிலேயே என் எதிர்பார்ப்புகள் எல்லாம் தவிடு பொடி ஆனது. சில குறிப்புகள் எல்லாம் எடுத்து வைத்து கொண்டே போனேன் ஆனால் சில பக்கங்களுக்கு பின் அவைகளை தொடர முடியாமல் போனது. ஒரு வாசகனை தன்னுள் ஈர்த்து தக்கவைத்து தன்மை இந்த மகானுக்கு உண்டு.

வார்த்தைகள் தேர்ந்தெடுத்து பயன்படுத்திய இடங்கள் சிறப்பு. உணர்வுகளின் தடுமாற்றங்கள் கூட வார்த்தைகளில் தெளிவாக கடத்தி இருக்கிறார். "சுப்பையா" என்ற பெயரை "சுப்பயையா" என்று பதற்றத்தில் உச்சரிக்கும் உணர்வை எழுத்தில் கடத்தி கதை சொல்வது இந்த தின்னவேலிகாரருக்கு வராமல் போனால்தான் நாம் வருந்த வேண்டும்.

அண்ணன் தம்பி உரையாடலை திரும்ப திரும்ப படித்தேன். எங்கே "டா" சொல்லவேண்டும் எங்கே "ணா" சொல்ல வேண்டும் என்பது எல்லாம் செல்ல சண்டை போட்டுக்கொள்ளும் அண்ணன், தம்பிகளுக்கே வெளிச்சம். அதையும் தமிழன் பிரபாகரன் அண்ணன் விட்டு வைக்கவில்லை.

கதை சொல்லியின் உவமைகளுக்கும் இங்கு பஞ்சம் இல்லை. தனக்கு கிடைத்த ஓலைச்சுவடிகளை முதன் முறையாக தொடும் போது "முதல் முறை காதலியின் விரல் நினியைத் தொடும் பொழுது, ஒரு பரவச மின்னல் காதலன் உடல் முழுவதும் பரவுமே. அதே மின்னல் இப்பொழுது வருணின் உடலிலும் பரவியது." இரண்டாவது முறை தொடும் போது "தாய் தன் முதல் குழந்தையை ஒரு வித அச்சத்துடனும், அதீத ஆசையுடனும் தோளில் பத்திரமாய் தூக்கிச் செல்வாளே?". உவமைகளையும் தாண்டி சில சீண்டல்கள் "காவிரி ஆற்றில் நீரைப் பார்த்தது போல்" என ஆழமான பார்வைகள் எளிதாக முன் வைக்கப்படுகிறது. இது போல் எல்லாம் உவமை இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

சென்னைக்கு முதன் முறையாக வரும் பெரும்பாலோனோர் இந்த கேள்வியை செங்கல்பட்டு வந்த உடனே தனக்குள் எழுப்பி இருக்க கூடும்.
"ஓ சென்னை வந்துட்டோமா?"
"இன்னும் 40 கி.மீ போகனும் பா"
"பாவம் அவருக்கு தெரியாது போல, நிலத் தரகர்களால் சென்னை நாலாப்பக்கமும் 50 கி.மீ தொலைவு விரிவடைந்தது".

இவைகளை கடந்து ஒரு சாம்ராஜ்யம் உருவாகி மறைந்த கதை. தாமிரபரணி கரையோரம் நடக்கும் ஒரு போரில் தளபதியின் தந்திரத்தால் வெற்றிபெறும் ராஜ்ஜியம். இறுதியில் சூழ்ச்சியால் வீழ்ந்து போகும்போது கூட அந்த தளபதியின் வரலாறு எப்படி கட்டமைக்கபட்டு உள்ளது என்பதை உணரும் போது இதுவரை உண்மையான வரலாறு என நம்பிக்கொண்டு இருந்தவைகளின் மீதான நம் புரிதலை மறுமதிப்பீடு செய்ய வேண்டியநிலைக்கு தள்ளப்படுகிறோம். வரலாற்றின் மீதான காதலும் கேள்விகளும் இன்னும் அதிகமாகிறது.

நாவலில் வழக்கத்தில் இல்லாத பழமையான சொற்களை பயன்படுத்தும் போது அதற்கு அந்த பக்கத்தின் அடியில் அல்லது அதே வரியில் அதற்கான பொருள் விளக்கம் இருந்தால் வாசகன் இன்னும் சிறப்பாக உணர்வான். அண்ணன் தமிழன் பிரபாகரன் அவர்களுக்கு ஒரு வாசகனாக இதை மட்டும் வாழ்த்துகளோடு சொல்லிக்கொள்கிறேன்.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
July 14, 2023
களப்பிரர்கள் காலம் குறித்து இருவேறு கருத்துக்கள் இருந்தாலும், அது ஒரு இருண்டகாலம் என்று கதையில் சொல்லப்படுகிறது. தமிழன் என்று பெயரில் பார்த்ததும் கொஞ்சம் அதிகம் எதிர்பார்த்து விட்டேன். அர்த்தம் போன்ற வட மொழி சொற்களை தவிர்த்து விட்டு பொருள் போன்ற தமிழ் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம். இம்மை அரசன் 23 ம் புலிகேசியில் வரும் பிற்காலத்தில் வரப்போகிற மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது என்ற சொற்றொடர் தான் ஞாபகம் வந்தது.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.