அமெரிக்காவின் 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கன். தனது வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தவர், "விழுவதெல்லாம் எழுவதற்கு" என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். அமெரிக்கா வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். அடிமைத்தனத்தையும், இனவெறிக் கொடுமையையும் தனது நேர்மையான செயல்பாடுகளாலும் நெஞ்சுரத்தாலும் ஒழித்துக்கட்டியவர். இவரது வாழ்க்கையில் நடந்த சுவையான விஷயங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.