பெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய கேட்டகிரி ஐந்து வகை ‘இர்மா’ சூராவளி , கதை நாயகன் பரணி வசிக்கும் ஃபிளோரிடாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் நாளில் தொடங்கும் இந்த நாவல் அவனுடைய அகப் போராட்டமாக மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி, அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றி, அவர்களின் பாசங்குகளைப் பற்றி, அந்த நிலத்தின் அரசியல், இந்தியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பற்றி மூலக் கதையிலிருந்து விலகாமல் கதையினூடே பதிவு செய்துபோகும் நாவலாக விரிகிறது.