Jump to ratings and reviews
Rate this book

பொய்த்தேவு

Rate this book
திருவாசகத்தை - பாராயணம் என்று சொல்ல முடியாது - திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்த காலம் அது. திருவாசகத்திலுள்ள வரிகளில் எத்தனையோ மனசில் நின்றிருக்கலாம். மனசில் நின்றிருக்கலாகாதா என்று நானே நினைத்த சில வரிகள் மனசில் நிற்கவே இல்லை.

ஆனால் இரண்டு வரிகள் என் அகக் காதில் விடாது ஒலித்துக் கொண்டிருந்தன:

“அத்தேவர் தேவ ரவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே.”

இன்று மனிதனுக்குத் தெய்வம் ஓர் இன்றியமையாத சாதனமாகிவிட்டது. “நாத்தழும்” பெற நாத்திகம் பேசுகிறவனுக்குங் கூட, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, தெய்வம் அவசியமாகத்தான் தோன்றுகிறது.

மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை.

315 pages, Kindle Edition

First published January 1, 1946

10 people are currently reading
151 people want to read

About the author

க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.

க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.

நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
69 (41%)
4 stars
71 (42%)
3 stars
21 (12%)
2 stars
5 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 28 of 28 reviews
Profile Image for Manoj Prabhakar.
26 reviews9 followers
October 28, 2018
பொய்த்தேவு
------------------------

நீண்ட நாட்களுக்குப்பிறகு 250 பக்கத்தை ஒரே மூச்சில் படித்தேன். எளிமையான நாவல். எளிமை என்பது கதை ஒரே நேர்க்கோட்டில் நகர்வதாலும், படிப்பதற்கு எளிமையாதலாலும் சொல்கிறேன். இதற்கு முன்பு கதையோடு ஒரு தொடர்பு ஏற்பட்டு விறுவிறுவென்று படித்தது ஜெயகாந்தனின் "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" புத்தகம்தான். அதற்குபின் க.நா.சுப்பிரமணியம் அவர்களின் இந்தப் புத்தகம். இது 1946ல் எழுதப்பட்ட ஒரு நாவல், காலச்சுவடு க்ளாசிக் வெளியீடாக வெளியிட்டிருக்கிறது.

கதைக்களம் ரொம்பவும் சிம்பள். ஊரை மிரட்டி ரவுடித்தனம் செய்து "உடையவர்களை" மிரட்டி பணம் சம்பாதிக்கும் கருப்பு, ஊர் வம்புக்காரி, வாயாடி, கருப்பின் மனைவி வள்ளியம்மை. சோமு என்கிற குழந்தை. சோமு தன் தந்தையின் போக்கால் அவனுக்கு ஏற்பட்ட கலங்கத்தை அவன் கனவுகளாலும்,செயல்களாலும் விலக்கி, சோமசுந்தர முதலியாராகி, ஊரில் முக்கியப் பிரமுகராகி, பின்னர் சோமுப்பண்டாரமாய் இறந்ததைப் பற்றி ஒரு நேர்த்தியான வரலாறு. மனிதனுக்கு கடவுள் என்பவன் ஒன்றள்ள, உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரைக்கும், ஒவ்வொறு நொடிக்கும் ஒரு கடவுள் உண்டு. இனி வரும் ஒவ்வொரு நொடிகளும் இன்னும் புதுப்புதுப் கடவுள்கள் தோன்றுவார்கள் என்று தத்துவார்த்த மனநிலையை அடையும் சோமுப்பண்டாரம், தன் வாழ்நாளில் பணம், புகழ், கள்ள உறவுகள், துரோகம், நன்றி, துறவு என்று வாழ்வின் எல்லா நிலையையும் அடையும் எதார்த்த வாழ்வை காட்டும் நாவல்.

கதையை ஆரம்பித்த 20 நிமிடங்களுக்குள்ளாகவே தெரிந்துவிட்டது. காதலியுடம் மிகப் பெரிய சண்டை இருக்கிறது என்று. நோட்டிஃபிக்கேஷன் சத்தம் எல்லாம் கேட்கவே கேட்காது. மண்டைக்குல் சோமு மட்டுமே பேசிக்கொண்டிருப்பான். படிக்கவேண்டிய நாவல். ❤
Profile Image for Sharavanan Kb.
35 reviews26 followers
December 25, 2021
சோமு என்கிற சிறுவன் சோமு முதலியார் என்கிற மிக பெரிய தொழிலதிபராக உருவாகி பின் சோமு பண்டாரமாக இறக்கும் கதைதான் பொய்த்தேவு.

பொய்த்தேவு அதாவது பொய் தெய்வம். ரவுடியின் மகனாக அனைவராலும் வெறுக்கபட்டு புறக்கணிக்கபட்ட சோமு பணத்தை தெய்வமாக கருதுகிறான் ஆனால் உண்மையில் பணம் ஒரு தெய்வமில்லை அது ஒரு பொய் தெய்வம் என்று இறுதியில் உணர்கிறான்.

தன் உழைப்பின் மூலமும் ஒருமித்த கவனத்தை தொழிலில் செலுத்தியும் இரு மளிகை கடைகள், பேருந்து, பெட்ரோல் பங்க் , இன்சுரன்ஸ் ஏஜெண்டு , இன்சுரன்ஸ் கம்பெனியின் மாவட்ட நிர்வாகி , வியாபாரிகள் சங்க தலைமை பொறுப்பு என முக்கிய பிரமுகராக மாறி சோமு முதலியார் என மரியாதையுடன் அழைக்கபடுகிறார்.

பின் தனது கீழ்மையான நடத்தையால் தடுமாறி தன் ஒரே மகனை சரியாக வளர்க்காமல் சிறுவனாக இருக்கும்போது தனது தந்தையால் பெற்ற அவ பெயரை மீண்டும் தனது மகனால் பெற்று சிறை சென்று திரும்பி தனது சொத்துக்களை தர்மத்திற்கு எழுதி வைத்துவிட்டு ஏதுமற்ற பண்டாரமாக இறக்கிறார். 

நல்ல எண்ணங்கள், பழக்கங்கள் ஒருவரை எவ்வாறு உயர்த்தும், தீமையான எண்ணங்கள் பழக்கங்கள் எவ்வாறு வீழ்த்தும் , தெய்வம் என்பது ஒன்றல்ல ஒவ்வொரு வினாடியும் நமக்கு தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களும் தெய்வங்கள்தான் என்பதை உணர்த்துகிறது இந்த பொய்த்தேவு.
Profile Image for Kavitha Sivakumar.
353 reviews60 followers
August 13, 2019
The author's writing style is very unique! He narrated each and every aspect/place/people in such interesting detail. Though interesting at first, kind of frustrating when the narration interfered with the flow of the story.

The novel is the story about Somasundaram who was born at the lower strata of the society and rise to the level of a prominent person in his village. Most of the narration is through Somasundaram's eyes to satisfy his curiosity.

Overall, a satisfying read and recommend to my friends who read Tamil books to read the author at least once.
Profile Image for P..
528 reviews124 followers
May 15, 2018
Four sizzling stars to this wonderful, funny, philosophical, super-entertaining, clever, satisfying and innovative story. Published in 1946, it also happens to be the first proper Tamil novel written! The form of the novel couldn't have had a more novel debut :P
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews19 followers
January 17, 2025
2025 #2

மிகச்சிறந்த நாவல். வசித்து முடித்த அடுத்து ஒரு மணி நேரம் வேறு ஏதும் செய்யவிடாமல் ஒரு நிறைவைத் தந்த நாவல்

பொய்த் தேவு - பொய் கடவுள் அல்லது பொய்ப் பற்று/ உலகப் பற்று

சோமுவிலிருந்து சோமசுந்தர முதலி என்றாகி பின்னர் பண்டாரம் ஆகும் ஒருவரின் முழு வழுக்கை சித்திரத்தைத் தரக்கூடிய நாவல். தேடலும் சுவாரஸ்யமும் நிரம்பிய நாவல், வாசிப்பு இன்பம் குறையாமல் வசித்து முடித்த நிறைவையும் திருப்தியையும் தரக்கூடியதாக இருக்கிறது.

தந்தையைப் போல வரக்கூடாது என்றிருக்கும் மகன் அல்லது அப்படி வழிநடத்திய தாய், தந்தையைப் போலவே மாறிய மகன் கீழ் குணங்களில்.

சில பரிணாமங்கள்:
தந்தை போல் இல்லாதிருத்தல் vs தந்தையாகவே மாறுதல்
தாயின் வளர்ப்பு vs தந்தையின் வளர்ப்பு
இளமையில் வறுமை/தேடல் அவை இல்லது வளர்த்தல்
சேர்ப்பதில் உள்ள நிறைவின்மையும் அழிப்பதிலும் விடுவதிலும் இருக்கும் நிறைவு

எல்லாம் ஒன்றென இருக்கும் வேதாந்த தத்துவம் - ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கடவுள் என்று இருக்கும் சோமசுந்தர முதலி கும்பகோணத்திற்கு மேற்காக இருந்த சாத்தனூரில் பிறந்து கிழக்காக இருக்கும் சாத்தனூரில் இறப்பது கவித்துவம்.

ஓடிக்கொண்டே இருக்கும் ஒருவன் எதோ ஒரு தருணத்தில் இளைப்பாற அல்லது மூச்சுவாங்க ஒரு சிறு பொழுது நிற்க அந்த பொழுதே தான் சேர்த்துவைத்த எல்லா ஐயும் விட்டு விட்டு வேறு திசையில் நடக்கத் தொடங்கிய கதை.
Profile Image for Karthick Subramanian.
19 reviews20 followers
August 2, 2017
சோமுப்பயல் சோமுபண்டாரமாகும் வரையான பயணம். உண்மையிலேயே ஒரு மனிதனின் முழு வாழ்நாளோடு நாம் பயணித்த அனுபவம். கீழிருப்பவன் குட்டப்படுவதும். அவன் வளர்ச்சியின் முடிவில் அவன்பால் மேல்தட்டுக்கு ஏற்படும் பயமும் சமூகத்தின் அத்தனை அடுக்குகளையும் வரையறுத்து தோலுரித்து காட்டுகிறது. வளர்ச்சி என்பது சுற்றுப்புறம் சார்ந்ததல்ல அது உன் உன்மேல் நீ காட்டும் அக்கறை மற்றும் உன் அனுபவத்தை நீ எத்தனை தூரம் உணர்ந்திருக்கிறாய் என்பதாகும். இதை நான் ஒரு பாடமாகவே படித்தேன். புத்தகத்தின் வரையறைகளை அத்தனை ஆண்டுகளுக்குமுன்பே முறியடித்திருக்கிறார் க.நா.சு.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews27 followers
September 19, 2020
1946இல் இலக்கியத்தரத்தில் எழுதப்பட்ட க.நா.சு வின் இப்புதினம் சோமு என்கிற மனிதனின் பிறப்பதும் சோமு முதலியாராக வாழ்வதும் மற்ற��ம் சோமுப் பண்டாரமாக இறப்பதும் அத்தியாயங்களாக(Episodes) கதையை சித்தரிக்கப்பட்டுள்ளது.க.நா.சு வின் மொழிபெயர்ப்புகளைப் படித்தபோது அவரின் எழு���்துக்களை வாசிக்க விருப்பம் ஏற்பட்டது.பொய்த்தேவு அதை 100 சதவீதம் பூர்த்திச்செய்துள்ளது.இலக்கிய விரும்பிகள் வாசிக்க வேண்டிய தமிழின் முக்கியப்படைப்பு இது.
பி.கு:சி.சு செல்லப்பாவின் விமர்சன ஆய்வும் மிக அருமை.மனிதர் நான் நினைத்ததையும் நினைக்காததையும் அருமையான விமர்சனம் எழுதி உள்ளார்.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
October 25, 2020
Synopsis
https://rajeshbalaa.blogspot.com/2020...

எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் எழுதிய பொய்த்தேவு (அதாவது பொய்த் தெய்வம்) என்னும் இந்நாவலை நான் இருநாட்களில் (மொத்தமாக 8 மணி நேரத்தில்) வாசித்தேன். இதை எதற்கு சொல்கிறேன்? எளிமையான சரளமான நாவல். ஆனால் மிக நல்ல நாவல். சோமு என்ற பொடிப் பயல் எப்படி சோமு முதலி ஆகி சோமு பண்டாரமாக இறக்கிறான். இந்நாவலில் சோமுவின் வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்களின் மூலமாக வாழ்வின் பற்பல தளங்களையும் பல மனிதர்களின் குணாதிசியங்களையும் தொட்டுச் செல்கிறார் க.நா.சு.

முதல் அத்தியாயமே சோமு பிறக்கும் மேட்டுத் தெருவை பற்றி. இம்மேட்டுத் தெருவில் உள்ளோர் பெரும்பாலும் இழிந்தோர்கள் எனலாம். சிலர் நாணயமான வேலையில் நம்பிக்கை இல்லாதவர்கள். சில இரவுகள் ஈன்றிவிட்டுப் போதுமென்ற மனசுடன் மறு சந்தர்ப்பம் வாய்க்கும் வரையில் காத்திருப்பார்கள். சிலர் எதுவும் செய்யாமல் பிறர் காரியங்களில் தலையிட்டு தரகு அடித்துப் பிழைப்பார்கள். வேலை செய்யாமலும் பிழைக்காமலும் நடைப் பிணங்களாகவே நடமாடித் திரியும் ஜந்துக்களுக்கும் இம்மேட்டுத்தெருவிலே குறைவில்லை.

அத்தகைய மேட்டுத் தெருவிலே தான் சோமு பிறக்கிறான். அவன் வளர்ந்து பெரியாளாகி பணக்காரணாகியும் இறுதிவரையில் அத்தெருவைவிட்டு அவன் வெளியே வரவேயில்லை. அது அவனது மனதை காண்பிக்கிறது. அவன் அறிவு வளர்ந்தாலும் அவன் ஞானம் வளரவே இல்லை. அவன் இழிவாகவே உள்ளான் என்று.

பிறரை உடல் வலிமையால் அதட்டி பிழைத்து வாழும் கறுப்புக்கும் வள்ளியமைக்கும் பிறந்தவன் சோமு பயல் . ஆனால் அவர்கள் பெற்றோர்கள் திருமணம் செய்துக்கொண்டவர்கள் அல்ல. அது ஒருவித தகாத உறவு. சோமுவின் மிக இளம் வயதிலேயே அவன் தந்தை கறுப்பு இறக்கிறான். பின்பு சோமு “கறுப்பு மகன்” என்னும் சமூகத்தின் அடையாளப்படுத்தலால் வளர்கிறான். சிலர் அவனை “அப்பனைப் போல் இல்லாமல், நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!” என்கிறார்கள். அந்த வார்த்தைகள் அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன.

சோமு முதலியின் குழந்தைப் பருவ ஞாபங்களில் இருப்பது கோயில் மணி ஓசை, ஒளி, புயல். ஆனால் அக்கோயில் மணியின் ஓசையை அவன் இறுதியில் மட்டுமே கேட்கிறான். இடையில் எத்தனை முறை கோயில் மணி அடித்தாலும் அவன் ஆழ் மனதில் அது கேட்கவே இல்லை. இதுப்போல் பலருக்கு வாழ்வில் பலதடவை ஆத்ம சக்தி ஓங்கினாலும் (குறிப்பாக தவறு செய்யும் பொழுது மனசாட்சி அதனை தடுத்தாலும்) அதனை கேட்க மாட்டார்கள். அதனால் தான் என்னவோ பலரின் ஆத்ம சக்தி குறைந்துக்கொண்டே இருக்கிறது.

”சாத்தனூர் கோவில் விக்கிரங்களைவிட கோயில் மணி ஓசை சோமுவை கவர்ந்தது என்பதில் ஆச்சர்யம் இல்லை. வெறும் உலோகத்தை உருக்கி வார்த்து அந்த மாதிரி இனிய நாதம் எழுப்பும் சக்தியை அதற்குக் கொடுத்தவன் உண்மையிலேயே ஒரு கலைஞாகத்தான் இருக்கவேண்டும். அது தனி இசை; உள்ளத்தைக் கவர்ந்து உயிரையே உருகி ஓடச் செய்யும் இசை; மனிதனின் ஆத்மாவைக் கவ்வி இழுத்துக் கடவுளின் பாதாரவிந்தங்களில் பணியச் செய்வதற்கு என்று ஏற்பட்ட இசை.” என்று க.நா.சு சொல்கிறார். இக்கோவில் மணியை நமது ஆத்மாகவா நாம் உருவகிக்கலாம். நமது ஆத்மாவை நாம் ஒரு கலைஞாகவே இருந்து உருவாக்கவேண்டும். ஒரு கலைஞன் அவன் கலையில் தேர்ச்சிப் பெற அவன் எவ்வளவு உழைக்கவேண்டும். எவ்வளவற்றை விட வேண்டும். அப்பொழுது தான் அவன் கலை அவனுக்கு கைக்கூடும். அதுப்போல தான் ஒருவனின் ஆத்ம பலம். ஒருநாளில் வார்ப்பது அல்ல.

சோமு மேட்டுச்தெருவிலேயே அலைந்து திரிந்து வளர்வதைக் கண்ட சோமுவின் அம்மா வள்ளியம்மை அவனை அவ்வூர் மிராசுதாரர் ரங்கா ராயரிடம் சேர்த்துவிடுகிறாள். ரங்கா ராயரிடம் கூடமாட ஒத்தாசை செய்து வேலையாளாக இருக்கிறான் சோமு. ரங்கா பல நன்மைகள் செய்து ஊரில் நற்பெயர் வாங்கினாலும் ரங்காவிடம் சோமு ”காண்பது” பணத்தின் மதிப்பை மட்டுமே. ஒரு 10 ரூபாய் வைத்துக்கொண்டு சாத்தனூர் கிராமத்தையே வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அடைவது வரை எது நீடிக்கிறதோ அதுவே ஆசை. மற்றவை எல்லாம் நீராவி போன்ற கற்பனைகள் எனலாம். சோமு ஆசைகளை கொண்டவன். ஏக்கங்கள் கொண்டவன். அதற்காக உழைப்பவன். ரங்காவிடம் அவன் கண்ட பணமே அவனது லட்சியம் என்று கூறுவது மிகையாகது. சோமு வளர்ந்து பெரியாள் ஆகி பணத்தை அளவில்லாது சம்பாதிக்கிறான்.

சோமு வளரும் பொழுது ரங்கா அவனிடம் சிதம்பரம் என்னும் குதிரை ஓட்டியிடம் சகவாசம் வைத்துக்கொள்ளதே என்று கூறுகிறார். ஏனெனில் அவன் ஒரு உதாவாக்கரை. நீயும் அப்படி ஆகாதே என்று. ஆனால் சோமு ரகசியமாக சிதம்பரத்துடன் சிநேகம் வைத்துக்கொள்கிறான். சிறு வயதில் ஆரம்பித்த இந்த ரகசிய வாக்கு மீறல் அவன் வாழ்நாளில் இறுதிவரை வெவ்வேறு வடிவில் தொடர்கிறது. அவன் குடி, கூத்தியாள், அளவு மீறும் பாலியல் கற்பனைகள் என்று அவன் சீர்க்கெடும் பல இடங்கள் அவனை பொருத்த அளவில் ரகசியம் (கிணத்துக்குள்ள குசு விட்டால் வெளியே தெரியாது என்பது போன்ற ரகசியம்). ஏனெனில் இவனுடைய வீடுகட்டும் ரகசியத்தைப் பற்றி ரங்காச்சாரியார் தீடீர் என்று அவனிடம் கேட்டுவிடுவார். அதேப்போல் சோமுவின் கள்ள உறவுகளை இவ்வூர் மக்கள் பார்த்துக்கொண்டே இருப்பர். பின்னே ஏசுவர். குறிப்பாக இறுதியில் சோமுவின் ஆசிரியர் சுப்ரமணியரின் பேரன் சாமா (சுவாமிநாதன்) சாம்பமூர்த்தி இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்ன உடன் அடுத்ததாக என்னைப்போன்றவருக்கு கோமளவிலாஸில் (அதன் கிரஹ ப்ரவேசத்தில்) என்ன வேலை இருக்க போகிறது? என்னைப்போன்றோர் வந்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பான். அவ்வார்த்தையில் உடைந்துவிடுவான் சோமு என்று சொன்னால் மிகையாகது. ஏனெனில் அவனின் பணம் அவனுடைய வெற்றியாக கருதும் பங்களாவை ஆதம்பலம் கொண்ட சாமா போன்றோர் அதை துச்சமாக கருதுகிறார்கள். அப்பொழுது அவனுக்கு மணி ஓசை கேட்கும். குழந்தை காலத்துக்கு பிறகு நடுவில் பல ஆண்டுகள் (அவன் ஆத்ம சக்தி)யின் மணி ஓசை அடித்தாலும் அதனை சோமு கேட்கவே இல்லை. ஏனெனில் இது அறவழியில் வந்த சாமா போன்றவரிடம் இருந்து வரும் ஓசை. அதுவே ஆத்ம சக்தியின் வலிமை எனலாம்.

