ஒரு காதலர், தன் காதலியை தேடி மனைவியின் ஆசியோடு நியூயார்க் செல்வதே இக்கதையின் கரு. காதலியை தேடி அலையும் காதலனின் ஏக்கமும், மனைவியை விட்டு தர முடியாமல் புலம்பும் கணவனின் கலக்கமும் ஒரு சேர பெற்றிருப்பவர் நம் கதாநாயகன். இக்கதையில் காதல் மாறுபட்ட கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. காதலில் ஜெயித்தால் வாழ்க்கையில் தோற்று தான் ஆக வேண்டுமா?. இரண்டிலும் ஒரு சேர வெற்றி கிடைக்காதா? தன் வாழ்வில் நடந்த, ஆளையே புரட்டி போடும் சம்பவங்களை ஒரே நாளில் அதுவும் காதலர் தினத்தன்று,ஜெசிகா நமக்கு கூறுவதே இக்கதை. வாருங்கள் என்னோடு கைகோர்த்து இக்கதைக்குள் பயணிக்கலாம்!!.