Works, such as the novels Crime and Punishment (1866), The Idiot (1869), and The Brothers Karamazov (1880), of Russian writer Feodor Mikhailovich Dostoyevsky or Dostoevski combine religious mysticism with profound psychological insight.
Fyodor Mikhailovich Dostoevsky composed short stories, essays, and journals. His literature explores humans in the troubled political, social, and spiritual atmospheres of 19th-century and engages with a variety of philosophies and themes. People most acclaimed his Demons(1872) .
Many literary critics rate him among the greatest authors of world literature and consider multiple books written by him to be highly influential masterpieces. They consider his Notes from Underground of the first existentialist literature. He is also well regarded as a philosopher and theologian.
பொதுவாகவே " இவரைப் போல " என்னும் வாக்கியங்களை எல்லாம் வெறுக்கப் பழிகியவனாய் இருந்து வருகிறேன். ஏனென்றால், எப்போதும் " எனக்கு " என்ற வாக்கியங்கள் உணர்ச்சிகரமிக்க ஒன்றில் தான் வெளிப்படும். கற்பனைகளுக்கும், அறிவுசார்ந்த சிந்தனைகளுக்கும் உணர்ச்சி ஒரு தடையல்ல, ஆனால் குறைபாட்டை கொடுத்து விடும்.
தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக படிக்கும் போது, இவரது வாழ்வின் மேல் தான் மோகம் அதிகரிக்கிறது. இருள் மட்டுமே செல்லும் இடமெங்கும் சூழ்கிற வண்ணம் இருக்கும் இவர் வாழ்வு, அங்கே, உண்மையில் ஒரு ஒளி இருக்கும், ஆனால் தேடி அடைய தான் இவருக்கு விருப்புமில்லை போலும்.
இவரைப் பற்றி; ஒரு குடிகார தகப்பன்; அடிவாங்கி இறக்க நேரிடும் காசநோயால் அவதிப்படும தாய்; சகோக்களும், மனைவியும் ஒரே சமயத்தில் வானம் தாண்டி போனார்கள; பிறந்த குழந்தையும்கூட தான்; நிறைவுக்கு அதிகமான சிறை வாழ்வு; கடன்காரர்கள் தொல்லை; மரண தண்டனை கைதி அனுபவம்; இவ்வளவு இருந்தும்; அவருக்கு நம்பிக்கை கொடுப்பது, அவர் நம்பும் கடவுள் தான்; சிலையோ, மந்திரமோ அல்ல; வெறும் ஒற்றை வர்த்தை அது தான் அன்பு, அது தான் கடவுள். இந்த மனிதனைப் போல இன்னல்களும், இருள் சூழ்ந்த வாழ்வும் ஒரு முறையெனும் வாழவேண்டும்.
சரி, கரமசோவ் சகோதரர்கள் என்னும் இவருடைய Masterpieceக்கு வருகிறேன். இதனை வாசிக்க இரண்டு மாதங்கள் ஆகிப்போனது; சில தருணங்களில் வேண்டுமென்றே பொறுமையாக வாசித்தேன்.
கரமசோவ் - தந்தை என்ற உறவுமுறைக்கு, பொருளுக்கு முரண்பாடான குணாதிசயங்கள் கொண்டு மூன்று பிள்ளைகளை பெற்று விடுகிறான். ரகசியமாய், இன்னொரு பிள்ளையும் கூட. தீமித்ரி, அல்யோஷா, இவான்; மூன்று பேரில் முதலில் எனக்கு அல்யோஷாவுடன் தான் நெருங்கி பயணிக்க முடிந்தது. அல்யோஷா; தடுமாற்றம் கொண்டு பயணிக்கும் ஒரு ஞானி. இவனைப் பற்றி பார்க்கும் முன், மூத்த ஞானி ஜொசீமாவைப் பற்றி சொல்ல வேண்டும். இவருடைய டைரிக் குறிப்புகள், இவர் சொன்னவை, இவர் போதனைகள் என நிறைய ஒன்றாய் சேர்த்து ஒரு பெரும் பகுதியாக இதில் இருக்கிறது. அதில் என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு பகுதி, இவருடைய சிறு வயதில் இவர் சந்தித்த ஒரு கொலைகாரன் பகுதி. அவன் சமூகத்தின் பார்வையில் நல்லவன், செல்வ வளம் படைத்தவன். அந்த கொலையை செய்து விட்டு, அந்த ரகசியத்தை ஜொசீமாவிடம் கூறிவிட்டு உலகிற்கு நான் யாரென்ற உண்மையை சொல்லியாக வேண்டும். உண்மை என்னை விடாமல் துன்புறுத்துகிறது. இரத்தக் கறை வாடை உடலெங்கும் பரவி நாற்றம் எடுக்கிறது என குற்ற உணர்ச்சியில் வாக்குமூலம் போல கூறுவார். கொஞ்சம், மனபாரத்தை உணர்ந்தேன் என்று கூட சொல்லலாம். ஊரார் இதனை நம்பமாட்டார்கள். ஆனால், உண்மை வெளிச்சம் கண்ட பிறகு அது நேரம் பார்த்து நல்வினையை திருப்பி கொடுக்குமல்லவா! இதில், கடைசியாக, சாவின் விளிம்பில் அவர் ஒன்றை கூறுவார், உண்மையில் இந்த இடத்தில் தான் தஸ்தயேவ்ஸ்கி ஒரு மகத்தான கலைஞன் என்பதை என்னால் உணர முடிந்தது.
