Jump to ratings and reviews
Rate this book

தொ.பரமசிவன் நேர்காணல்கள்

Rate this book
முன்னர் 'செவ்வி' என்ற பெயரில் வெளிவந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்த நேர்காணல்களுடன் விகடன்,தடம், தீராநதி ,தமிழ் ஒப்புரவு ,கூட்டான்சோறு இதழ்களில் வெளியானவற்றையும் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட தொகுப்பு இது.

160 pages, Paperback

Published January 1, 2019

14 people are currently reading
46 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books230 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (72%)
4 stars
5 (15%)
3 stars
4 (12%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Sanjeev Duglas.
89 reviews3 followers
April 18, 2021
மிக பரந்த அறிவுடைய மனிதரின் எழுத்துக்கள் பல தெரியாத விடயங்களை சொல்லித்தந்தன.
Profile Image for Vaideki Thayumanavan.
61 reviews
June 4, 2025
ஐயா தொ.பரமசிவன் அவர்களுடைய கருத்தியல் தளத்தை அவருக்கே உரிய இயல்பான பாணியில் வெவ்வேறு இதழாளர்களுக்குக் கொடுத்த நேர்காணல்களின் தொகுப்பே இந்த நேர்காணல்கள் புத்தகம்.

பாளையங்கோட்டையில் பிறந்த பண்பாட்டியல் ஆய்வாளரான ஐயா தொ.பரமசிவன் தன் மாமாவின் அடியில் இருந்து தன்னை தப்பிக்கவைத்துக்கொள்ளப் புகுத்த இடம் ஒரு நூலகம். அங்கு அவர் வாசித்த புத்தகம் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகமான 'Uncle Tom's cabin' என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பு என்பதனை நம்மிடம் பகிர்கிறார். அமெரிக்கா போர் மூள்வதற்கும் மற்றும் அடிமை ஒழிப்பிற்கும் அந்தப் புத்தகம் காரணமாக இருந்தது என்பதனை அவரால் அந்த சிறு வயதிலே அறிய முடிந்தது. அதுவே அவரை சமூகத்தில் அக்கறை கொண்ட ஒரு மனிதராகச் செதுக்கியிருக்கிறது என்பதை நாம் இந்தத் தொகுப்பில் வாசிக்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும்.

தன்னை 95 சதவிகிதம் பெரியாரிஸ்ட் என்று ஒப்புக்கொள்ளும் தொ. ப. நம் கலை, பண்பாடு, இலக்கியம் என்று வரும்போது பெரியார் கொண்ட கருத்துக்களிலிருந்து தான் வேறுபடுவதாகக் கூறுகிறார். அதிகாரத்திற்கு எதிரான, திராவிட வேர்களை உடைய நாட்டார் மரபு ஆய்வில் தான் எப்படி ஈர்க்கப்பட்டார் என்பதனை மிக விரிவாக நாட்டார் பண்புகள் மற்றும் பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டாகக் கூறி விரிவாக விளக்குகிறார். வைதீக சமயங்கள் தனக்குச் சாதகமாக, தன்னை இங்குத் தக்கவைத்துக்கொள்ளச் சில நாட்டார் பண்புகளைத் தன்வயமாக்கிக்கொள்ளும் முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் இந்தத் தொகுப்பிலிருந்து.

தமிழ் பண்பாட்டியல் ஆய்வு தொ.ப ஐயாவின் காலத்தில் சற்று கடினமாக இருந்தது என்பதைக் கூறி மேலும் இன்னொரு அதிர்ச்சி தரும் தகவலை நம்மிடம் பகிர்கிறார். அது: 1857இல் தொடங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில் 1914இல் தான் தமிழுக்கென்று பாடத்திட்டம் தொடங்கப்பட்டது என்பது. அப்போது தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்வதற்கு அக்காலச்சூழல் எவ்வளவு கைகொடுத்திருக்கும் என்பதனை நாமே புரிந்து கொள்ளலாம். 1960 ஆண்டு வரை முனைவர் படத்திற்காக ஆய்வுகள் மேற்கொண்டாலும், அந்த ஆய்வேடுகளைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தான் சமர்ப்பித்தார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல். இப்படி இருந்த சூழலில் கள ஆய்வு எப்படித் தன்னை போன்ற பண்பாட்டியல் ஆய்வாளர்களுக்குக் கைகொடுத்தது என்பதைச் சுவைப்படக் கூறியிருக்கிறார் தொ.ப. புத்தகங்களிருந்து நாம் கற்றுக்கொள்வதை விடத் தெருக்களில் இருக்கும் மக்களிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று அவர் சொல்லியிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.

