ஈழத்தைப் பற்றி வரலாறு மற்றும் அரசியல் குறித்து பல ஆயிரம் புத்தகங்கள் வந்திருந்தாலும், அவற்றை நீங்கள் வாசித்து இருந்தாலும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களால் விரும்பப்படும் என்ற நம்பிக்கையுண்டு. காரணம் இதன் ஆதாரத் தகவல்கள் என்பது உண்மையோடு தொடர்புடையது. பாரபட்சமின்றி ஒவ்வொரு நிகழ்வுகளையும் இதில் எழுதியுள்ளேன். ஈழம் என்ற தீவு எப்படி உருவானது என்பதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த மாற்றங்கள், இனக்குழுக்கள் தொடங்கி நாகரிகம் பெற்று மன்னர்கள் ஆண்டது வரைக்கும் படிப்படியாக விவரித்துள்ளேன். இலங்கையின் சுதந்திரத்திற்கு முன் அதற்குப் பின் நடந்த வரலாற்று நிகழ்வுகளைச் சுவராசியமாகச் சொல்லியுள்ளேன். ஈழ வரலாறு பேசும் எந்தப் புத்தக
ஈழ வரலாற்றை இதை விட சிறப்பாக தொகுக்க முடியாது...ஒரு தமிழ் எழுத்தாளர் இந்த அளவுக்கு ஈழ வரலாறை ஆராய்ச்சி செய்து எழுதி இருப்பது மிகச்சிறப்பு. ஈழ வரலாற்றை அறிய வேண்டிய அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.