"சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம் மனத்தை விட்டு வெளியேறிவிடுகிறது..!" - இவை கவிதை வரிகள். சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். சிரிக்கும் போது, முழு உடலுக்கும் நன்மை விளைகிறது. நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது. உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது. உங்களை மறந்து நீங்கள் சிரிப்பதினால் மூளை சுறுசுறுப்படையும். சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென சிரிக்கின்றன.