இந்தி திணிப்புக்குப் பின்னால் இருக்கும் வலுவான அரசியலை நம்பும் தொ.ப. ''ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கூற்றை மக்கள் விரோதச் சித்தாந்தமாகக் கருதுகிறார். மதம் மாறுதலை ஆதரிக்கும் நம் நாடு ஏன் சாதி மாற அனுமதி தரவில்லை என்ற கேள்விக்கு தொ. ப. ஐயா அளித்திருக்கும் பதில் இன்றைய அரசியல் நடைமுறையை நன்கு விளங்க வைக்கிறது. உலகமயமாக்கல், நுகர்வு கலாச்சாரம் போன்ற நகர்வுகள் ஒரு நாட்டின் பண்பாட்டுக் கூறுகளை அழித்துக்கொண்டிருக்கிறது என்று தொ.ப. ஐயா கூறியிருப்பதை நாமும் உணர முடிகிறது. மேலும் பண்பாடு என்பது நிலம் சார்ந்தது, தொல்காப்பியத்தில் இருக்கும் இடைச் செருகல்கள், திராவிடக் கருத்தியல் இன்று வாக்கு வங்கி அரசியலாக மாறியிருப்பது, தமிழ் தேசிய அரசியலின் போக்கு, களப்பிரர் காலம் பற்றி ஒரு முன்னுரை, வேற்று நாட்டவரான கால்டுவெல் நம் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு, காஞ்சி மடத்தில் நடந்த ஊழல், அங்கு எழுப்பப்பட்டிருந்த அதிகாரம் போன்ற பல தலைப்புகளில் நமக்கு இருக்கும் கேள்விகளுக்கு நாம் விடை தேடலாம் இந்தத் தொகுப்பின் வழியாக.

'இருட்டறையில் வெளிச்சம் வரவேண்டும்' என்ற தலைப்பு கொண்ட நேர்காணல் இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நேர்காணலாக அமைந்தது. தொ.பரமசிவன் ஐயா கனடா பயணம் மேற்கொண்டபோது அ. முத்துலிங்கம் அவர்கள் செய்த நேர்காணல் அது. மிகவும் இயல்பாக, தொ.ப ஐயா அவர்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் விவரித்தபடியே அவர் பதில்களைப் பதிவு செய்திருப்பது நாமும் அந்தப் பயணத்தில் கலந்து கொண்டது போல ஓர் உணர்வைக் கொடுக்கும்.
Profile Image for Karthick.
369 reviews120 followers
February 23, 2021
ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்ட கேள்விகள் கொண்ட நேர்காணல் தொகுப்புதான் இந்த புத்தகம். பல விறுவிறுப்பான கேள்வி பதில்கள் மூலம் தொ.பரமசிவம் மானுடவியலின் எவ்வளவு முக்கியமான பொக்கிஷம் என்பது தெரியும்.

முதல் கேள்வியிலேயே தன்னை 95% பெரியாரிஸ்ட் என்கிறார். கலை, பண்பாட்டில் மட்டுமே தனக்கும் பெரியாருக்கும் இருக்கும் வேறுபாடு என்கிறார்.

