’’சிறு மற்றும் பெருநகரவாசிகளுக்கு சிறுதெய்வங்கள் குறித்தோ, கோயில் கொடை பற்றியோ, வரி பிரிப்பதிலிருந்து அதன் சம்பிரதாயங்கள் மற்றும் சண்டைகள் வரை அனைத்துமே கற்பனையாகக் கூடத் தோன்றலாம். இன்றளவும் நடந்துவரும் அவை குறித்த பழைய நினைவுகளில், கொடைக்கு ஊருக்குப் போக முடியாத வருத்தத்தில் இருக்கும் இன்றைய உடலளவு நகரவாசிக்கு இந்த நாவல் ஒரு கொடை'' -- சுகா.
ஏக்நாத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், பாடலாசிரியர், நாவலாசிரியர். இளம் வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கவிதை, சிறுகதைகளை எழுதி வந்தார். சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் இவர், திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.