தமிழ் சினிமாவின் நிஜங்கள் பற்றிய என் கட்டுரை தொடர். தமிழ் ஹிந்துவில் வெளி வந்து பரந்து பட்ட வாசகர்களை சென்றடைந்தது. நிஜமாகவே நிறைய வாசகர் கடிதங்களை கொண்டு வந்த தொடர் இது. தமிழகத்தில் மூலை முடுக்கில் எல்லாம் தமிழ் சினிமாவின் மீதான ஆர்வம் கொண்டவர்களிடம் கொண்டு சேர்ந்த்த கட்டுரை தொடர். இதில் கொஞ்சம் கூட கற்பனை என்பதே கிடையாது. வேண்டுமென்றால் உண்மைகளை மறைத்து எழுதியிருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. தமிழ் சினிமாவைப் பற்றிய பல கோணங்களில் இது என் கோணம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.