Jump to ratings and reviews
Rate this book

நிலம் கேட்டது கடல் சொன்னது [Nilam Kettadhu Kadal Sonnadhu]

Rate this book
இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்பார்க்கிறான். அதிலிருந்து விடுபட்டு ,இவ்வுலகம் பெரியது, அழகானது, இயற்கையின் ஒரு அங்கமாகவே மனிதனுமிருக்கிறான் என்பதைப் பயணமே கற்றுத்தருகிறது. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது. அதற்குப் பயணமே முதற்படி. ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் கண்ட வால்டன் ஏரி வழியே எஸ்ரா அடைந்த அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் வழியே நம்மையும் அனுபவிக்கச் செய்கிறார் என்பதே இந்நூலின் தனித்துவம்.
இந்நூல், ‘பூவுலகின் நண்பர்கள்’ வெளியிட்ட ‘ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது’, ‘புல்லினும் சிறியது’ ஆகிய இரண்டு சிறுநூல்களின் ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட தொகுப்பாகும்..

96 pages, Paperback

First published January 1, 2016

2 people are currently reading
19 people want to read

About the author

S. Ramakrishnan

165 books675 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (34%)
4 stars
12 (52%)
3 stars
3 (13%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for MJV.
92 reviews40 followers
September 18, 2019
நிலம் கேட்டது கடல் சொன்னது:

எஸ்.ரா அவர்களின் இரண்டு பயணக்கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். ஒன்று சாவின் நகரம் என்று அழைக்கப்பட்ட ஹிரோஷிமாவைப் பற்றிய கட்டுரை. இன்னொன்று மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள வால்டன் குளம் பற்றியது. ஒரு பயணக்கட்டுரையின் நோக்கம் உங்களை பயணம் செய்ய வைக்க வேண்டும் என்றே நினைத்து வந்திருந்தேன்.

அதை தாண்டி சில கருத்தியலை, சில ஆழ யோசிக்க வைக்கும் தருணங்களை, விழியின் ஓரம் சில கண்ணீர் துளிகளை, உலகம், போர், இயற்கை பற்றிய சிந்தனைகளை எடுத்து வைக்கும் என்று நினைத்ததில்லை. அப்படியானவற்றை இந்த நூல் செயதுள்ளதில் மகிழ்ச்சி.

ஜப்பானின் வரலாற்றை ஹிரோஷிமாவுக்கு முன் பின் என்று பிரிப்பதில் எவ்வித தவறும் இருக்கப்போவதில்லை என்று நம்புகிறேன். அப்படி ஒரு வீழ்ச்சிக்கு பிறகு இப்படி ஒரு வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடிந்ததற்கு மிகப் பெரிய காரணம் அந்த மக்கள். அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் மனிதர்களை நடத்தும் விதம், திட்டமிடல் என்று பலவற்றை காரணிகளாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மிகப்பெரிய புத்தக பிரியர்கள். இருந்தும் அந்த சமூகத்தை வாட்டி வதைக்கும் ஒன்று தற்கொலை. மன வெறுமையை தாங்க முடியாமல் அன்றாடம் யாரோ ஒருவரின் தற்கொலை சம்பவிக்கிறது.

இன்று அமைதியின் சின்னமாக விளங்கும் ஜப்பானின் கடந்த காலம் ரத்தக்கறை படிந்தே காணப்படுகிறது. சீனாவின் நின்ஜாங் பகுதியில் அவர்கள் நடத்திய மனித வேட்டை கொடூரமானது.

ஜப்பானின் ஹைக்கூ கவிதைகள் மிக பிரபலமானவை. விவசாயிகள் அதை இயற்றுவதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அங்கே முடி மன்னர்களை இன்றளவும் கடவுளாக வணங்கும் வழக்கம் உண்டாம். இரண்டாம் உலகப்போரின் பொது மன்னராக ஹிரோஹிட்டோ இருந்தார். போரை விரும்பாத மன்னர் எனினும் ஜெனரல் டோஜோவின் கைங்கர்யத்தால் போர் வலுத்தது.

எப்படி ஹிரோஷிமாவை தாக்க அமெரிக்கா முடிவெடுத்தது என்பது தெரிந்த விஷயம். மான்ஹாட்டன் திட்டம் மூலம் இதெற்கெல்லாம் முன்பாகவே அணு குண்டை தயாரிக்க அமெரிக்கா முனைப்பாக இருந்தததாம். இது போன்ற விஷயங்களில் அமெரிக்காவின் முனைப்புதான் நமக்கு தெரியுமே!

