நாம் நவீன இலக்கிய வரலாற்றை பாரதியிலிருந்து தொடங்குவது வழக்கம். பாரதிதான் தமிழில் இதழியலை ஆரம்பித்துவைத்தார். அயல்மொழிச் சொற்களை தமிழாக்கம் செய்வதிலும் அவரே முன்னோடி. எளிமையான மக்கள் கவிதைகளை எழுதினார். உரைநடைக் கவிதையை உருவாக்கினார். கூடவே இன்றைய நவீனக் கதை எழுத்தையும் அவரே தொடங்கிவைத்தார். பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு' என்னும் கதை 1911ல் வெளிவந்தது. தமிழின் ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று இது. 'மீனாம்பாள் வீணை வாசிப்பதில் சரஸ்வதிக்கு ஒப்பானவள்' என்றுதான் பாரதி ஆரம்பிக்கிறார். இதுவே அவள் கதாபாத்திரத்தை வரையறை செய்துவிடுகிறது. பாரதியாரின் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களின் மானசீகக் காதலியின் வடிவதை மீனாம்பாளில் பார்க்கிறோம்.
Chinnaswami Subramania Bharathi was an Indian writer, poet, journalist, Indian independence activist and social reformer from Tamil Nadu, India. Popularly known as "Mahakavi Bharathiyar", he is a pioneer of modern Tamil poetry and is considered one among the greatest of Tamil literary figures of all time. His numerous works were fiery songs kindling patriotism and nationalism during Indian Independence movement.
Born in Ettayapuram of the then Tirunelveli district (presently Tuticorin district) in 1882, Subramania Bharati had his early education in Tirunelveli and Benares and worked as a journalist with many newspapers, notable among them being the Swadesamitran and India. Bharathi was also an active member of the Indian National Congress. In 1908, an arrest warrant was issued against Bharathi by the government of British India for his revolutionary activities forcing him to flee to Pondicherry where he lived until 1918.
Bharathi's works were on varied themes covering religious, political and social aspects. Songs penned by Bharathi are widely used in Tamil films and Carnatic Music concerts.
வெளிவந்த காலத்தில் ஆங்கிலேய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நூல். அதனாலேயே இந்தப் புத்தகத்தைப் படிக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டது. தமிழ் இலக்கிய உலகில் சிறுகதை எனும் வடிவம் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட சிறுகதை. சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என பாரதியார் மற்றவர்களுக்கு மட்டும் சொல்லவில்லை. தானும் அதை முன்னெடுத்தார். தமிழ் பத்திரிக்கை உலகில் கேலிச்சித்திரம் என்கிற வகையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதி. தமிழகத்தில் இருந்தே ரசிய பத்திரிக்கைக்கு சந்தா செலுத்தியது அநேகமாக பாரதியாகத் தான் இருக்கும்.
100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிறுகதை என்பதால் நடை சற்று கடினமாக இருந்தது. மேலும் தனித்தமிழ் இயக்கத்திற்கு முன்னதாக இருந்த எல்லோரையும் போலவே வடமொழி சொற்களும் கதைகளில் ஏராளமாக இருக்கின்றன. எளிய கதை தான். காதலியா நாட்டின் விடுதலையா என இரு கொள்ளியாக இருக்கும் நாயகன். வேறொருவருடன் திருமணத்தை விரும்பாத நாயகி தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் கிடைக்கிறது. விரக்தியில் நாயகன் தேச விடுதலைக்கு பாடுபட வீட்டை விட்டு செல்கிறான். பின்பு சில வருடங்கள் கழித்து தனது காதலி இறக்கவில்லை, அவளும் தேச சேவையில் இருக்கிறாள் என தெரிந்து இருவரும் சேர்கிறார்கள்.
பாரதி சாதியை மிகத் தீவிரமாக எதிர்க்கவில்லை. சாதியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையே எதிர்த்து வந்தார். இந்தப் புத்தகத்திலும் பள்ளரும் பறையரும் உழவுத் தொழில் செய்வதால் அவர்களும் வைசிய வகுப்பு தான் என்று கூறுகிறார். இதே போல பாரதி பற்றி பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள உதவும் நூல் இது.
Mahakavi is a legend Took some time to understand few Tamil words, there are few words are not in use He had guts to speak and write the topics which many people were reluctant to speak
A wonderful story by the Great Poet Maha Kavi Subramaniya Bharathiyar.
