ஒரு அசாதாரண மருத்துவ கண்டுபிடிப்பால் ஏற்படும் பின்விளைவுகளை சுற்றி இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. துப்பறியும் நிபுணரான நாயகி மற்றும் மருத்துவரான நாயகன் இருவரும் விளையாட்டாய் பந்தயம் போட, விபரீத சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். தொடர் கொலைகள் ஒருபுறமும், தெரியாத நோய் ஒருபுறமும் நம் நாயகனை ஆட்டிப்படைக்கிறது. சுவாரஸ்யமாக நகர்த்தபட்டிருக்கும் இக்கதையில் கொலையாளி யார் மற்றும் அதற்கான காரணம் என்ன என்று அறிந்து கொள்ள கதையின் நாயகனுடன் சேர்ந்து நாமும் பயணிக்கலாம் வாருங்கள்...
புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதல் எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் சுயநலமான செல்வந்தர்களிடமிருந்தே தொடங்கும்.
மரபணு மாற்றத்தில் ஆராய்ச்சியை முடித்த டாக்டரிடம் அவரின் குடும்பத்தைப் பணையமாக வைத்து அதன் நுணுக்கத்தைத் தன் வசமாக்கிய தொழிலதிபர் அதை மனிதர்களின் மீது செலுத்தியதின் பலன் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாயிரம் குழந்தைகளின் உடல்நல குறைபாடில் காணமுடிகிறது.
குழந்தைகளின் குறைபாட்டிற்குக் காரணமானவர்கள் தொடர்ந்து இறந்து கொண்டே வர அதற்குக் காரணமானவர்களைப் பிடிக்க முயலும் போது பிரிந்து கிடந்த டாக்டரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்ததுடன் அக்கொலைகளைச் செய்த டாக்டரின் உதவியாளனை “நல்காரியம்” என்ற அடையாளத்தை முதன்மைபடுத்திச் சட்டத்தின் முன்பு மறைத்துவிடுகின்றனர்.
இளையவர்கள் கதையை நகர்த்துவதற்காகவும் மறைந்திருந்த உண்மையைக் கொண்டு வரவும் கதையில் உலா வருகின்றனர்.
Lot of suspense and ended with unexpected twist.. Nice thriller in tamil.. Not looks like first novel for the author, tried really hard to make it interesting..