Jump to ratings and reviews
Rate this book

ராஜத்தின் மனோரதம்: (Rajathin Manoratham)

Rate this book
வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட், ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல. அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது.
வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்ட ஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாற வேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல், மணல், ஜல்லியைவிட அதிக அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தி இருக்கிறார் தேவன். நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால் 'ராஜத்தின் மனோரதம்' புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது!

Kindle Edition

Published January 24, 2019

5 people are currently reading
36 people want to read

About the author

Devan

50 books33 followers
தேவன் அல்லது ஆர். மகாதேவன் பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
18 (51%)
4 stars
10 (28%)
3 stars
6 (17%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Arvind Srinivasan.
328 reviews18 followers
February 4, 2021
The author decides to build a house. The problem faced by him in building it and the entire journey with minute details is explained in the book. Where the book scores great is in depicting the varied human emotions that one goes through while building a house. The way you understand human behavior in the journey is portrayed in apt manner. This makes the reader get completely involved and get reminded of the pains faced during their experience if any. Go for the book you will get to understand why building a house is herculean task through this light read. Highly recommended.

For thoughts in tamil please listen to below :
https://youtu.be/VbIwywVCvUA
Profile Image for Balaji Srinivasan.
148 reviews11 followers
August 15, 2023
வெகு நாட்களாக படித்து முடித்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த புத்தகம்.

ஆங்காங்கே தேவனின் நகைச்சுவை எட்டி பார்த்தாலும் மிகவும் சலிப்பை வரவழைத்தது என்றே சொல்ல வேண்டும். பக்கத்திற்கு பக்கம் வீடு எப்படி கட்டுகிறார்கள் என்ற வர்ணனை புத்தகம் எப்பொழுது முடியும் என்ற அலுப்பை வரவழைக்கிறது. ஒரு சிவில் என்ஜினீயருக்கு இந்த புத்தகம் நல்ல வாசிப்பாக இருக்கலாம்.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
April 5, 2013
வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் செய்துப்பார்! -ன்னு ஒரு பழமொழி. ஒரு வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமான வேலை என்பதை சொல்லியுள்ளார். ஒரு வீடு கட்டும்போது பலர் தங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும் சொல்லி குழப்புவது, கட்டி முடிப்பதற்குள்ளாக படும் அவஸ்தைகள் பற்றி ஒரு கதையாக எழுதியுள்ளார். கடைசி வரை கதாநாயகனின் பெயரை சொல்லாமலே விட்டுள்ளார்.

"உடையார்" நாவல் படித்து முடித்ததும் எப்படி கோவில்களின் மேல் ஒரு மரியாதை வந்ததோ அதேபோல் இந்த நாவலை படிக்கும் போதே எங்கள் வீட்டின் மேலும் ஒரு மரியாதை வந்தது. எங்கள் வீட்டை கட்ட, அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாருன்னு இப்ப நினைத்துப் பார்க்கிறேன்.
10 reviews
July 28, 2014
hands down winner among devans post sambhu saga. I had it read when I was kid during my house construction and could relate it day to day events there,the way main character gets teased by rajam is d masterpiece
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.