பார்ப்பனியத்திற்கு எதிரான நாட்டார் மரபு,
சமணம் மற்றும் பவுத்தம்,
தொல்காப்பியா கூற்றுகளும் அதில் உள்ள இடைச்செருகல்கள்,
காஞ்சிமடம் பிராமணர்கள் எல்லாம் ஸ்மார்த்த மதம் சேர்ந்தவர்கள்,
ராபர்ட் கால்டுவெல் தமிநாட்டின் பங்களிப்பு,
பறையர் என்னும் கலைஞர்களின் வரலாறு,
பாகவதம் மற்றும் ஆழ்வார்கள்,
சாமியாட்டம் ஒரு நாட்டார் கலை (போர் நடனத்தின் எச்சப்பாடு),
பல்லாங்குழியில் உள்ள சமத்துவம்,
பாளையங்கோட்டையில் வரலாறு,
தாலாட்டு & ஒப்பாரி,
களப்பிரர்கள் பற்றி,
சித்தாந்த சைவமும் & பாசுபத சைவமும்,
வைணவமும், ஜனநாயகத்தன்மையும்,
அழகர் கோயில்


என்று பல பிரமிப்பூட்டும் அரிய தகவல்கள் மேலும் அறிய அடித்தளமாக உள்ளது. நிச்சயம் படிக்கவும் .
Profile Image for Mithun Chakrawarthi .
4 reviews3 followers
July 12, 2021
தொ.பா.வின் சில சொற்கள்

""இதில்தான் கடவுள் வேறு , தெய்வம் வேறு என்ற நிலைமையை வேறுபட்டு நின்று பார்க்கவேண்டும் . கடவுள் என்பது எஜமானன் . ராஜசிம்மாசனத்திலே உட்கார்ந்திருக்கிற எஜமானன் . தெய்வம் என்பது என்னோடு சமதளத்தில் பழகிக்கொண்டிருப்பது . எங்களுக்கு வேண்டிய வரம் தரவில்லையென்றால் நம்வீட்டுப் பெண்கள் தெய்வத்தை நோக்கி , உனக்குக் கண் இருக்கிறதா என்று கேட்பார்கள் . பெண்கள் கடவுளைச் சபித்து மண்ணள்ளித் தூற்றுவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன் . இதிலே சமத்தன்மை குறையாத உறவு நிலை உள்ளது . இதுதான் தெய்வத்துக்கும் அவர்களுக்குமான உறவு . ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வோர் சாதியினருக்கும் ஒரு கோயில் உண்டல்லவா ? அங்கே யாரேனும் ஒருவர் இறந்து போனால் அந்தக் குறிப்பிட்ட தெய்வம் கதவைச் சாத்திக்கொண்டு குளிக்காமல் உண்ணாமல் துக்கம் காக்கிறது . மாநகராட்சிப் பகுதியிலே எந்தச் சாதிக்குரியவர் இறந்துபோனாலும் அதற்குரிய கோயிலின் நடை சாத்தப்படுகிறது .""

அருமையான படைப்பு...
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Raghunath Mohanan.
25 reviews5 followers
March 5, 2021
எது உங்கள் பண்பாடு? எது உங்கள் நாகரிகம்? எது உங்கள் மொழி? மக்களின் மத்தியில் இருந்து ஆராய்ச்சி செய்யும் தொ.ப. விடம் பல்வேறு காலங்களில் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு.

நல்லா இருக்கு. நிறைய தெரிந்து கொள்ளலாம்.
Profile Image for Raja Guru.
34 reviews18 followers
March 19, 2019
தொ.பரமசிவன் , பண்பாட்டு அசைவுகள் , தெய்வம் என்பதோர் முதலிய நூல்களை எழுதியவர். தமிழர் வாழ்வியல் சடங்குகள் , முறைகள் , நாட்டார் வழக்காற்றியல் பற்றி அதிகம் பேசியும் எழுதியும் வருபவர்.
அவருடைய நூல்கள் எதுவாயினும் அவை தகவல் செறிவுள்ளவை என்பதால் , இந்த நூலும் அதில் ஒன்றும் விலக்கில்லை. பல நேர்காணல்களின் தொகுப்பதலால் பல செய்திகள் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வருகின்றது. இந்த நேர்காணல்களில் அவர் பல தகவல்களை கூறியிருப்பதால் , அதில் சில முக்கியமானவற்றை எழுதுகிறேன்.