அதேப்போல் சோமுவின் இளமைப்பருவம் அவன் வாழ்நாள் எல்லாம் தாக்கம் செலுத்தும் என்பதற்கு உதாரணம் - சோமு தைரியமாக நீதிபதியிடம் சென்று போலிஸை அழைத்து வந்து அவனது எஜமான் ரங்கா ராயரை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான். இந்த மனதிடம் அவனை எக்காரியத்தை செய்து முடிப்பவன் என்பதற்கு உதாரணம். ஏனெனில் பிந்நாளில் அந்த ஊருக்கு ரயில் ஸ்டேஷன் வர காரணமாக இருக்கிறான். எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றிப் பெறுகிறான்.

”மனிதனுடைய ஞாபகம், மனசு ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. இப்படிப் பிடித்துக்கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பது பற்றியெல்லாம் கவலை படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பாறியும் தருகிறது. அதுவே மனசின் கிறுக்கு” என்று க.நா.சு சொல்கிறார். அதனால் தான் என்னவோ சோமு பணத்தை பெற்று வாழ்வில் மற்றவற்றை கோட்டைவிட்டான் என்று சொல்லவேண்டும். குறிப்பாக அவன் ஆத்ம சக்தியை.

பல தெய்வங்கள் உண்டு. பணம், ஆசைகள், சிந்தனைகள், உதவி, உழைப்பு. ஆனால் சோமு பணம் என்னும் ஒரே தெய்வத்தை மட்டுமே கண்டான். அதற்காக திட்டமிட்டு உழைத்தான். கல்வி கற்றான், தொழிலை சுத்தமாக சீரும் சிறப்புமாக செய்தான். அவன் மளிகை கடை வைத்தாலும் தரம் வாய்ந்த பொருள்களை வாங்கினான். அமேரிக்க வியாபார யுக்திகளை மாத இதழ்கள் (magazine) மூலம் கற்று தன் வியாபரத்தை பெறுக்கினான். பல தொழில்கள் செய்தான் - இன்சூரன்ஸ், மெர்சண்ட் என்று பல தொழில்களை செய்தான். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். உழைத்தால் மட்டும் பணம் ஈட்டமுடியும் என்று நம்பி திட்டமிட்டு உழைத்தான். ஆடம்பரமாக செலவு செய்யவே மாட்டான். கம்பனியிடம் இருந்து சோமு ஒரு கார் வாங்கினான். ஆனால் அதன் செலவு, பெட்ரோல் என எல்லாம் கம்பெனி செலவில் வந்தன. இவனோ அக்காரில் இன்சூரன்ஸ் தொழில் செய்து சம்பாதித்தான். இவனை பார்த்து கார் வாங்கிய மற்ற ஊர் பணக்கார்கள் காருக்கு செலவு மட்டுமே செய்தார்கள். சோமு பணம் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் அதில் சூரப்புலியாக செயல்பட்டான்.

உழைப்பை நம்பிய சோமு எவ்வளவு சம்பாத்திதாலும் என்றும் ஒரு பிடி அளவு நிலத்தை கூட வாங்கியது இல்லை. ஏனெனில் வெறும் நிலத்தை வாங்கி அது காசு கொடுக்கும் என்று நம்புவோர் போன்று சோமு நம்பவில்லை. ஏனெனில் பலர் நிலத்தை வாங்கி வைத்துவிட்டு அதுனை உழாமல் நாளைக்கே அது வளர்ந்து பொன் தரவேண்டும் என்று நினைக்கின்றனர். உழைக்க தயாராக இல்லை. பிறர் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்று அக்கறைக்கொள்கின்றனர் அந்த சோம்பேறிகள்.

ஆனால் இவ்வளவு உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.

ஆனால் சோமு முதலி அப்படி அல்ல. சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.

சோமு தவறு செய்யும் பொழுது எல்லாம் “கறுப்பு முதலி பையன் கறுப்பு மாதிரி தான் இருப்பான்” என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுத்துக்கொண்டே இருக்கின்றன. இவ்வூரும் இரக்கமற்று அதையே நினைவூட்டுகிறது. ஏனெனில் அது அவன் பால்யத்திலும் வாலிபத்திலும் அவன் மனதில் கொண்ட தவறான எண்ணங்களால் விளைந்தவை.

ரங்கா ராவ் மீது தவறுகள் உண்டு. அவர் ஆடம்பரமாக கல்யாணத்தை கடன் வாங்கி செய்தார். அதன் விளைவாக வட்டியும் கடனும் கட்ட அவர் செல்வத்திலும் நிலம் போன்ற ஆஸ்திகளை விற்று இழந்தார். ரங்கா ராவும் சரி சாம்பமூர்த்தியும் சரி தங்கள் பரம்பரை சொத்தை விற்று தானம் செய்தார்கள். ஆனால் அது தவறு. இவற்றையெல்லாம் அவர்கள் துவக்கத்திலேயே திருத்தி இருக்க வேண்டும். ஒரு திட்டத்துடன் இறங்கி இருக்க வேண்டும். வரும் பொழுது பார்த்துக்கொள்ளலம் என்பதெல்லாம் தவறு. போகும் இடம் தெரியாதவன் எந்த ஒரு ஊருக்கும் போய் சேர மாட்டான். ரங்காவும் சாம்பமூர்த்தியும் தங்களது சொத்துக்களை விருத்தி செய்து இருக்கவேண்டும். வரும் இலாபத்தில் இருந்து தானங்களையும் சேவைகளையும் செய்து இருக்க வேண்டும். அதுவே நல்ல ஒரு ஏற்பாடு. அவர்கள் பொருளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. இறுதியில் பொருள் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மேட்டுத் தெருல பிறந்த சோமு கடைசி வரைக்கும் அங்கேயே இருக்கான். ஏன்னா அவன் ஆத்மா சக்தி ஓங்கவில்லை என்பதே காரணம். ஏன் ஆத்ம சக்தி ஓங்கவில்லை? அவன் பணம் சம்பாத்தித்தான். ஆனால் அவன் கீழ்மைகளை உதரவில்லை அறுக்கவுமில்லை. அவன் கீழ்மைகள் அவனுள் ஆழமாக இருந்தது. சமயம் பார்த்து அவனை வஞ்சித்தது (வாலிபம் திரும்பி பெண்களிடம் சென்றான். தன் மதிப்பை குறைத்துக்கொண்டான்). கீழ்மையில் இருப்பதை உணரவில்லை. சாக்கடைப் போன்ற மேட்டுத் தெருவும் கீழ்மையின் சின்னம் என்பதை உணரவில்லை. அதனால் தான் அவன் மேட்டுத் தெருவிலேயே இருந்துவிட்டான். அது ஒரு குறியீடு. சொல்லப்போனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தப் பிறகு வேறு ஏதோ ஒரு சாத்தனூர் கிராமத்தில் இறக்கிறான். அவ்வூரிலும் மேட்டுத் தெரு இருக்கிறது.

அதனால் மனிதன் அவ்வப்போது சிந்திக்க வேண்டும். அதற்கு அவகாசமும் வேண்டும். இரண்டும் வேண்டும். சிந்திப்பதை தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் சிந்தனையுடன் நிறுத்திவிடக் கூடாது. செயலில் தன் சிந்தனையை காண்பிக்க வேண்டும். அதுவே அவனை நல்வழிப்படுத்தும். அவன் ஆத்ம பலத்தைக் கூட்டும்.

எல்லோரும் தவறு செய்வது ஒரு நொடியில். அந்த ஒரு நொடியை கடக்க சிந்திக்க வேண்டும்.

”உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு - இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாஅடிக்கொரு தெய்வம் உண்டு” என்று சோமு பண்டாரம் சொல்வதாக க.நா.சு சொல்கிறார். இதன் உள்ளார்ந்த அர்த்தம் பணம் (மட்டுமே) தெய்வம் அல்ல. சொல்லப்போனால் பணம் ஒரு பொய்த்தேவு / பொய்யான தெய்வம். பணம் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்னும் மாயம் கொண்ட தெய்வம். வாழ்வில் மற்ற முக்கியமான தெய்வங்கள் உண்டு. அதனால் தான் நாவலின் கடைசியில் சாமா சொல்கிறான் சோமு போன்ற உழைப்பால் முன்னேறிய பணக்காரர்கள் இவ்வுலகிற்கு வேண்டாம், ஏனெனில் இவர்கள் ஒரு விதத்தில் பணக்காரர்களாக இருந்தாலும் பல முக்கியமான விஷயங்களில் ஏழையாகவே இருக்கிறார்கள். குறிப்பாக கீழ்மைகளை கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்வுலகிற்கு சாம்பமூர்த்திப் போன்ற ஆசாமிகள் தான் தேவை ஏனெனில் அவரிடம் செல்வம் குறைந்தாலும் குணம் குறையவில்லை. அவரிடம் ஆத்மபலம் அதிகமாகவே இருந்தது. அவரைப்போன்றோர் செயலாற்ற வேண்டும்.
======
மேலும் - நாவலில் இருந்து சில பத்திகள்
ஏழைகளாகப் பிறந்து பசி தாகத்தைப் பரிபூரணமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளத்திலே எண்ணிறந்த அற்புதமான கனவுகள் நிறைந்திருப்பதற்கும், பணக்காரர்களாகப் பிறந்து விட்டவர்களுக்கு ஒரு திருப்தி, வயிறு நிறைந்த தன்மை, சோம்பல், தூக்கம் இவை தவிர வாழ்க்கையிலே வேறு ஒன்றுமே இல்லாதிருப்பத���்கும் பொதுவாக இதுதான் காரணம் போலும்! பசியையும் தாகத்தையும் தலை தூக்க விடாமல் வயிற்றை நிரப்பிக்கொண்டு வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதன் மகிமைகள் பூராவும் நிச்சய்மாக தெரியது என்று தைரியமாகவே சொல்லலாம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு வினாடியுமே முக்கியமானதுதான் - அற்புதமானது தான் - முடிவற்றதுதான்!

