நல்லதொரு காதல் கதைக்கு ஏற்ற களம், கிரைம் மன்னரிடம் சென்றதால் கொஞ்சம் சஸ்பென்ஸ், ஒரு கொலை என்ற பாதையில் செல்கிறது.
வேலை தேடி அலையும் ஆஷாவிற்கு ஒரு கம்யூட்டர் நிறுவன முதலாளியை காதலிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதற்காகக் கொடுத்த பணத்தைப் பாலியல் தொழிலில் இருந்து விடுபட்டுப் புதுவாழ்வு வாழ விரும்பும் தோழிக்கு அளித்துவிடுகிறாள்.
தன்னைத் தீண்ட விரும்பிய தாதாவை கொன்ற ஆஷா பெயர் மாற்றித் தமிழ்நாட்டில் இருப்பதைக் கண்டுபிடித்த போலீஸ் அவன் தீவிரவாதியாக இருந்ததால் அதற்காக அவார்ட் கொடுத்து இவளை கௌரவிக்க விரும்புகிறது.
உயிர் போக இருக்கும் நேரத்தில் கூடத் தன்னிடம் கொடுத்த பொறுப்பைக் காப்பாற்ற போராடும் ஆஷாவிற்கு அதன் பிறகு அனைத்தும் நல்லதாகவே நடந்தேறுகிறது.
ஆஷாவை திருமணம் செய்ய விரும்பிய கம்யூட்டர் நிறுவன முதலாளியான ஹரீஷ் அவளைச் சோதிக்கவே தன்னைக் காதலிக்கும் வேலையை அவளிடம் கொடுத்தது தெரியவருகிறது.