பதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை தொகுதி. தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை 'பதினெட்டாம் பெருக்கு' தொகுப்பு நிரூபிக்கும். நானாவித அனுபவங்களை கலைநயத்துடன் வெளியிடும் ஒரு முதிர்ந்த கலைஞன் உணர்வை, பார்வையை, வெளியீட்டு சக்தியை இவைகளில் காணலாம். இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை. - சி. சு. செல்லப்பா
Venkata Mahalingam, who wrote under the name of N. Pichamoorthi, was an Indian poet and writer. He is considered father of free verse (Puthu Kavidai) in Tamil. He wrote more than 127 short stories, 11 stage plays and a couple of novels. He was a lawyer by profession and also worked as editor in magazines.
பதினெட்டாம் பெருக்கு *********************** 1930-40களில் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்த 15 சிறுகதைகளின் தொகுப்பு. அக்காலத்து எழுத்துக்கள் இப்போது வாசிக்கையிலும் முற்போக்குவாத கருத்துக்களை கொண்டு, வசிகரிக்கவே செய்கிறது நம்மை.
பலவித கலவையான உணர்வுகளை தரவல்லகூடிய கதைகள். அன்பு, காதல், களவு, பயம், வறுமை, மது, தர்மம் என நானாவித விடயங்களையும் பற்றி பேசும் கதைகள்.
போகிற போக்கில் பலவித நல்லொழுக்க கருத்துக்களை ஆங்காங்கே தூவிச் சொல்லும் கதைகளினூடாக, கருப்பு வெள்ளையில் பயணம் செய்வதை நன்கு உணரலாம்.
பள்ளி நாட்களில் மனனம் செய்த கடினமான செய்யுள்களும், கொஞ்சம் போல் பாரதியும், ஊடகங்களின் தாக்கத்தால் கலைஞர், கண்ணதாசன் வாலி வைரமுத்து போன்றோரின் பாடல்களும் மட்டுமே இலக்கியம் என்றிருந்த காலம். வேறு சில இலக்கிய ஆளுமைகளை நான் அறிய நேர்ந்தது. அவர்களில் என்னை வியக்க வைத்த ஒருவர் ந பிச்சமூர்த்தி.
தமிழில் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர். பாரதி காலத்தவர். பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு தமிழில் எழுதத் துவங்கியவர்.
நவீன சிறுகதைக்கு அழகியல் வடிவம் அமைந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இளமையின் இயல்பினால் இன்பம் விழையும் மனமும் காவல்காரனாக தடுக்கும் அறிவும் நடத்தும் போராட்டங்களை தத்துவமும் அழகுணர்வும் கலந்து ஆற்றொழுக்கு போன்ற நடையில் அருமையாக சொல்லியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதை பதினெட்டாம் பெருக்கு படிக்கும்போது அந்த காலத்தை உணரும் அதே நேரம், மன அறிவுப் போராட்டங்களை இன்றும் புதிதாக உணரலாம்.
அவனுக்கு அன்று விடுமுறை மனைவி தாயார் வீட்டுக்கு போயிருந்தார் தனிமை தரும் திருட்டுத்தனமும் இன்ப வெறியும் அவனைப் படுத்தும் பாடு வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது தனிமை அபாயகரமானது. 😃( பதினெட்டாம் பெருக்கு)