ஒரு மனிதனுடைய ஆசைகள் ஒரே வினாடியில��� பூர்த்தியாகி விடுகின்றன. இன்னொருவனுடைய ஆசைகள் ஏழேழு தலை முறைக்கும் பூர்த்தியாக மாட்டாதவை என்று அதே வினாடியில் தெரிகிறது. ஆமாம், ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆசைகளே இல்லாத மனிதர்களும் இருந்து, வாழ்ந்து வினாடிக்குப் பின் வினாடியாகக் கழித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இவ்வுலகிலே ஒரு விஷயத்தை எண்ணி ஆசைப்படுவதற்கே தெம்பு வேண்டியிருக்கிறது. அந்த ஆசை பூர்த்தியாகும் வரையில் ஆசையாக நீடிக்க வேண்டும் - அதாவது சிலகாலமாவது நீடிக்க வேண்டும். ஆசை என்று தோன்றிவிட்டு மறைந்து விடக்கூடாது. பரிபூரணமாக அடைவதற்கு இடைவிடாது பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசையும் அந்த ஆசை காரணமாக உழைப்பும், சோமுசுந்தர முதலியாரிடம் பரிபூரணமாகக் கலந்து அமைந்திருந்தன.

இந்தப் பிரபஞ்சத்திலே உழைப்பு என்ற ஒரு சக்தியும், அந்தச் சக்தியை இயக்கும் காரணமாக ஆசை என்று ஒரு சக்தியும் ஒன்றையொன்று தழுவி நெருங்கி நிற்கின்றன. இவை இரண்டும் நித்தியமான, அழியாத சக்திகள். இந்த இரண்டு சக்திகளையும் மீறி மனிதன் வாழ முடியாது. வாழ முயல்வது மதியீனம் - பைத்தியக்காரத்தனம்.

சாம்பமூர்த்தி ராயர் மிகவும் நல்லவர். தூய்மையான எளிய உள்ளம் படைத்தவர். தான தருமங்கள் செய்வதே பொருள் படைத்தவரின் கடமை என்று எண்ணுபவர். நிஷ்காமியமாக வாழ்கை நடத்தி அதைப் பரத்துக்குப் பூரானா சாதகமாக வைத்து விடவேண்டும் என்று எண்ணினார்.

பெரியவன், சின்னவன், பணக்காரன், ஏழை என்கிறோம். ஆனால் கடவுள் இரண்டு பேரையுந்தான் படைச்சிருக்கான். பணத்திலே பணக்காரணாக இருப்பவன் மற்ற எவ்வளவோ விஷயங்களில் ஏழையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்; பெரியவனுக்கு பெரிய கஷ்டங்களும்.

மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான் சக்திகள், நவ நவமன உணர்ச்சிகள் விநாடிக்கு விநாஅடி மூளுகின்றன - மூண்டு மூண்டு போராடுகின்றன. இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு விநாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த விநாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. ஆனால் இந்தச் சக்தியுனுடைய ஆட்சி நீடிப்பதும் ஒரே விநாடிதான். இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியக மனிதன் உள்ளத்திலே ஒரு லட்சியத்தை, ஒரு தெய்வத்தைக் கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டானானால் அவனைப் பாக்கியசாலி என்றே சொல்லவேண்டும்.

சிந்திப்பவன் தன் சிந்தனைகளின் பலாபலன்களைப் பற்றி நினைக்காதவனாக இருக்க வேண்டும். ஆனால் சிந்தனை தன்னை எங்கே கொண்டுபோய் விடுமோ, என்ன செய்யத் தூண்டுமோ என்று பயப்படுகிறவன் சிந்திக்கச் சக்தி இல்லாமல் இருப்பதே நலம். தவிரவும் வாழ்கையிலே சிந்திக்கவேண்டியவற்றை எல்லாம் பற்றிச் சிந்தித்து, கூடுமானவரையில் முடிவு கட்டி விட்டுப் பிறகு வாழ ஆரம்பிப்பவனே கெட்டிக்காரன். பழைய காலத்துக் குருகுல வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் போலும். வாழ்க்கை வழிகள் குருகுலத்தை விட்டு வெளியேறுமுன் திடமாகிவிட வேண்டும். இந்த வழி போகலாமா, அந்த வழி போகலாம என்று வழி நெடுகிலும் யோசித்துக்கொண்டே போகிறவன் எங்குமே போய்ச் சேரமாட்டான் என்பது நிச்சயம். வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதனும் அவன் போகிற திசைப்பற்றியேனும் நிச்சயம் செய்த்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
Profile Image for Balaji M.
221 reviews15 followers
May 30, 2020
“பொய்த்தேவு" - க.நா.சுப்ரமணியம்

அட்டகாசாமான நாவல். 1946ல் முதற் பதிப்பு கண்டது.

உரையாடல்களாக இல்லாமல் வர்ணனைகளாலும் விவரணைகளாலும், அக்கால வாழ்வியலை, எக்காலத்திற்கும் பொருந்தும்
தத்துவார்த்தங்களை பொதிந்துவைத்து புனையப்பட்ட நாவல்.

பொதுவாக, இப்படியான நாவல்கள் வாசிக்கையில், நல்ல எழுத்துநடை மூலம், காட்சிகள் கண்முன் விரியும். ஆனால் நல்லவொரு கதைசொல்லியான எழுத்தாளர் திரு க.நா.சு, இந்நாவலில், நன்கு விவரித்து உரையாடல்களல்லாத கதையை எழுதியிருப்பதால், நமது கற்பனையா அல்லது நாமே அந்த கதைகளத்திற்குள்ளும் கதைமாந்தர்களூடனும் வாழ்கிறோமா எனும் சந்தேகம் ஏற்படும்படியான மாயாவிநோத உணர்வை தருகிறது.

எப்போதும் இப்படியான நாவல்களில் மைய கதைமாந்தர் பற்றியும், அவரை சுற்றியுள்ள கதைமாந்தர்கள் மற்றும் சம்பவங்கள் பற்றியும், அதிலும், அந்த மைய கதைமாந்தரின் வாழ்வின் ஒரு பகுதி பற்றி மட்டுமே சொல்லப்பட்டிருக்கும்.
ஆனால் இக்கதை, பிறந்த குழந்தைப் பருவம் முதல் 'சோமு பயல்' ஆக வளர்ந்து, 'சோமசுந்தர முதலியார்' ஆக வாழ்க்கை தரம் உயர்ந்து, பின் 'சோமு பண்டாரம்'ஆக முடியும்படி எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, "Rise and Fall of Somasundara Mudaliyar” என தற்காலத்திற்கேற்ற வகையில் சொல்லலாம்.

சாத்தனூர் எனும் காவிரியாற்றை ஒட்டியுள்ள கிராமப்புறத்தின் 'மேட்டுத் தெரு'தான் சோமுவின் பிறப்பிடம். கதை கும்பகோணம், தஞ்சை, திருவையாறு, சென்னை எனச் சுற்றி வந்தாலும், அதன் மையப்புள்ளிகள் சோமுவும் சாத்தனூரும்தான்.

நாம் எப்போதும் நம்புவதைப் போல, ஒருவனின் 20வயதிற்குள்ளேயே தீர்மானித்துவிடலாம், அவனது எதிர்கால வாழ்வு எப்படி இருக்குமென்று, அவனது சிந்தனை மற்றும் செயல்களின் மூலம்.
அதை அப்படியே இந்த கதையில் மூலம் மீள் காண்கிறோம்.

ஒருவன் எந்த நிலையில் பிறந்தாலும், அவனது சிந்திக்கும் திறனை கொண்டே அவன் என்னவாக ஆகப்போகிறான், என்னவென உருவெடுக்க போகிறான், எப்படி அவனை உலகம் பார்க்கபோகிறது, அவனது மரணம் எப்படி மற்றவர்களால் எதிர்கொள்ளப்படுகிறது என்பதெல்லாம். அந்த ஒருவனாக, இக்கதையில் 'சோமு' இருக்கிறான்(ர்)!

இக்கதையில் திருப்பங்கள் உண்டு, வர்த்தக வியாபார நுணுக்கங்கள் உண்டு, குடி/கூத்தி களியாட்டங்கள் உண்டு, தத்துவார்த்தங்கள்/வாழக்கையைப் பற்றிய ஆழ்புரிதல்கள் உண்டு.

மனிதனினுக்கு ஒரு தெய்வம் போதவில்லை, ஓவ்வொரு நொடிக்கும் ஒரு தெய்வம் தேவைப்படுகிறது. அவனுடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உருப்பெறாத சிந்தனைகள் இப்படி பல தெய்வங்கள் தேவைப்படுகிறது.

சோமுவின் சிந்தனையில் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விஷயங்கள் பிரதானமாக இருக்கின்றன. அதனின்பால் கொண்ட வேட்கை, அதனை நோக்கி உந்தப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி கொண்டிருப்பதுதான்
தெய்வமும் தெய்வச்செயலும் என நம்புகிறார்.

அதில் பணமே பிரதானம்! பணமே தெய்வம்! மற்றவைகள் எல்லாம் பொய் தெய்வங்கள்! பொய்த்தேவு!

இதனை 'திருவாசம்' பாடலிலிருந்து காணலாம் என இந்நாவாசிரியர் முன்னுரையில் தெரிவித்துவிடுகிறார்.

"அத்தேவர் தேவ ரவர்தேவர் என்றிங்கன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே"

1946ல் வெளிவந்து இப்போது படித்தாலும் அடிபொலியாக உள்ளது இந்நாவல். ஹாஸ்யமாக ஆரம்பித்து, பின் வாசிப்பவரின் தன்னிலை உணர்த்துவதாய் முடிகிறது இக்கதை.

எம்மை பொறுத்தவரையில், திரைக்கதையாக எடுத்திருந்தாலும் வெற்றிகள் பல கண்டிருக்கும் இந்நாவல், காரணம் அப்படியான திருப்பங்களும் சம்பவங்களும் இருப்பதாலேயே சொல்கிறோம்.
கதையை பற்றி மேலும் விரிவாகச் சொல்ல ஆவல் இருந்தாலும், அது இனி இந்நாவலை வாசிப்பவரின் ரசத்தை கெடுத்துவிடும்.

மறுபடியும் படிக்கத் தூண்டும் படியான,. படிக்க ஆரம்பித்தாலும் இப்புத்தகத்தை கீ��ே வைத்துவிடாமல் முடிக்ககூடிய நாவல்.
நன்கு பரிந்துரைக்கிறோம்!

