நமது பாரத தேசத்தில் உலாவரும் கதைகளில் விக்கிரமாதித்தன் கதையும் ஒன்று. போஜராஜன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்று திரும்பும் பொழுது முப்பத்து இரண்டு படிக்கட்டுகளை உடைய புதுமையான சிம்மாசனத்தைக் கண்டு எடுத்தான். அதில் அவன் அமரப்போகும் பொழுது பதுமைகள் கதை சொல்லத் தொடங்கின. அவையாவும் விக்கிரமாதித்தனைப் பற்றியவை.