"கொரோனாவைரசுக்கு முந்தைய உலகை இந்தப் படைப்புகளில் துல்லியமாகச் சித்தரிக்கிறார் பேயோன். இக்கதைகளைப் படித்து அந்தக் காலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நமக்கு நாமே ஞாபகப்படுத்தலாம்." - ரிச்சர்ட் அட்டன்பரோ, ஹாலிவுட் இயக்குநர் நகைச்சுவைச் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், திரைக்கதைகள், மொழிப் பரிசோதனைகள். பேயோன் கடந்த 18 ஆண்டுகளில் எழுதிய பல நூறு படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. சமூகம், மண வாழ்க்கை, பெண்கள், தந்தைமை, மனித அரசியல், காதல், தத்துவம், சமூகம், இசை, சினிமா, மருத்துவம், இலக்கியம், கவிதை, புத்தகங்கள் என்று பல தலைப்புகளைத் தொடும் புத்தகம் இது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை மிக விரிவாக மெருகேற்றி செம்மை