(இப்புத்தகத்தில், பின்னிணைப்பாக "சி.சு.செல்லப்பா" அவர்களின் 'விமர்சன ஆய்வு' இருபது பக்கங்களில் கதைசுருக்கத்தையும், தமது புரிதல்களையும் எழுதியுள்ளார். அதுவும் தரமான விமர்சனமாக உள்ளது.)
Profile Image for Murugesan A.
25 reviews5 followers
January 18, 2022
நமது மரபுக்கு வளம் ஏற்றுகிற நாவல். மேல்நாட்டுச் செல்வாக்கால் நமது சிந்தனைகள் அதன் மீது கவரப்பட்டு தற்கால, உலக நிலையால் பாதிக்கப்பட்டு, மதிப்புகள் கலகலத்து விட்டது . மனிதர்கள் வாழ்வின் உணர்வுகளையும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட போது அந்த சூழ்நிலையில் அவர்கள் சிந்தனைகளையும் மேலே சொன்ன அவர்களது வழியில் தொடர விட்டு இலக்கியத்திலும் அந்த விதமான சிந்தனைகளுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் பொய்த்தேவு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது நமக்கு .
சோமு முதலியார் அடிப்படைகளை தெரிந்து பழைய மதிப்புகளை மறுத்து மதிப்புகளை ஏற்றுக் கொண்டவர் அல்ல அவர் பொய் மதிப்புகளை மதித்து கொண்டாரே தவிர தான் விரும்பும் நேரான வாழ்வுக்கான வழி என்று தீர்க்கமாக சிந்தித்து செல்லுகையில் சத்தான மதிப்புகளையும் கொள்ளவில்லை. தன் செயல்கள் மூலம் காட்டிக் கொள்ளவும் இல்லை மதிப்பு உண்டு என்று அறியாதவர்.
அவர் வாழ்வில் இடைப்பட்ட அரை நூற்றாண்டு காலத்தில் அவர் பல முகங்கள் உடையவனாக ஒதுங்கிய தருணத்தில் உதை வாங்கிக் கொண்டு ஓடி வரும்போது ஒரு முகம், திருமணத்துக்கு சரக்கு வாங்க கும்பகோணத்திற்கு செல்லும் முதலாளியின் பணப் பையைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னாலேயே கடைகடையாக ஏறி இறங்குவது ஒரு முகம் ,முதலாளியின் செல்வத்தை காப்பாற்றித் தர வேண்டும் என்ற வேகத்தில் சாகசங்கள் புரிந்து கொள்ளைக்காரர்களை பிடிபட செயல்படுவது மற்றொரு முகம், மரணப்படுக்கையில் தாய் கண்ணயர்ந்து இருக்கும் நிலையில் ஒத்தாசை செய்ய வந்த தன்னை விட வயதில் மூத்த மாற்றான் மனைவியுடன் அடுத்த அறையில் உறவு கொள்வது ஒரு முகம், ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தனக்கென வைத்துக் கொள்ள வைத்து கொடுக்கப்பட்ட கடையை தன்னுடைய கடின உழைப்பால் பெரிதாக ஒன்று பத்தாகி ,பத்து நூறாகி ,நூறு ஆயிரமாக பெருக்குவது இன்னொரு முகம், தாயற்றவனுக்கு தாயாக மனைவி அற்றவனுக்கு மனைவியாக வாழ்ந்த அவளின் இறுதிச் சடங்கை அனாதை பிணத்தை போல ஆள் வைத்து எடுப்பது மற்றொரு முகம், செல்வத்தைச் சேர்க்கும் இலட்சியத்தின் எல்லையை தொடும் வரைக்கும் பல விதமான முகங்களுடன் உலா வருகிறார் சோமு.
தான் இன்னும் " பூரண மனிதனாக ஆக முடியவில்லையே " என்று மற்றவருடன் தன்னை ஒப்பிட்டு தன் மீது குறைபட்டுக் கொள்ளும் சோமு முதலியார் பாத்திரத்தை ஒரு பூரண மனிதனாகவே காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
March 13, 2021
கருப்ப முதலி அவர் மகன் சோமு பணம் தான் கடவுள் என்று வாழ்ந்து சோமசுந்தர முதலியார் ஆகி இறுதியில் என்ன ஆனார் என்றும் , சோமுவின் எசமான் ரங்கா ராவ் அவர்மருமகன் சாம்பமூர்த்தி ராவ் கடவுளே கதி என்றும் உதவி என்று வருபவர்களுக்கு கொடுத்து கொடுத்து எல்லாம் இழந்து வீழ்ச்சி அடைவதும் , அவர்கள் வாழும் சாத்தனூர் கிராமத்தைப் பற்றிய முழுமையான சித்திரம் என்று சுவாரசியமாக போகிறது. இந்த நாவல் எழுதி 75 வருடங்கள் கடந்த பிறகும் தமிழில் முதல் பத்து நாவலின் வரிசையில் இருப்பதற்கு இதன் வலுவான கதை , கதை சொல்லும் முறை நாவலில் கட்டமைப்பு என்று பல காரணங்கள் சொல்லலாம். கட்டாயம் வாசிக்க வேண்டும்.
Profile Image for BPN.
5 reviews1 follower
January 28, 2022
1900களில் படைக்கபட்ட ஒரு kgf மாதிரியான கதை தான் பொய்த்தேவு.. பத்து பேர அடிச்சி நான் ரவுடி ஆகலடா.. நான் அடிச்ச பத்து பேருமே ரவுடிங்கதான்னு ராக்கி பாய் சொல்ற மாதிரி, ரெண்டு மூனு பெரிய தொழில செஞ்சிகிட்டு நான் business man- ந்னு ஆகலடா. நான் செஞ்ச தொழில் எல்லாமே பெரிய தொழில் தான்னு கெத்து இருக்கவர் நம்ம சோமு சுந்தரம்.

பொய்த்தேவு = பொய்யான தெய்வம். பணம் தான் எல்லாம்னு சுத்திட்டு இருக்க நம்ம சோமு பாய். பணம் ஒன்னும் தெய்வம் கிடையாது.. அது ஓரு duplicate சாமின்னு self realize பண்ணி. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் கோயிலுக்கு எழுதி வெச்சிட்டு இறந்தராரு.
( may be உண்மையான தெய்வம் கோவில இருக்கறது தான்னு கூட நெனசிகிருக்கலாம் )

சாதரண குடும்பத்துல பொறந்த ஒரு சிறுவன், அப்பா அம்மா ரெண்டு பேருமே அவங்க ஊர்ல ரவுடிகள் மாதிரி இருக்கவங்க, சோமுவுக்கு 5 வயது இருக்க அப்பவே அப்பா இறந்தராரு.
அம்மா தன்னுடைய நிலைய புரிஞ்சிகிட்டு அந்த ஊர்ல ஒரு பெரிய தலக்கட்டுகிட்ட பணியாளா join பண்றாங்க. அவர் பேரு ராயர். நம்ம சோமுவும் அங்க வேலைக்கு சேந்து பொழப்பு நடத்திட்டு இருக்க அப்போ தான் அவருக்கு ஒரு விசயம் புரியுது பணம் தான் எல்லாம். பணம் தான் மரியாத, பணம் தான் வாழ்க்கை அப்டின்னு….

பல வருசங்கள் அங்க வேல செஞ்ச சோமு ஒரு கட்டத்துல குடியும் கும்மாளமும்மா சுத்த,, நம்ம ராயர் வாரிசும் அவர் மருமகனும் சோமுக்கு ஒரு மளிகை கடைய வெச்சி கொடுத்து.. இந்தாப்பா இனி உன் பாடு.. அப்டியே பொழப்ப பாத்து ஒடுன்னு கடைய அவர் கையில handover பண்ணிடறாங்க.

நம்ம சோமு பாய் இனியும் இப்டியே இருந்தா குடியே வெறித்தனமா மாறி, பொழப்பு நாறிடும்னு, வெற்றி கொடிகட்டு மலைகளை முட்டும் வரை முட்டுன்னு…

உழைக்கிறார்…

உழைக்கிறார்….

உழைத்துக் கொண்டே இருக்கிறார்..

மளிகைகடைல நல்ல வருமானம் வருது, ஒரு கடை ரெண்டு கடை ஆகுது, ஊருக்குள்ள பஸ் வாங்கி விடறாரு, insurence company agent ஆகி, அவர் மாவட்டத்துக்கே inchargeஆ உருவாகறாரு.

இந்த மாற்றதுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் சோமு பாயோட உழைப்பும், தன்னம்பிக்கையும் தான். எழுத படிக்க தெரியாம இருந்தவர் சின்ன வயசுல ராயர் உதவியோட கொஞ்சம் காலம் படிச்சாரு. அப்றம் படிச்ச வரைக்கும் போதும்னு இளைமை ஊஞ்சல் ஆட ஆரமிச்சிருச்சி…

தனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச படிப்ப வெச்சி ராயார் பாய் நெறைய புத்தகம் வாசிக்க ஆரமிக்கறார். including english book. ராயர் இப்போ..

வாசிக்கிறார்…

வாசிக்கிறார்..

வாசித்துக் கொண்டே இருக்கிறார்...

வாசிப்பும்,உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்த நம்ம சோமு பாயோட வளர்ச்சி பயங்கரமா இருக்கு. அவரோட நோக்கம் எல்லாம் பணம்.. பணம் பணம்.. அப்றம் பணம் மட்டும் தான். நம்ம சோமு பாய்கிட்ட ஒரு பாலிசி இருக்கு.. என்ன தான் நல்லா சம்பாதிச்சாளும் அத நிலத்துல invest பண்ன மாட்டேன்ப்பா அப்டிங்கறது.

அவருடைய 50களில் மீண்டும் இளமை ஊஞ்சல் ஆட, சோமுபாய் தாசிகள் வீட்ட தேடி ஓட அப்பையும் தலைவன் வாழ்க்கைய நல்லா குஜாலாதான் enjoy பண்ணி வாழ்ந்துட்டு இருக்காப்ல. அவருக்கு மளிகை கட வெச்சி கொடுத்தார்ல நம்ம ராயர் மருமகர்.. அவர் ஒரு நாளு இறந்தராரு. அந்த செய்திய கேட்டதுல இருந்து தலைவனுக்கு கையும் ஒடல.. காலும் ஓடல.. அட, வாழ்க்கையே ஒடலங்க.

கொஞ்ச நாளா எதோ யோசனையிலே வாழ்க்கையை ஓட்டிட்டு இருந்த சோமுபாய் மேல வியாபரத்துல தவறு செஞ்சிட்டதா கேஸ் விழுந்த���, அதுக்கு 7 மாச சிறை தண்டனையும் கிடைக்குது. ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி அடிச்சி,புடிச்சி, ராப்பகல உழச்ச சொத்த எல்லாம் கோயிலுக்கும் , வேண்டியவங்களுக்கும் பிரிச்சி கொடுத்துட்டு ஜெயிலுக்கு போய்டறாரு. 7 மாசத்துல 7 ஜென்மத்துல வாழ்ந்த வாழ்க்கயையும் உணர்ந்தாரோ என்னமோ தெரியல.. வெளிய வந்து ஏதும் இல்லாத ஒரு ஆண்டியா தெருவுல ஒரு நாள் செத்து கிடக்கறாரு…

இதான்ப்பா இந்த புக்கு…

ஆரம்பத்துல ஒரு 40 பக்கம் வரைக்கும் நாக்கு தள்ளிடுச்சி.. ஒரு படம் ஆரமிச்சி எப்போட கதைக்குள்ள போவிங்க அப்டின்னு ஒரு வெறுப்பு,சலுப்புலாம் வரும்ல… அந்த மாதிரி ஆகிடுச்சி. எப்போ நம்ம சோமு பாய் ராயர்கிட்ட வேலைக்கு சேந்தாரோ அப்போல இருந்து கதை.. நல்லா போச்சி..

