காணாத கணங்கள் மாறாத மனங்கள் 1945 சுதந்திரப் போராட்டம் வலுப் பெற்றிருந்த காலம்.தமிழகத்தில் வீரத்திற்கு பேர் போன சிவகங்கை சீமை..வேலு நாச்சியாரும் மருது பாண்டியர்களும் வளர்த்து விட்டிருந்த வீரம் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டிருந்தது.. அந்த ஜமீனின் அரசாட்சியில் மக்கள் அனைவருமே தங்கள் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களை அர்பணித்திருந்தனர். வீரமும்,போரும் ,சண்டையும், வாழ்வும், சாவும் எதுவாயிருப்பினும் அது காதலோடு இணைந்ததாகவே இருக்கும் இம்மானிட பிறவியில்..அதுபோலவே நம் சுதந்திர போராட்டமும் பல காதலையும் காதலர்களையும் நிச்சயம் சந்தித்திருக்கும்.. அதில் எனது கற்பனையான அலர்மேல் மங்கை-உடையத்தேவரின் காதலோடு இக்களத்தில் பயணிக்கப் போ