ஆதிகாலத்தில் ஆண் பெண்ணின் பிரதான கடமை சந்ததிகளை விருத்தி அடையச் செய்வதுவாகவே இருந்தது, தாய்வழிச் சமூகத்தில் தாயானவள் தன் குடும்பத்தில் யாரைப் புணர ஆசைப்படுகிறாளோ அவனைத் தடையின்றி புணரலாம். அவன் தாயின் சோத்து. அப்பா, மகன், அண்ணன், தம்பி, போன்ற உறவுப் பாகுபாடுகள் எல்லாம் அப்போது எதுவும் கிடையாது. அனைவரும் ஆண் பெண் எனும் பாலின நிலைகளை மட்டுமே கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் அதே குடும்பத்தில் இருக்கும் பெண் தன்னுடைய தாய் விரும்பும் ஒருவனின் மீது ஆசை கொள்ளுதலும் புணர்தலும் அவ்வளவு எளிதில் ஆகாது. அவனே இப்பெண் மீது ஆசை கொண்டாலும் தாயின் கட்டளையை மீறி அவனால் ஏதும் செய்யவியலாது. அப்படி அவள் ஆசைப்பட்டவனோடு புணர வேண்டுமெனில் அக்குடும்பத்தில்
முற்றிலும் வேறுபட்ட ஒரு அழகான காதல் கவிதை தொகுப்பு. இதில் சில கவிதைகள் ஏற்கனவே கார்த்திக்கின் முகப்புத்தகத்தில் படித்து இருப்பினும் பல கவிதைகள் மனதுக்கு நெருக்கமானவையாக இருந்தது.
மனம் நினைவு கூறும் முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இதில் இருக்கும் பல்வேறு கவிதைகள் பல நிகழ்வுகளை நினைவு கூறுகிறது.
காதலே கதிமோட்சம் - காதலே முழு கதியும் கடைசி மோட்சமும்.
அத்தனையும் அருமையான கவிதைகள், ஏற்கனவே கார்திக் இன் முகப்புத்தகத்தில் வாசித்த Type கவிதைகள் என்பதால் தெரிந்த பாதையால் திரும்ப போவது போன்ற உணர்வு. எதிர்பார்த்து தான் வாங்கினேன் ஞாபகத்துக்காக. அந்த மனுசனின் பொல்லாத குணமே எமக்காகவே எழுதியது போல இருக்கும்.