பக்கதுக்கு பக்கம் ஆரம்பத்துல அக்ரகாரம், அயர், மேட்டு தெரு, மேட்டு தெரு காரங்க இப்டி தான் இருப்பாங்க.. இவர் ஐயர் மிகவும் நல்லவர்ன்ற ரேஞ்சுக்கு கதை இருக்கு. பல்ல கடிச்சுகிட்டு தான் படிச்சேன்..

அன்ன பறவை போல சோமுபாய் கதைய தனியாவும் , கா.நா.சு பாய் மேற்கொண்டு சேர்த்துருக்க கம்பி கட்டுன கதையையும் பிரிச்சி படிங்க… நல்லா இருக்கும்..

நன்றி
வணக்கம்..

#Pnbbookstories
Profile Image for Moulidharan.
95 reviews19 followers
March 23, 2023
"பொய்த்தேவு"
ஆசிரியர் - கா நா சு
1947
நாவல்
241 பக்கங்கள்

ஒரு புத்தகம் எழுதிவிட்டு அந்த எழுத்தாளன் இறந்து போகலாம் ஆனால் அந்த புத்தகம் திறக்கப்படும் ஒவ்வொரு முறையும் அவன் வாசகன் வழி உயிர்த்துவருகிறான். அப்படி 1947 ல் வெளிவந்த பொய்த்தேவு மூலம் கா நா சு என் கண்முன் உயிர்தெழுந்தார். இந்த மாறுபட்ட தலைப்பை தன் முன்னுரையிலே திருவாசகம் தொட்டு நமக்கு தெளிவாக விவரித்து விட்டுதான் நம்மை கதைக்குள் கூட்டிச்செல்கிறார். நம் அனைவரின் மனதிற்கும் ஒவ்வொரு கடவுள் உண்டு, நான் சொல்வது உருவமற்ற கடவுள், அது மாறிக்கொண்டே இருக்கும், அந்த கடவுள் இல்லாமல் எந்த மனிதனும் இவ்வுலகில் இல்லை. ஒரு நாத்திகனுக்கும் எதிற்பதற்கு கடவுள் தேவைப்படுகிறது. நான் கூற வரும் கடவுள்கள் பணம், பதவி, புகழ், கெளரவம், வெற்றி, போட்டி, வஞ்சம், கிரோதம் போன்ற எண்ணற்ற மனக்கடவுள்கள் ஆகும். ஆனால் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அது எந்த கடவுள் ஆனாலும் அது பொய்த்துப்போகும் அதுதான் வாழ்க்கை, இதையே சோமசுந்தரத்தின் வாழ்க்கை வழி இந்நாவல் நமக்குள் கடத்துகிறது.

தஞ்சாவூர் ஜில்லா சாத்தனுர் கிராமத்தில் மேட்டுத்தெருவில் ஊர் ரவுடியாக திரியும் கறுப்ப முதலியாருக்கு , ஒழுக்கமின்றி அலையும் வள்ளியம்மைக்கும் மகனாக பிறந்த சோமு என்கிற சோமசுந்தரம் என்ற சிறுவன் வளர்ந்து மளிகை மெர்ச்செண்ட் சோமசுந்தர முதலியாராக உயர்ந்து , இறுதியில் சோமு பண்டாரமாக வீழ்வதே இந்த கதை . மேலே கூறியது போல இந்த கதை ஒரு மனிதனின் வாழ்க்கை பயணமாக மட்டும் இருந்திருந்தால் இந்த நாவல் ஒரு சராசரி நாவலாக நாம் கடந்து சென்றிருப்போம் . ஆனால் இந்த கதை சோமசுந்தரம் என்ற தனி ,மனிதனின் வாழ்கை பயணம் தாண்டி , அவரின் எண்ண ஓட்டங்கள் , உள்ளுணர்வுகள் ,சிந்தனைகள் , செயல்கள் என உணர்வு ரீதியாக பயணப்பட்டதே இந்த நாவலை வேறு தளத்திற்கும் , தரத்திற்கும் கொண்டு சென்றுள்ளது . இந்த கதையை ஒரு திரைப்பட பாணியில் முதல் பாதி , இடைவேளை , இரண்டாம் பாதி , இறுதி என விவரிக்கிறார் . இக்கதையின் முதல் பாதியில் சோமுவின் இளமை பருவமும் , சாத்தனுர் கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் , காவிரி ஆற்றின் அழகையும், சாதி ,குலம் , பணம் , பதவி போன்றவையால் பிரிந்து வாழும் மனிதர்களையும் தனக்கே உரித்தான கேலியும் , கிண்டலுமாக தொடங்குகிறார் . உதாரணத்திற்கு " இந்த தெருவின் பெயர் மேட்டுத்தெரு , ஆனால் இந்த சாத்தனூரிலே மிகவும் பள்ளமான தெரு இதுதான் ,இதற்கு மேட்டுத்தெரு என்று பெயர் வைத்தது யார் என்று யாருக்கும் தெரியாது ."இப்படி முதல் பாதி கேலியும் கிண்டலுமாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி நம்மை நிறையவே சிந்திக்க வைக்கிறது. சோமசுந்தரம் சிந்திப்பதற்கு கூட நேரம் இல்லாமல் தன் வியாபாரத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறார். ஆனால் ஆசிரியர் நம்மை சிந்திக்க வைக்கிறார் அவர் வாழ்க்கையை நம் கண்முன் காட்டியபடியே. இறுதியில் சோமசுந்தரம் சற்று நிதானித்து சிந்திக்கும் தருணம் அவர் தன் வாழ்க்கையின் விளிம்பில் நிற்கிறார்.

ஏன் வாசிக்க வேண்டும்?
ஆகச்சிறந்த எழுத்தாளர் சி சு செல்லப்பா இந்த நாவலை ஒரு ஆய்வுக்கு உட்படுத்திகிறார். ஒரு ஆங்கில இலக்கியத்துடன் ஒப்பிடிகிறார். அவர் ஏன் இதை செய்ய வேண்டும்? . நான் இந்த நாவலை herman hesse எழுதிய சித்தார்த்தா என்ற புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். சற்று உற்று நோக்கினால் இரண்டுமே ஒரே விதமான வாழ்க்கை பயணம் சென்று ஒரே இடத்தில் தான் முற்று பெறுகிறது. ஆனால் சித்தார்த்தாவில் தத்துவார்த்த ரீதியாக சொல்லப்பட்டதை இந்த நாவலில் கா நா சு எதார்த்தமாக, மனதுக்கு இன்னும் நெருக்கமாக எடுத்துறைக்கிறார். ஒற்றை இலக்கை நோக்கி ஓடும் கடிவாளம் போட்ட ஒரு பந்தய குதிரையாக
வாழ நாம் பழக்கப்படுத்தப்படுள்ளோம், இப்படி ஓடும் வாழ்க்கையில் சற்று சில இடங்களில் நிதானிக்க நமக்கு இந்த பொய்த்தேவு தேவைப்படுகிறது.

-- இர. மௌலிதரன்.
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 27, 2022
⏳சாத்தனூரில் உள்ள மேட்டுத்தெருவில் பிறந்தவன் சோமு. சிறுவயதிலேயே ரங்க ராவிடம் வேலைக்குச் சேர்கிறான். எப்படியோ கல்வியும் கிடைக்கிறது. பணத்தையே லட்சியமாகக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான். வெற்றியும் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் பணத்தைப் பொய்த் தேவு(தெய்வமாக) ஆக நினைத்து அவற்றைத் துறக்கிறான். இறுதியில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து இறந்தும் போகிறான். இதுவே இப்புத்தகத்தின் மேலோட்டமான கதை.

⏳பெரும்பாலும் அதிகப்படியான விவரிப்புகள் என்னைக் கவர்வது இல்லை. ஆனால் இப்புத்தகத்தில் அதற்கு நேர்மாறாக சில அத்தியாயங்கள் என்னை நாஸ்டாலாஜிக்காக ஃபீல் பண்ண வைத்தன. சலிப்பை உண்டாக்கவில்லை.

⏳சிறு வயதில் தோன்றும் கனவுகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார் ஆசிரியர். கொஞ்ச நாள் டீச்சர் – பிறகு கலெக்டர் – அதற்கும் பிறகு டென்னிஸ் பிளேயர் – உண்மையில் இதை விடவும் அதிகமான கனவுகள் இருந்தன.

⏳ஓட்டின் வழியாக விழும் சூரியனின் ஒளிக்கற்றைகளைப் பார்த்து வியந்தது, உண்டியலில் காசு சேர்த்தது, அப்பா அடித்தது, பேப்பர் அப்பளம் வாங்க கடை கடையாய் அலைந்தது என எல்லாம் ஞாபகத்திற்கு வந்தன – இரண்டாம் வகுப்பு டீச்சரிடம் பிரம்படி வாங்கியது உட்பட.

⏳கோயிலை மையமாக வைத்து வெவ்வேறு ஆரங்களில் பல வட்டங்கள் வரையப்படுகின்றன. உள் வட்டங்களில் உயர்ந்த சாதி என சொல்லப்படுபவர்கள், கடைசி வட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என ஊரின் அமைப்பை விளக்கியுள்ளார் ஒரு அத்தியாயத்தில். அதேபோல காவிரி ஆற்றைப் பயன்படுத்தும் நேரமும் கூட இதே சாதி அடிப்படையில் தான் உள்ளது.

⏳பணத்தைக் குறிக்கோளாக கொண்டு செயல்படுவது கூடாது என்பதுபோல கதையின் முடிவு இருக்கும். ஒருவேளை சாதிகளைக் குறிப்பிடாமல் இக்கதை அமைந்திருந்தால் இந்த முடிவு சரிதான் என தோன்றியிருக்கும். ஆனால் அப்படியல்லாமல் சாதிகளை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதால் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள ஒருவன் அதிகப்படியான பணம் சம்பாதிப்பதில் என்ன பிரச்சனை என்று சில நேரங்களில் தோன்றுகிறது.

