Jump to ratings and reviews
Rate this book

Manal

Rate this book
சென்னையில் எழுபதுகளில் இருந்திருக்கக் கூடிய ஒரு குடும்பத்தின் கதை. இதன் உறுப்பினர்கள் நவீன வாழ்க்கைக்கும் பாரம்பரியத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்டவர்கள். உறவு சார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் திறன் அற்றவர்கள். மணல் இவர்களின் வாழ்க்கையை எதர்த்தத்தோடு எடுத்துரைக்கிறது.

88 pages, Kindle Edition

First published January 1, 1969

4 people are currently reading
20 people want to read

About the author

Ashokamitthiran

83 books225 followers
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.

அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.

சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (32%)
4 stars
17 (54%)
3 stars
4 (12%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Nilanchana.
35 reviews1 follower
December 26, 2022
"அம்மாவும் அப்பாவும் சரோஜினி பிறப்பதற்கும் முன்னால் சேர்ந்து எடுத்துக்கொண்ட​ புகைப்படத்தில்....................அம்மா விறைப்பாக​ இருப்பது தெரிந்தது. அப்பா அப்போதே பொம்மை மாதிரித்தான் இருந்திருக்கிறார்..."
கருத்துகளைத்​ திணிக்காமல் ஒரு சாமான்ய​ குடும்பத்தின் கதையை மாத்திரம் இயல்பாகத் தூவி ஆழமாகப் பதியவைக்கிறது "மணல்".
Profile Image for Harshni Chandrasekaran.
17 reviews18 followers
August 4, 2024
🪶அசோகமித்திரனின் "மணல்" பற்றி கூற வேண்டும் என்றால் 87 பக்கங்கள் கொண்ட குறுநாவல். எந்த உணர்வுகளையும் வெளிப்படையாக எழுதாத குறுநாவல்.

🪶காலகாலமாக கேள்விகள் கேட்காமல் செய்த செயல்களை, கேள்வி கேட்டு தான் மாற்ற வேண்டும். அசோகமித்திரனின் தண்ணீரும் சரி மணலும் சரி பெண்களை மையமாக கொண்ட குறுநாவல்.

🪶ஒரு மரணத்தினால் குடும்ப சூழ்நிலை நிமிடத்தில் மாறிவிடுகிறது. அம்மாவின் பொறுப்புகளும், அவர் மற்றவர்களின் மேல் காட்டும் அன்பும் அக்கறையும் ஒரு நிமிடத்தில் இல்லாமல் போகிறது. குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் பிரித்துக் கூட செய்ய முடியாத வேலைகளை ஒரே ஆளாக செய்து இருப்பாள் அந்த அம்மா.அதே மாதிரியே சரோஜினியின் தாய் இறந்த பின் அவரது குடும்பத்தில் ஒரு வெற்றிடம் தோன்றுகிறது. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கும் பொழுது கூடுதலாகவோ குறைவாகவோ ஒரு சிலருக்கு பொறுப்புகள் மாறுபடும்.

🪶அப்படி சரோஜினிக்கும் மாறுபட்டது. தன் ஆசை, கனவு அனைத்தையும் ஓரம் வைத்து விட்டு அனைவரையும் பார்த்துக் கொள்கிறாள்.

🪶அம்மா இல்லை என்றால் என்ன அக்கா, அண்ணா, அப்பா எல்லாம் அவளை பார்த்துக் கொள்வார்கள் என்று அவள் இருந்து விட வேண்டுமா?
இல்லை
அம்மாவே இல்லை இனி இவர்கள் நம்மை பார்த்துக் கொள்வார்களா? தன்னை தானே பார்த்துக் கொண்டால் தான் உண்டு என்று இருக்க வேண்டுமா?

🪶அம்மா இல்லை பாவம் அந்த பொண்ணு. அம்மா இல்லன்னு எவ்வளவு சுயநலமா மாறிடுச்சு இந்த புள்ள. என்று ஏதோ ஒரு கட்டமைப்புக்குல் கொண்டு வராமல். நீ நினைத்தது போலவே இரு. அதற்குப் பெயர் வைக்க வேண்டாம். என்று விடுவதே சரோஜினிக்கு நாம் செய்யும் உதவியும் ஆறுதலும் நியாயமும் ஆகும்.

- ஹர்ஷினி சந்திரசேகரன் 🔨
Profile Image for Bavya Krishnan.
57 reviews2 followers
May 9, 2021
#மணல் by #அசோகமித்திரன்
.
.
#kalachuvadu classics are always worth spending your time and money on..
.
.
This is a short 80 page read which is based on a family living around 1960's.. It's a subtle read..
.
.
The story starts with the protogonist Sarojini entering her house from school and ends with her leaving the house.. In between the narrative revolves around a birth, a death, a love, children, frustration, everyday happenings that can be related in every household..
.
.
I felt this kind of narrative in the movie #thegreatindiankitchen during recent times .. The way the author makes us understand the characters with just the way they moves around or just how they places their things is great..
.
.
❤️❤️❤️❤️..
.
.
Grab if you are looking for a early day read..
Profile Image for Satham Hussain.
13 reviews
February 28, 2024
"கழுதையாக இருந்தாலும் ஒரு அளவுக்குத்தான் சுமைகளை சுமக்க முடியும் என்பதை நினைவூட்டுகிறது இக்குரு நாவல்".

இக்கதையில் வரும் எவரும் நமக்கு அன்னியமில்லை.

இயல்பாக வாழ்க்கையில் வரும் கோபம், ஏக்கம், அன்பு, விரக்தி போன்ற அனைத்து உணற்வுகளையும், நடுத்தர குடும்பங்களில் இருக்கும் சிக்கல்களையும் சிறிதும் வேறுபாடின்றி இயல்பாக காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

எவ்வளவோ அன்பு இருந்தாலும், ஆசை இருந்தாலும், அதை தெரியப்படுத்த ஏதோ ஒரு தயக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது நம்மிடயே...
Profile Image for Deepak Namachivayam.
229 reviews
October 22, 2025
To have advocated for girl child education in the 1970s, is a definitely a progressive writer’s job, and only to be stifled with poverty and patriarchy for higher education, towards the end was a like a speed breaker to my happiness in this novella. His writing style is philosophically minimalistic and i think i am a fan for it. Sly dig on reservation is why it is receiving 4 stars.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.