லிட்டில் பாய் என்ற குண்டு போடப்பட்ட தருணத்திலிருந்து இன்று வரை ஜப்பானின் மாற்றங்கள், அவர்களின் வேதனைகள், போராட்டங்கள் இதை விவரித்து செல்கிறது கட்டுரை. கொத்து கொத்தாய் மனிதர்களை (~2 லட்சம் )கொன்று போட்ட அந்த சம்பவம் பல தலைமுறைகள் தாண்டியும் அவர்களை வாட்டி வதைத்தது. கதிரியக்கம் மீன்களை, புற்களை , பறவைகளை, வாழ்க்கையை, அமைதியை அனைத்தையும் சில நிமிடங்களில் அழித்து சென்றது.

எக்காலத்திலும் போரின் கொடுமைகள் ஆட்சி பீடத்தில் இருப்பவர்களை தொட்டு பார்ப்பது கூட இல்லை. இன்று அங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் எல்லாவற்றையும் பதிவேற்றி வைத்துள்ளனர். ஹிரோஷிமா அமைதி பூங்கா என்ற பெயரில் அது அமைந்துள்ளது. சடாக்கோ சிஷாகி என்ற சிறுமியின் கதையும் எப்படி காகித நாரைகள் இந்த உலகின் சமாதான சின்னமாக மாறியது குறித்தும் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

- ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது என்ற கட்டுரையிலிருந்து

This is about travel stories from S.Ra. One is about Japan and Hiroshima. Other is about Walden lake and Henry David Thoreau who spent two years of his life near the bank of that lake in Massachusetts! How war had derailed and devastated Hiroshima and how people had overcome that and how Japan committed major blunders during their war on China are all explained. That leads to loads of books to read further. Now it leads to the question, how war can ever be answer to anything.... Hiroshima peace memorial is definitely a place worth visit to understand what is the ordeal that they had undergone...
Profile Image for Anitha Ponraj.
280 reviews45 followers
November 25, 2020
நிலம் கேட்டது கடல் சொன்னது

எஸ். ராமகிருஷ்ணன்

பயண புத்தகங்கள் எனக்கு மிகவும் பிரியமானவை.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலுக்கு பலியான ஹிரோசிமாவையும், அதைச் செய்த அமெரிக்காவின், அமைதியான வால்டன் ஏரிக்கும் ஒரே புத்தகத்தில் நாம் பயணிக்கிறோம் எஸ். ராவின் வார்த்தைகளில்.

" ஹிரோசிமாவில் மணி ஒலிக்கிறது"

என்று ஜப்பானுக்குள் நுழையும் நாம் கதிர்வீச்சின் கோரப்பிடியில் சிக்கி மனிதர்களின் முயற்சியில் மீண்டு எழுந்த ஒரு நகரத்தின் விடாமுயற்சியை காணமுடிகின்றது. "இக்கிகாய்" புத்தகம் மூலம் மிக அமைதியான ஜப்பானை கண்ட எனக்கு இரத்தக் கறை படிந்த அதன் வரலாற்று பக்கங்கள் புது அனுபவமாக இருந்தது. அணுகுண்டு வீச்சால் அடைந்து துயரங்களை வாசிக்கும் பொழுது என்னையும் அறியாமல் விழிகளில் இருந்து கசிந்த கண்ணீரோடு இதுபோல் இனி ஒரு சோகம் நிகழக்கூடாது என்ற பிரார்த்தனையும் சேர்ந்து கொண்டது. ஜப்பானியர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் காண முடிகிறது. ஜப்பானுக்கு நிச்சயம் பயணம் செய்து ஹிரோசிமா சமாதான பூங்காவை காண வேண்டும் என்ற உறுதியுடனும், கணத்த இதயத்துடனும் முதல் பாகம் முற்றுகிறது.

"புல்லினும் சிறிது"

முதல் பாகத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இரண்டாம் பாகம் இயற்கையோடு காலார அமெரிக்காவின் வால்டன் எரிக்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.ஹென்றி டேவிட் தோரோவின் வாழ்க்கையில் முக்கிய பக்கங்களில் இங்கு வாழப்பட்டவை என்பதை காண முடிகிறது.இயற்கை மீதும் நடைபயிற்சியிலும் அதிக ஆர்வம் கொண்ட எனக்கு இரண்டாவது பாகம் எனக்காகவே எழுதப்பட்டது போல் தோன்றியது. அவர் வார்த்தைகளில் நடந்து வந்த இடங்களுக்கு நேரில் சென்று நடக்க ஆசை தோன்றுகிறது.

பல புத்தகங்கள், பல திரைப்படங்களின் குறிப்புகள் புத்தகம் முழுவதும் நிறைந்துள்ளது.

எஸ். ரா வின் எல்லா புத்தகங்களையும் வாசிக்கும் ஆர்வம் இந்த புத்தகம் வாசித்த பின் தோன்றுகிறது.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.