⏳மேட்டுத் தெருவில் உள்ள மக்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ரொம்பவும் ஸ்டீரியோடைப் ஆக எழுதியுள்ளார். அதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
சோமு இறந்ததாக குறிப்பிடும் கடைசி அத்தியாயத்தில் கூட அவனை அறியாமலேயே அவன் வேறொரு ஊரில் இருந்த மேட்டுத் தெருவை நோக்கி சென்று கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருப்பார். எதை முன்னிட்டு அப்படி சொல்கிறார் என்று புரியவில்லை. இப்படித்தான் முன்னேற்றமடைய வழியில்லாமல் இருந்தது என்று அன்றைய காலக்கட்டத்தைப் பதிவு செய்கிறாரா அல்லது மேட்டுத் தெருவில் பிறந்தவன் மேட்டுத் தெருவிலேயே இருக்க வேண்டியதுதான் என்கிறாரா – என்ன சொல்ல வருகிறார் என்பது ஆசிரியருக்கே வெளிச்சம்.

⏳என்னைப் பொறுத்தவரை இடம்பெயர்தல்கள் இறுக்கமான சாதியப் படிநிலையினைக் கொஞ்சமாவது தளர்த்துகின்றன என்றே எண்ணுகிறேன்.

⏳எளிய நடை. ஆங்காங்கே நகைச்சுவையான வரிகளும், தத்துவார்த்தமான கருத்துக்களும் இருந்தன. சாதிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் இது ஒரு சிறந்த கதை.
17 reviews3 followers
December 31, 2019
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர் க.நா.சு. புதுமைப்பித்தன் காலத்தில் வாழ்ந்தவர். இவரது எழுத்தை படிக்க வேண்டும் என நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். கிண்டில் அன்லிமிட்டெடில் அவரது எழுத்துக்கள் கிடைத்தன. இவரது படைப்புகளில் பொய்த்தேவு மிக முக்கியமானது. பல்வேறு எழுத்தாளர்களால் பாராட்டு பெற்ற நாவல். 1940களில் எழுதப்பட்ட நாவல் இது. ஒரே நேர்க்கோட்டில் செல்லக்கூடிய எளிய கதை வடிவம். ஆனால் கதை உண்டாக்கக்கூடிய பாதிப்பு அதிகம்.

தஞ்சை அருகில் சாத்தனூர் எனும் சிற்றூரில் ஒரு ரவுடி அப்பாவிற்கு பிறக்கும் பையன் சோமு தான் கதையின் நாயகன். சிறு வயதிலேயே அப்பாவை ஊர்ப்பகையால் இழந்து விடுகிறான். வறுமை துரத்துகிறது. அம்மாவுடன் சேர்ந்து அக்கிரகாரத்து தெரு ஒன்றில் சிறு வயதில் வேலைக்கு சேர்கிறான் சோமு. படிப்படியாக வீட்டு உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று நல்ல பெயர் எடுக்கிறான். வளர்ந்ததும் உரிமையாளரே சிறிது பணத்தை முதலீடாகப் போட்டு சோமுவிற்கு ஒரு சிறு மளிகைக்கடையை ஏற்படுத்தி தருகிறார். சிறு வயதிலிருந்தே பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் சோமுவிற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் படுகிறது. பெரும் உழைப்பைக் கொட்டி வியாபாரத்தை பெருக்கி ஊரிலேயெ பெரும் பணக்காரனாகிறான் சோமு. இப்போது சோமசுந்தரம் முதலி. பணத்தை தேடி தேடி ஓடும் சோமசுந்தர முதலி தனது 60-70 வயதுகளில் ஆடி ஓய்ந்த போது தனது வாழவைத் திரும்பி பார்த்து ஒரு முடிவு எடுக்கிறார். கதை நிறைவடையும் போது ஒரு நல்ல நாவலை படித்த திருப்தி.

க.நா.சு அவர்களே இந்த நாவலை மேலும் விரித்து எழுத உத்தேசித்திருந்ததாகவும் ஆனால் பல்வேறு காரணங்களால் சுருக்கி விட்டதாக எழுதி இருந்தார். அது இந்த நாவலிலும் தெரிகிறது. சோமுவின் இளமைப் பருவத்தை விரித்து நல்ல விவரணைகளோடு எழுதி இருந்தார். மொத்த சோமனூரும் நமது மனக்கண்ணில் விரிகிறது. அதன் பிறகு கதை வேகமெடுத்து, சோமு சோமசுந்தர முதலி ஆவதும், பின்பு வயதாவதும் வெகு வேகமாக நகர்கிறது. கதை முடியும் போது அது வரை வராத கதாபாத்திரங்கள் கதைக்குள் வெகு வேகமாக நுழைந்து கதையை முடித்து வைக்க உதவுகின்றன. சோமுவின் சிறு வயது பருவத்தைப் போலவே மொத்த கதையும் இருந்தால் இன்னும் வெகு சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இதை ஒரு குறையாக சொல்லி இந்த படைப்பை தள்ளி விட முடியாது. மிக மிக அருமையான நாவல். நான் படித்த மிகச்சிறந்த தமிழ் நாவல்களுள் இதுவும் ஒன்று.
21 reviews2 followers
March 25, 2023
சாத்தனூரில் மேட்டுத்தெருவில் வசிக்கும் கறுப்ப முதலியைப் பார்த்தால் அந்த ஊரே பயப்படுகிறது. அவனுடன் live inல் வாழும் வள்ளியம்மையும் சரியான சண்டைக்காரியாக இருக்கிறாள். அவர்களுக்கு சோமசுந்தரம் என மகன் பிறக்கிறான்.

சிறு வயது முதலே பெற்றோரின் சண்டைகளைப் பார்த்து வளரும் சோமுவுக்கு அந்த வீடே பிடிக்காமல் போகிறது. தெருத்தெருவாகச் சுற்றுகிறான். அந்நிலையில் ஏதோ கொலைக்கேசில் கறுப்ப முதலியையும் போலீஸ் பிடித்துக் கொண்டு போக அவன் தாய் வீட்டு வேலை செய்து மகனைக் காப்பாற்றுகிறாள்.

கண் நிறையக் கனவோடும் படித்துப் பெரிய ஆள் ஆக வேண்டும் என ஆசையோடும் திரியும் சோமுவை அவன் தாய் தான் வேலை செய்யும் ரங்காராவ் வீட்டிலேயே சேர்த்து விடுகிறாள். அங்கு நடக்கும் கொள்ளையில் அவர் வீட்டினரைக் காப்பாற்றி சோமு நல்ல பெயர் எடுக்கிறான். தன் ஒரே பெண் கங்கா பாய்க்கு திருமணம் முடித்துவிட்டு ரங்காராவ் மரணிக்க, அவரது மருமகன் சாம்ப மூர்த்தியிடமும் வேலை செய்கிறான்.

பின்பு சோமு அவர் குடும்பத்தின் உதவியுடன் படித்து அவர்கள் உதவியுடனே மளிகைக் கடையும் வைக்கிறான். அவர்களே திருமணமும் செய்து வைக்கிறார்கள். சோமு பணம் ஒன்றே தெய்வம் என வாழ்கிறான். நேர்மையாக உழைத்து பணம் சேர்க்கிறான். பின் அவன் வாழ்க்கை என்ன ஆனது? அவன்‌ மகன்‌ நடராஜன் என்ன ஆனான்? என்பதே பொய்த்தேவு.

ஒருவகையில் பார்த்தால் இது அந்தக்கால Rocky Bhai கதை. உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம் எனும் நம்பிக்கை ஊட்டுவது. இதுவரையான நெடும்புதினங்கள் toxic society ஐ மட்டுமே காட்சிப்படுத்த நல்ல மனிதர்களும் சமுதாயத்தில் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை இந்தக் கதை ஊட்டுகிறது.‌

தன் மீது எந்தப் பழி இருந்தாலும் பரவாயில்லை. யார் அடித்து விரட்டினாலும் கவலை கொள்ளாமல் தன் முனைப்புடனும் mind focus உடனும் ஒன்றையே பின்பற்றினால் நிச்சயம் அதை அடைந்து விடலாம் என்பது சோமுப் பயலாக இருந்து சோமசுந்தர முதலியாரின் மூலமாக புலனாகிறது.

எனினும் தான்‌ மட்டுமே உலகம்.‌தன் லாபம் மட்டுமே வாழ்க்கை, பணம் மட்டுமே தெய்வம் எனும் பொய்த்தெய்வ வழிபாடு என்றும் மன நிம்மதி எனும் மெய்த்தெய்வத்திடம் சேர்வதில்லை எனும் moral ஐச் சொல்கிறது பொய்ததேவு.
Author 2 books16 followers
August 26, 2023
"மளிகை மெர்ச்சண்ட் " சோமு பிறந்து , வளர்ந்து , வாழ்ந்து , வீழ்ந்த கதை தான் பொய்த்தேவு . பொய்த்தேவு என்கிற வார்த்தைக்கு கூகிளில் அர்த்தம் தேடிப்பார்த்து அலுத்து போய் உட்காந்திருக்கும் எனக்கு யாரவது அர்த்தம் சொன்னால் நன்றாக இருக்கும் . ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகன் வாழ்வில் முன்னேறி பல வெற்றிகளை அடைவது என்பது அவ்வளவு சுவாரசியமாக இருக்காது என்பது எல்லா நாட்டு இலக்கியத்தின் முதல் விதி போல் . அந்த விதியை பின்பற்றி ஆரம்பித்த நாவல் மளிகை மெர்ச்சண்ட் ஆகா முன்னேறப்போகும் சோமுவின் ஏழ்மை பின்புலத்தை விரிவாக பேசியபின் அவனுடைய முன்னேற்றத்தையும் , அதற்கான காரணத்தையும் , அந்த முன்னேற்றத்தினால் அவன் பாதை மாறியதையும் , அதற்கான காரணத்தைய���ம் , தன் வயோதிகத்தில் புறவாழ்விலிருந்து தன்னை விடுவித்து கொண்டதையும் , அதற்கான காரணமுமே இந்த நாவல் . தமிழில் ஒரு நாயகனின் சரிதை இவ்வளவு விரிவாக இருப்பது என்பதே ஆச்சர்யமளிக்கிறது (புனைவு கதாபாத்திரத்தின் முழு சரிதையை படிப்பது இதுவே முதல் முறை ). "மளிகை மெர்ச்சண்ட் " சோமுவின் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற இறக்கங்களை பற்றி விரிவாக பேசினாலும் விறுவிறுப்பு குறையாமல் நாவல் படைக்கப்பட்டிருக்கிறது . சமூக பின்னணியுடன் சோமுவின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் விளக்கிய விதத்தில் ஆசிரியர் மற்ற சரிதைகளை விட தன் சரிதை தனித்துவமானது என்பதை நிரூபிக்கிறார் . நாவலின் முடிவு மட்டும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாக தெரிகிறது , அதை விடுத்தது பார்த்தால் நாயகனின் வாழ்க்கையை பூதக்கண்ணாடி போட்டு பார்த்த திருப்தியை தரும் நாவல் இது . தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் இது .
Profile Image for Mani Kandan.
31 reviews
February 13, 2023
I like his writing style. Two different starting point but end as one. I am still enjoy the dark comedy even though it was written in 1944. His/This novel is living beyond the generations and years. It captured the lifestyle in village and near by towns during the period. I felt that I connected the landscape of the story as I am from then Thajavur district.