நான் தனித்தனியாக கூறி வந்தால் முதல் வாசிப்பில் கைவசமுள்ள வார்த்தைகளை வைத்து பிதற்றுகிறான் என்று தோன்றலாம். அதற்கு மாறாக, நான் இறுதி அத்தியாத்தில், நீதிபதியிடம் ரகிதின் கூறியதை இங்கே கூறுகிறேன்; மூன்று மகன்களையும், கரமசோவ்களின் சுபாவம் பற்றி; "இவ்வகை, கடிவாளம் இல்லாத கட்டுப்பாடற்ற ஆட்களுக்கு, மேலான நற்பண்புகள் இருப்பது போலவே, கீழ்த்தரமான குணங்களும் தேவைப்படுகின்றன. இதன் உண்மை! இயல்புக்கு மாறான இவ்வகை முரண்களின் இடையே ஊசலாடிக் கொண்டே இருப்பார்கள். ஒரே சமயத்தில் இரண்டு எல்லைகள்; இரு முரண்கள். அப்படி இல்லாமற் போனால், கரமசோவ்களின் வாழ்வே முழுமை பெறாது."
இதில் Masochism, Guilt trip, Revenge, Jealous பற்றி நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக, குற்றத்தன்மையை உணரும் தருணம், ஒவ்வொரு கதாபாத்திரமும் அதை எதிர்கொள்ளும் விதம் உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும், என்னை உருக்குலைத்தவர்கள்; ஸ்மர்டியாகோவ் மற்றும் இவான்; இறுதி அத்தியாயங்களில் இவர்களின் சந்திப்பு என்னை பலவித உணர்ச்சிகளை உணர வழிவகுத்தது.
கடவுள் யார்? சாத்தான் யார்? கடவுள் உண்மையா? சாத்தான் உண்மையா? இந்த எதிரெதிர் விடயங்களை ஒரு முக்கியமான தருணத்தில் மிகப்பிரமாதமாய் விரிவுப்படுத்தி எழுயிருக்கிறார். ஜீசஸின் வருகை, சாத்தானுடான பேச்சுவழக்கு என நவீனத்துவ பாணியை கையாண்டு அப்போதே எழுதியிருப்பது படிக்கையில் மனநிறைவை அளித்தது. இன்னும் சொல்லப்போனால், இந்த நாவல் தான் இன்று வரை எழுதப்பட்டு வரும் நவீனத்துவ நாவலுக்கு விதையாக இருக்கலாம். கண்டிப்பாக இருக்கலாம்.
இவான் - சாத்தானுடன் உரையாடும் கனம்; என் ஆழ்மனம் பதற்றம் அடைந்தது. சாத்தானின் சொற்கள்; * நான் என்னை நானே அழித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் கூடாது என்கிறார்கள்! 'நீ உயிரோடு இருக்க வேண்டும். நீ இல்லையென்றால் ஒன்றுமே இல்லை் உலகில் எல்லாமே அறிவு பூர்வமாகத்தின் நிகழும் என்றால் எதுவுமே நடக்காது. எங்களுக்கு நிகழ்வுகள் வேண்டும்' என்கிறார்கள். இது, சாத்தான் என்பதை விட இவானின் பேய்க் கனவு என்று தான் குறிப்பிட வேண்டும். இவான் - இவானுடன் இன்னொரு பிம்பம் உருவாக்கி பேசுகிறான். அவ்வளவு ஆழம் நிறைந்த பேச்சுவார்த்தைகள் என்றே சொல்லலாம்.
குரூசென்கா, கத்ரீனா; கரமசோவ்களுக்கு ஏற்ற பெண் கதாபாத்திரங்கள். இந்த மொத்த கதையும், குருசென்வினால் எனவும் சொல்லலாம். இவள் பார்வையில் இருந்து பார்க்கையில் சமூகத்தால் நாசம் செய்யப்பட்ட ஒரு பெண் ஒரு குடும்பத்தை தன் சுயலாபத்திற்காக நாசம் செய்கிறாள். அப்பாவையும், மகனையும் சச்சரவுக்குள்ளாக்கி ஒரு குடும்பத்தை அழிக்க முனைகிறாள். சமூகம் என்பது பல்வித, பலதரப்பட்ட குடும்பங்களால் ஆனது; ஒரு குடும்பத்தின் அழிவு என்பது பலவற்றறிக்கு வழிவகுத்துவிடும். மறவாதீர்கள்.
