விவகாரத்தின் அறிமுகம் ட்விட்டர் என்கிற சமூக வலை தளத்தில் பாடகி சின்மயி ஐஏஎஸ் படிக்க நினைத்த தனது கனவு சமூகத்தில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாய் நிறைவேறாது போய்விட்டதாக 04 ஜனவரி 2011 அன்று சில ட்விட்டுகளை இடுகிறார். அவரது விசிறிகளில் ஒருவரான ஆர்த்தி உரையாடலில் இணைகிறார். ”தாழ்த்தப்பட்டவர்கள் என்று ’சொல்லப்படுகிறவர்கள்’ என்று எவரும் இல்லை என்று சின்மயி ஆங்கிலத்தில் கூறுகிறார். இந்தச் சொற்கள் சமூக விழிப்புணர்வுள்ள தமிழ் ட்விட்டர்களின் கவனத்தைக்கவரவும் அவர்கள் இவருடன் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்குகின்றனர். இது மிக நீண்ட விவாதமாகவும் இடையிடையே உரசலாகவும் விரிகிறது. விவாதம் கண்ணியமாகவே நடந்தாலும் சின்மயியின் பொது அறிவின் போதாமை, பிராமணீய விழுமி
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.