The line I Like ...
1. மனிதர்களுடைய நம்பிக்கையும் உழைப்புமே குறைந்துவிட்டன.
2. தானாக முளைவிட்டுச் செழித்துப் பலன் தரும் என்று மனிதன் நினைத்துக்கொண்டு சும்மா இருந்து விட்டுக் கஷ்டப்படுவது எவ்வளவு மதியீனம்!

Chapter 5
"

நிலம் நிலம் என்று எல்லோரும் போற்றினார்களே தவிர அந்த நிலத்திலே ஈடுபட்டு உழைத்துப் பலன் காண அவர்களுள் யாரும் தயாராக இல்லை. தலைமுறைக்குப் பின் தலைமுறை என்று அந்தக் கிராமவாசிகளுக்கு உணவளித்துக் காப்பாற்றிய அந்த நீரும் நிலமும் எப்பொழுதும் போலத்தான் இருந்தன. நிலத்தின் சத்தோ நீரின் வளமோ சிறிதும் குறைந்துவிடவில்லை. மனிதர்களுடைய நம்பிக்கையும் உழைப்புமே குறைந்துவிட்டன.
நிலத்திலே பழைய செல்வம் எல்லாம் பழையபடியேதான் இருந்தது.ஆனால் அது தானாக முளைவிட்டுச் செழித்துப் பலன் தரும் என்று மனிதன் நினைத்துக்கொண்டு சும்மா இருந்து விட்டுக் கஷ்டப்படுவது எவ்வளவு மதியீனம்!

"

Profile Image for Yadhu Nandhan.
257 reviews
July 22, 2021
சொல்லும் கருத்து சொல்லும் விதம் சோமு என எல்லாமே அருமை. சோமுவிற்கு வாழ்கக்கையின் தேடலின் முடிவில் கிடைப்பது என்ன என்பதை தத்துவார்த்த ரீதியில் சொல்லப்படுவது தத்துவம் என்று சிறிதும் தோனாத படியான நடையில் விவரிக்கிறது இந்தக் கதை. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் சோமு ஒவ்வொரு உரு கொள்கிறான். அவை ஒவ்வொன்றும் நமக்கு பல விஷயங்கள் சொல்கின்றன. சாத்தனூர் மனமெங்கும் நிறைகிறது. எல்லோரும் படிக்க வேண்டிய படைப்பு. மனதிற்கு தெளிவு தரும்படியான புத்தகம்.
2 reviews
March 30, 2021
Just finished the book. I read it leisurely over 20 days, wanting to savour the story and narrative. Just superb..
My mother must have read this in her younger days. Wish I had read it earlier while she was alive, to have had the pleasure of discussing the book . Every one should read this treasure.
107 reviews1 follower
November 9, 2022
“அத்தேவர் தேவர் அவர்தேவர் என்று இங்ஙன்
பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே"
57 reviews5 followers
July 6, 2025
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி காலகட்டத்தில் இருந்தவரும் மணிக்கொடியில் எழுதியும், அதில் எழுதியவர்கள் பற்றி எழுதியவருமான கா நா சு விடம் நாம் எதிர்பார்க்கும் புரட்சிகரமான முற்போக்கு சிந்தனைகள் நிறைந்த இந்த நாவலை இப்போது படிக்கும் போது இத்தகைய எழுத்தாளர்கள் அந்த காலகட்டத்தில் இருந்தது நாம் பெற்ற பாக்கியமே என்று தோன்றுகிறது.

பொய்தேவு தமிழின் முதல் நவீன நாவல் கோட்பாட்டை அமைத்த ஒன்று. சந்தேகமில்லை. கிட்டத்தட்ட 400 பக்கங்கள் ஒரு நிமிடம் கூட சரிவில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது.

மெய்யியல் தளத்தில் மெல்லிய நகைச்சுவை இழையோடும் சோமு முதலியார் என்னும் சோமு பயலின் வாழ்க்கை 360 டிகிரி சுற்றி வந்து முடிவடைகிறது. மூன்று கதாபாத்திரங்களின் வேற்றுமை மூலம்- சோமு முதலியார், சாம்பமூர்த்தி ராயர் மற்றும் சாமா- வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளை முன் வைக்கிறார்.

சமூக சாதி அடுக்குகளை, மனித மன அழுக்குகளை, உறவுகளின் மேன்மையை, வியாபார உலகின் வெற்றி ரகசியத்தை என்று பல பல கருத்துக்களை அனாயாசமாக கையாண்டிருக்கும் முறையை என்னவென்று சொல்வது?

“சிறைவாசலில்‌, கதவு திறக்கக்‌ காத்திருக்கையிலேதான்‌ சாத்தனூர்‌ மேட்டுத்‌ தெருவிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது போன்ற ஓர்‌ உணர்ச்சி சோமசுந்தர முதலியாருக்கு ஏற்பட்டது.”
கதையின் ஒட்டுமொத்த கரு இவ்வரிகளில் வெளிப்படுகிறது.

முன்னுரையில் கா நா சு கூறுகிறார்- “பொருள்‌ சம்பாதிக்கவே தவம்‌ இருந்து அதைச்‌ சாதிக்கிற சக்தியும்‌ இருக்கிற இடத்தில்‌ எல்லாவற்றையும்‌ பொசுக்கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக்கூடிய மனோபாவமும்‌ இருக்கும்‌ என்பது நான்‌ கண்டறிந்த உண்மை. பொருள்‌ என்று மட்டுமல்ல; மனிதன்‌ ஏற்றுக்கொள்கிற எல்லா லக்ஷியங்களையுமே இப்படிப்‌ புறக்கணிக்க முடியும்‌ என்பதுதான்‌ திருவாசகத்தின்‌ வரிகள்‌ எனக்குச்‌ சொன்ன மனித உண்மை”

அருமையான ஆச்சர்யமான படைப்பு. சிவாஜி நடிப்பில் ஒரு நல்ல சினிமாவாக நான் கற்பனை செய்து கொள்கிறேன்.

பொய்தேவு நாவலின் உரையாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=O4Jh3...
78 reviews4 followers
December 10, 2023
ஒருவனுடைய முழுமையான வாழ்க்கை தான் இந்நாவல். அவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்க்கை பயணம் எதன் அடிப்படையில் அமைந்திருந்தது என பல அத்தியாயங்களை வைத்து ஒரு செவ்வியல் நவீன இலக்கியத்தை இயற்றியுள்ளார்.

சாத்தனூர் கிராமத்தில் வாழ்ந்த ஒரு ஏழ்மையான தம்பதிகளுக்கு பிறந்த சோமு என்கிற சோமசுந்தரம். அவனின் பாலிய காலத்தில் இருந்தே அவனுடைய மனதில் பதிந்த ஆசைகள் எல்லாம் சுதந்திர வாழ்க்கையை தவிர வேறு எதுவும் இல்லை, அவ்வாறே சுதந்திரமாக வாழ்ந்து திளைத்தான். இந்நாவலில் உருவாக்கிய ஒவ்வொரு கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. அவன் தன்னுடைய பாலிய காலத்தில் இருந்து உண்மையும் நேர்மையும் மட்டும் அவனுடைய வாழ்வின் கருவாகக் கொண்டு வாழ்ந்ததால் அவனின் வாழ்வின் மேன்மையை உணர முடியும். பின்னர் இளமையில் மனம் தடம் புரள்வது போல் இவனும் ஒர் தருணத்தில் தடம் புரளுகிறான். வீழ்ந்ததில் இருந்து எழுதல் தானே வாழ்க்கை அப்படித்தான் இவனுடைய வாழ்க்கையும் நகரத் துவங்கி நம்மால் கற்பனை எட்டாத அளவுக்கு அவனுடைய வளர்ச்சி அவனை உச்சத்தில் அமர்ந்திருக்கிறது.

ஒன்றுமில்லாதவனா இருந்து எல்லாம் கிடைக்க பெற்று பெருமையினால் சூழும்போது ஏற்படும் விரக்தி அவனை என்ன செய்கிறது என்று தான் மிச்சம். பொய்யிதேவன் என வாழத் துவங்கியவன் அவனுடைய முடிவு ஆன்மீகத்தை நோக்கி தான் இருந்தது. இந்நாவலின் நடையும் வடிவமும் எழுத்தின் அழகும் எளிமையும் கவித்துவமும் நிறைந்திருந்தது. இவரின் ஒவ்வொரு நாவலும் ஒரு தனித்துவம் அமைந்ததாக இருக்கிறது எளிதில் அந்த வாழ்க்கையோடு ஒன்று வாழத் தூங்கி விடுவோம் இப்படி வாழ்க்கையில் கற்ற பாடங்கள் நாம் அறியாமலே நம்முடைய மனதில் பதிந்து வாழ்ந்து வருகிறது. தமிழில் க.நா.சு ஒர் ஆகச் சிறந்த படைப்பாளி.
152 reviews31 followers
September 25, 2015
Tamil novel written in 1946. I read the kalachuvadu publication. The author describes neatly the life style of the tamil villages/Towns around Kumbakonam of the 1940s as if you see them. It is interesting to know the earnings in Annas and what stuff they could buy. The novel tries to find meaning of life through a village urchin who is industrious to become very rich and discards everything to break his ties with the world. It is a typical tamil novel.
Profile Image for Balaji Cr.
17 reviews
August 9, 2019
An old gem

This is my first book from Ka Na Su
Great narration
Unbelievable that it was written more than fifty years back
Profile Image for Hari Harasudhan.
1 review4 followers
June 17, 2023
A very important book in tamil fiction that throws many Important perspectives of the common man in a model village near kumbakonam
Displaying 1 - 28 of 28 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.