மெய்யாக, தஸ்தேய்வ்ஸ்கி ஒரு எழுத்தாளர் அல்ல; இவர் ஒரு தீர்க்கதரிசி என்று என்னால் கூறமுடிகிறது. எனக்குள் ஏற்பட்ட ஆழ்மன மாற்றங்களை என்னால் உணரமுடிகிறது. இனி இப்படித்தான் போல.. ' துன்பங்கள் வரும் போதெல்லாம், 'இதோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!' என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆயிரம் துன்பங்கள் வந்தாலும், தாங்கி நிற்பேன் நான். சித்திரவதை செய்யப்பட்டாலும், தனிமைச் சிறையில் தள்ளினாலும் அஞ்சாமல், 'இதோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,' என்று சொல்லிக் கொள்வேன். சாளரங்களற்ற இருட்டறையில் தள்ளினாலும் நான் கதிரவனைக் காண்பேன்! என் கண்களில் கதிரவன் படாவிட்டாலும் கதிரவன் இருக்கத்தானே செய்கிறான்! கதிரவன் வெளியில் இருக்கிறான் என்று உணர்வதே, உயிர் வாழ்வது தான்!... என்று சொல்பவன் தஸ்தயேவ்ஸ்கி. தீமித்ரி சிறைவாசத்தை அனுபவிக்கையில் இப்படி கூறுவான். நம்மை கொண்டு போய் செய்யாத குற்றத்திற்கு செய்தாய் எனக் கூறி இருட்டு அறை ஒன்றில் சூரிய ஒளியையும் மறைக்கப்பட்ட போதும், வெளியே இருக்கும் சூரியனை உணரும் இந்நிலை இருத்தலியல் சிக்கலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதை காட்டிலும் தத்துவார்த்த சிந்தனைகளை, ஆன்மீக கருத்துகளை 1880களில் ஆழமாக, உளவியல் ரீதியாகவும், மிகப்பெரிய ஒரு தளத்தில் பல கதாபாத்திரங்களுடன் பேச முடிந்திருக்கிறதை பார்க்கையில் எ��ுதி விடு; உண்மை உன் பக்கம் இருக்கிறது; வெளிச்சம் இல்லை என்று ஒதுங்கிவிடாதே; உண்மையை உன்னில் கண்டறி, இருள் படற, நீ வெளிச்சத்தை காண்பாய் என என்னை எழுத தூண்டுவதாக அமைதி கொள்கிறேன்; எழுதும் முனைப்பில்!!
இதில் குழந்தைகள், பருவம் தாண்டும் பையன்கள் வைத்து வரும் சில பகுதிகளை இன்னும் Consciousஆக படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதில், "மனித குலத்திற்காக நான் சாகவும் தயாராக இருக்கிறேன். என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி. நமது பெயர்களெல்லாம் சுவடில்லாமல் போகட்டும்!" என கோல்யா என்ற சிறுவன் சொல்வேன். முடிந்த இடங்களில் எல்லாம் அக ஒளியை உணர வைப்பதில், அதிலும், இந்தப். பகுதியிலும் முயன்றிருப்பது சவாலானதே மற்றும் கடைசியாக நிகழும் ஒரு சிறுவனின் மரண ஊர்வல நிகழ்வுகளை படிக்கையில், உண்மையில் கண் கலங்கிவிட்டேன். . . பாவச் செயல்களும், அநீதிகளும், பேராசைகளும் நம்மிடையே நிலவினாலும், நம்மைக் கடைத்தேற்றி மேலுயர்த்த ஒரு மகான் எங்காவது இருப்பார். அவர் சத்தியவனாக இருப்பார். சத்தியமோ சாகாது. அது ஒருநாள் நம்மை வந்தடையும். அப்புறம், முன்பு வாக்களித்துள்ளபடி, அது இந்த உலகம் முழுவதையும் ஆளும்.
- பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
தஸ்தயேவ்ஸ்கியின் வாசகனாக, தஸ்தயேவ்ஸ்கியின் கூற்றின் வழியே இவரை நான் காண்பது அவ்வளவு எளிதில் சொல்லிவிடமுடியாத ஒரு பேரமைதிக்கான உணர்வே!!
#சிவசங்கரன்
This entire review has been hidden because of spoilers.
The book that showed me how complex we humans are, It explores how we all got the potential to be both good and bad equally. The psychological utility of religion and spirituality in keeping us sane, if we rely only on the voice of pure reason (like ivan who represents mind and science) there is a risk that truth will drive us insane. If we are driven by the drives of the bodily impulses alone (like dimitri and Karamazov senior who represent the body) it will land us in trouble. Alyosha represents spirit and the path of spirituality saves his sanity even in the toughest of times. The grand inquisitor is one of the favourite part of book, Jesus Christ don't even speaks a single word but conveys everything that has to be conveyed.