நித்யா... பக்கத்து வீட்டு பெண்ணை போன்ற தோற்றம்... சுட்டி பெண்... அவள் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே கலாட்டாவிற்கு பஞ்சம் இருக்காது. சில நேரங்களில் மொத்தமாக வெறுப்பேற்றி நமக்குள் இருக்கிற மிருகத்தை கூட தட்டி எழுப்பும் அளவிற்கு திறமைசாலி. ஒரு வழிபோக்கனா பாத்தா திமிர் பிடிச்சவளா தெரியலாம். பழகிட்டா ஒரு நிமிஷம் விடாம விதவிதமா உங்களை காதலில் கண்டிப்பா தள்ளி விடுவாள்...ஒரு புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனித்தில புதுமுகம். கொஞ்ச நாளாய் அவள் அவளாய் இல்லை. உலக வரைமுறையில பெரிய அழகி எல்லாம் இல்லை... ஆனா உங்க கண்ணுக்கு பேராழகியா தெரியலாம்...அப்படி ஒரு வசீகரிக்க கூடிய குணம். கார்த்திக்... நம்ம ஹீரோ.. கெட்டிக்காரன்.. நித்யா வேலை பாக்குற அதே நிறுவனித்தில டீம் லீட்.
காதலை வெளிப்படுத்தாத வரை மட்டுமே பட்டாம்பூச்சியின் துடிப்பு, மனமயக்கம், புத்தியின் குவியத்தை அதை நோக்கி மட்டுமே நிறுத்துவது என்று பல மாற்றங்களை உண்டாக்கும். வெளிப்பட்ட பிறகு அது ஒரு சாதாரண நிகழ்வாகி எவ்வகை முடிவை நோக்கி அந்தக் காதல் சென்றாலும் மனம் தன்நிலையில் நின்றுவிடும்.
தன் கஸினுக்கு நிச்சயம் செய்த கார்த்திக் தான் தன்னுடன் வேலை செய்பவனும் மனம் தற்போது தான் காதலை அவனின்பால் செலுத்த துவங்கியிருப்பதை அனுபவித்துக் கொண்டு இருக்கும் நித்யாவிற்கு இந்தச் செய்தி துன்பத்தைக் கொடுத்தாலும் அவனுடனான நட்பை இழக்க முடியாமல் தடுமாறுகிறாள்.
அதுபோலவே கார்த்திக்கும், நித்யாவிடம் கொண்ட காதலை மறைத்து தான் தன் மனதை நந்தினியுடனான திருமணத்திற்குத் திருப்புகிறான். இருந்தாலும் மனம் சமன்பட மறுக்க, திருமண நாளின் முன்னிரவு தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த காதலை நித்யாவிடம் வெளிப்படுத்திவிட்டு ஓர் ஆசுவாசத்துடன் நந்தினியை மணக்கிறான்.
ரொமான்டிஸை பண்ணி காதல் உன்னதம் அப்படி இப்படி என்று சொல்லினாலும் இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் அடுத்தகட்டத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும் கள்ளகாதலில் முடியும் என்பதும் ஞாபகத்தில் வருகிறது.