Jump to ratings and reviews
Rate this book

NANO: நேநோ

Rate this book
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியான ஒரு கரு. சாரு நிவேதிதா

374 pages, Kindle Edition

Published February 7, 2019

7 people are currently reading
10 people want to read

About the author

Charu Nivedita

84 books178 followers
Charu Nivedita is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of the Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (31%)
4 stars
3 (18%)
3 stars
6 (37%)
2 stars
2 (12%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for இரா  ஏழுமலை .
141 reviews8 followers
July 29, 2022
சாரு நிவேதிதா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நேநோ இதைப் போன்ற கதைகளை எழுதுவதற்கு உலகத்திலேயே மூன்று நான்கு பெயர்கள் தான் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது நான் லீனியர் ட்ரான்ஸ்கிஸ்வ் பாணியில் சிறுகதைகளை எழுதுவதற்கு தமிழில் சாருவை விட்டாள் வேறு ஆளே இல்லை என்று அடித்து கூறலாம். அதே நேரத்தில் வழக்கமான சிறுகதை பாணிகளையும் கையாண்டு இருக்கிறார் ஆனால் சாரு எதார்த்தவாதத்தின் காலம் முடிந்துவிட்டது என்று கருதுகிறார். அவரின் கதைகள் வெறும் குப்பை என்றும் புரியவில்லை என்றும் பல்வேறு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும் அவருக்கு தினந்தோறும் கடிதங்கள் சென்று கொண்டு இருக்கிறது அதற்கு அவர் தனது சிறுகதையின் மூலமே பதில் அளிக்கிறார். " கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வு" என்ற சிறுகதையில் இப்படி எழுதுகிறார் உனக்கு என் எழுத்து புரிய வேண்டுமா கேள் நீ தூரத்துணி துவைத்திருக்கிறாயா குழந்தையின் மூத்திரம் மற்றும் பீத்துணியை அலசி இருக்கிறாயா இப்படி போய் கொண்டே இருக்கும். இதைப் படிக்கும் ஒரு வாசகம் உடனே அருவருப்புக்கும் முகசொலிப்பிற்கும் ஆளாகி சாருவின் மீது வசைகளை பொழிய தொடங்கி விடுகிறான். ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் சிந்தித்து பார்ப்பது கிடையாது. சானிடரி நாப்கின் எல்லாம் வராத அந்த காலத்தில் குழந்தை பிறந்தவுடன் அந்த தூர துணியை துவைப்பதற்காக வண்ணார் சமூகத்திலிருந்து வருவார்கள் இந்த இடத்தில் அப்படியான மனிதர்களின் வாழ்க்கையை தான் நாம் தொடர்பு படுத்தி கொள்ள வேண்டுமே தவிர தூர துணியின் அருவருப்பை அல்ல என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். உலகத்திலேயே இப்படி ஒரு சிறுகதை வந்திருக்க வாய்ப்பே இல்லை.

"நட்சத்திரங்களிடம் இருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணம் தின்னிகளும் "

Necrophilia பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் கதை மெதுவாக தான் இருக்க முடியும். தமிழ் சமுகத்தை ஃபில்ஸ்டன் சமுகம் என்று சாரு அடிக்கடி சொல்வார் அதேபோல necrophiles என்பதை அலசி ஆராய்ந்து இருப்பார் வாசகனுக்கான இடம் இதில் நிறையவே இருக்கும்... இந்த ஒரு கதையில் இருக்கும் விஷத்தை படிக்கவே ஆறு மாதங்கள் ஆகலாம். மற்ற கதைகள் எல்லாம் சாதாரண கதைகள் தான். நம் சமுதாயத்தில் ஒரு விசயத்தை பற்றி பேசாமல் கமுக்கமாக இருந்துவிட்டால் அங்கே எந்த குற்றங்களும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்யும், அவ்வாறான ஒதுக்கப்பட்ட குற்றங்கள் பற்றி பேசுபவர்களையும் சேர்த்து புறக்கணிப்பார்கள் அவர் மோசமான ஆபாசமான ஆளாக சித்தரிப்பார்கள் ஆனால் உண்மையில் அவர்கள் தான் அவ்வாறு இருப்பார்கள் இதுவே சாரு விற்கும் நடக்கிறது...

" பிள்ளைபூச்சி"

குடும்ப அமைப்பு இன்று எவ்வாறு பைத்தியக்கார விடுதி போலவும் அளவற்ற வன்முறைக்கான களமாகவும் உள்ளது என்று சித்தரிக்கும் சிறுகதை . ''இந்த இடத்தில் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணம் தின்னிகளும்" என்ற சிறுகதையில் தொடர்பு படுத்தி கொள்ளவும்.

"அவ்வா " எனக்கு பிடித்த கதை அந்த அவ்வா பழைய சோறு வாங்கிகொண்டு வந்து காயவைத்து பிறகு தேவைப்படும்போது சமைத்து கொள்ளும் அப்போது அந்த சோறு காயிம் போது அப்படி ஒரு நாத்தம் அடிக்குமாம் பீ நாற்றம் எல்லாம் பீச்சை எடுக்க வேண்டும் என்று வரும் அப்போ என்ன இவன் பீ என்று எழுதுகிறார் இவர் எழுத்தும் வெறும் பீ என்று தமிழ் இலக்கிய நல்லுலகு ஆடும், ஆனால் மலம் என்று எழுதினால் சந்தனமாக மணப்பதாக நினைப்பார்கள் சரி அதை விடுங்கள். அப்போ அந்த அவ்வாவின் வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்றும் சமுக அவலத்தையும் நல்ல வாசகன் சென்றடைவான்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.