ஆண்டாண்டு காலமாக எழுதப்படும் பெண்ணைக் கொடுமைப்படுத்தி அதை ரசித்த பிறகு திருந்தி அவளையே மணக்கும் கதாநாயகனின் கதை தான் இதுவும்.
“சிறுத்தை.. சிறுத்தை...” என்று பக்கத்திற்குப் பக்கம் இடைவெளி விட்டு அவனைப் புகழந்து மனிதனில் இருந்து விலங்காக மாற்றிய பெருமையை என்னவென்று சொல்ல ..
ஆசிரமத்தில் வளர்ந்த தோழிகள் இருவரையும் வெறுப்பால் பிரிக்க நினைத்த ஆகாஷின் எண்ணம் நிறைவேறினாலும் அதன் தாக்கத்தில் அவனுமே பாதிக்கப்படுகிறான்.
சிறுவயதிலே பாலியல் தொல்லைக்கு ஆளான நிலவழகி மனதாலும் ஒடுங்கி போய் வானதியை தவிர எதைப் பற்றிய தெளிவும் இல்லாமல் இருக்கிறாள்.
நவீன் வானதியின் மேல் கொண்ட காதலால் அவள் சொல்லும் அனைத்திற்குத் தலையாட்டி திருமணத்திற்குப் பிறகு நிலவழகியை தன் வீட்டிற்கே தங்க அனுமதியளிக்கிறான்.
நவீனின் அண்ணான ஆகாஷுடன் நிலவழகிக்கு ஏற்கனவே தகராறு இருப்பது தெரியாமல் போனது ஆகாஷுக்கு சாதகமாகி அவளை மனதால் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற செய்தவன் தானே தேடிய அலைய வேண்டிய சூழலும் உண்டாகி விபத்தில் அடிப்பட்டுக் கோமாவில் இருக்கும் நிலவழகியை கண்டடைகிறான்.
நிலவழகியை தேடும் போதும் தான் தன் மனதில் ஆழப் பதிந்து போய் இருக்கிறாள் என்று தெரிந்த ஆகாஷுக்கு ஐந்து வருடமாகத் தன்னுடன் ராங்கால் நம்பராகப் பேசி நட்பை வளர்த்தவளும் அவள் தான் என்று தெரியவரும் போது அவளுடன் தனக்கான பந்தத்தைத் திருமண உறவின் மூலம் இறுக்கி கொள்கிறான்.