இனி நூலில் இருந்து
சென்னை பல்கலைக்கழகத்தில் 1857-1914 வரை தமிழ் பாடத்திட்ட குழுவே கிடையாது. தமிழ்நாட்டில் இயங்கிவந்த பல்கலைக்கழகம் !
அழகர் கள்ளழகராக வேடம் போடுவதையும் , காரமடை ரெங்கநாதர் கோவிலுக்குள் இருளர்கள் தண்ணீர்ப்பையுடன் வந்து சுத்தம் செய்வதையும் எந்த ஆகமம் ஏற்கும் , மக்கள் ஏற்று கொண்டதால் ஆகமம் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை.
பழனி கோவிலில் முன்பு பூசை செய்தது பிற்பட்ட சமூகத்தினர் , ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் களவாளக இருந்த இராமப்பையன் இன்னொரு சமுகத்திடம் பிரசாதம் வாங்க விரும்பதலால் அங்கு நிலைமை மாறியது.
சபரிமலை , மேல்மருவத்தூர் எல்லாம் மத்யதரவர்கத்து ஆன்மிகம் . அடித்தள மக்கள் ஆன்மிகம் அல்ல , எளிய மக்கள் கனவில் ஒரு போதும் சிவபெருமான் வரமாட்டார் , குலதெய்வம் தான் வரும்.

பறையர் :
இறந்த விளங்களினுடைய உடலோடு தொடர்புடைய தொழில்களைச் செய்ததினாலே நரம்பு சார்ந்த இசைக்கருவிகள் காரணமாக இசையுருவாகி இசைஞானம் பெற்றவர்கள். சேக்கிழார் கூற்றுப்படி நந்தனார் இசை கற்றவர் . கோரோசனை எடுத்ததினால் மருத்துவ தொழில் செய்பவர். தோலைப் பதபடுத்துவதற்கு அடிப்படையான சுண்ணாம்புத் தொழில் செய்பவர். ஒரு பறையர் என்பவர் மருத்துவ தொழில் செய்பவர் , இசையாளர் , இசைக்கருவிகளை ஆக்குபவர் , பழுது நீக்குபவர் , நல்ல நடனக்கலைஞர் , சுண்ணாம்பிலே தொழில் செய்தவர் . இத்தனை தொழில்களையும் ஒரு சாதி செய்கின்றதென்றால் எப்படி அது இழிந்த சாதியாக போயிற்று.

கால்டுவெல்
19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில்லிருந்து வந்தவர் , இடையன்குடி என்னும் ஊரில் 53 ஆண்டுகள் வாழுந்தவர்.
அவரும் அவர் மனைவியும் இறந்த பின்பு அவர் காட்டிய தேவாலயத்திலேயே அடக்கம் செய்ப்பட்டனர். 53 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே ஐரோப்பா சென்று வந்தவர். சமூக விடுதலை , பொருளாதார விடுதலை , சமூக மரியாதை , இவைதான் அந்த மக்களுக்கு அவர் பெற்றுத்தந்தது.

63 நாயன்மார்களில் மதுரைக்கு தெற்கே ஒருவர் கூட இல்லையே என்று கேட்டால் சைவர்கள் கோபப்படுவார்கள் ,அப்போது சமண மதம் செழித்த பூமியாக அது இருந்தது.
ஜெர்மனிக்கும் சமஸ்கிரதுக்கும் அடிப்படையில் சில வேர்ச்ச்சொற்களை கண்டுகொண்டதன் காரணமாகத்தான் மேக்ஸ்முல்லர் இந்தியாவைத் தன் பூர்வதேசமாக நினைக்கிறார். ஆரியர் உயர்வு வாதத்திருக்கு அடித்தளமிட்டவர் அவர்.
காபிக்கு குளம்பி என்ற பெயர் "குதிரையின் குளம்பு போல காபிக்கொட்டை இருப்பதால் " வருகின்றது
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.