உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம். மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான். ஆனால், மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவன் கடவுள் என்கிறார்கள். எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான அவருக்கும் மூளை தேவைதானே? மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக.....மிக மிக மிக.....[இந்த ’மிக’வுக்கு நம்மால் வரம்பு கட்ட இயலாது] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது? அது உருவம் உள்ளதா, அருவமானதா? மூளையைத் தவிர்த்து வேறு ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா? அந்த ‘ஏதோ’ எப்படியிருக்கும்