மீட்சி இலக்கிய இதழ் கவிஞர் பிரம்மராஜன் 1983ல் தொடங்கிய மீட்சி, சிறுபத்திரிகை வெளியில் தனி முத்திரையைப் பதித்த இதழ். 16 பக்கங்களில் பல முக்கியமான கவிதைகள் கட்டுரைகள் கதைகளை வெளியிட்ட தரமான இதழ் என்பதை 35 ஆண்டுகள் கழிந்த பின்பும் இதைப் படிக்கிற தீவிர இலக்கிய வாசகர் எவரும் உணர்வார்கள். இந்த இதழில் தாஸில்தாரின் நாற்காலி - விமலாதித்த மாமல்லன் வண்ணதாசன் சிறுகதைகள் - ஒரு வாசக அனுபவம் ஆர். சிவகுமார் இரண்டு சிகரங்களின் கீழ் - ஒரு நேர்கோணம் - ஆத்மாநாம் நகுலனின் “இவர்கள்” - பிரம்மராஜன் கவிதை - விக்ரமாதித்தன் பெயர் - நிம்ல. விஸ்வநாதன்
பிரம்மராஜன் தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். மீட்சி என்னும் இலக்கிய இதழை நடத்தியவர். பல கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
1953ஆம் ஆண்டு பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இதழாளர். கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். இதுவரை 5 கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.