A wonderful story with beautiful thought. I don't know why this story was banned. The language style is belong to that period. Nice to read. Thanks to Amazon Kindle.
“பாரும் பாபு, நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமேயானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?”
‘பாரதியார்’ எழுதிய ‘ஆறில் ஒரு பங்கு’ சிறுகதையிலிருந்து…
உலகில் இதுவரை எந்த ஆயுதங்களும் தடை செய்யப்படவில்லை, ஆனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படி இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் தான் இது. இதுவே தமிழின் முதல் சிறுகதை.
1910ஆம் ஆண்டு பாரதி இந்தப் பிரதிகளை தாமே பிரசுரித்து மூன்று அனாக்களுக்கு விற்று வந்தார். அப்படி பிரிட்டிஷ் அரசாங்கமே தடை செய்யுமளவிற்கு இந்தக் கதையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
நூறு வருடங்களுக்கு முந்தையை ஒரு சராசரி இளைஞன். பிரம்மசமாஜத்தில் ஈடுபட்டு துறவறம் மேற்கொண்டு சுதந்திர போரில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறான். ஆனால், அவன் சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறான்.
இப்போது துறவு செல்லவா? அல்லது அந்தப் பெண்ணை மணந்து கொள்ளவா? என்று குழம்பிக் கொண்டிருக்கையில், அந்தப் பெண்ணிற்கு அவளது அப்பா வேறொரு மாப்பிள்ளையுடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இதற்கிடையே அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுவிட, அந்த இளைஞன் துறவு மேற்கொண்டு தேச சேவை செய்ய கிளம்புகிறான்.
இரண்டு வருடங்கள் கழித்து அந்த இளைஞனுக்கு அந்தப் பெண் சாகவில்லை, மரணப் படுக்கையில் இருக்கிறாள் என்ற செய்தி தெரிய வருகிறது. பின்னர் முடிவு.
ஒரு மிகச் சாதாரணமான காதல் நாடகமாக இருக்க வேண்டிய கதையை, தனது அரசியலை இந்தக் கதையின் மீது ஏற்றியதன் மூலம் ஒரு அரசே தடை செய்யுமளவிற்கு வீரியமான கதையாக மாற்றி இருக்கிறார் பாரதி.
இந்தக் கதை தமிழின் முதல் சிறுகதை என்று சொல்லப்பட்டாலும், ஒரு சில வார்த்தைகளை தவிர்த்து ஏதோ நேற்று எழுதிய கதை போலவே வாசிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாமல் இருக்கிறது. ஏதோ நமது நண்பன் பேசுவது போல இந்தக் கதை சொல்லி நம்மிடம் பேசுகிறார். பல இடங்களில் சுஜாதா நடை இருந்தாலும், பாரதி சுஜாதாவிற்கு முன் காலத்தவர் என்பது ஒரு வரலாற்று முரண்.
இதனை சிறுகதை என்று சொன்னாலும் இது ஒரு குறுநாவல் வடிவிலேயே இருக்கிறது.
கதை என்கிற வடிவத்தை தாண்டி இது பேசுகிற அரசியல் என்பது, இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல என்றே தோன்றுகிறது.
உதாரணமாக, தான் துறவறம் சென்ற பின்பு தன்னைக் காதலித்த பெண்ணும் இல்லற வாழ்வை விடுத்து அவனுக்காக காத்திருந்து இறக்க வேண்டும் என நாயகன் நினைப்பது அல்லது நாயகன் வழியாக பாரதி நினைப்பது எவ்விதத்தில் சரி? துறவறம் போவது நாயகனின் விருப்பம் அதற்காக தன் கருத்தை காதலி மீது திணிப்பதும் அதற்கு புனித பிம்பம் கட்டமைப்பது என்பது அறிவுடமை ஆகாது. அது நூறு வருடங்களுக்கு முந்தைய கால கட்டமாக இருந்தாலும் சரி.
‘கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து அவர்களுக்கு கல்வியும், தர்மமும், தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும்’
இந்த மொத்தக் கதையின் நோக்கமும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அந்நிய அரசாங்கத்திற்கு எதிராக போரிடுவது தான். அது மேற் குறிப்பிட்ட வரிகளிலும் தெரிகிறது. ஆனால், மாட்டுக்கறி தின்னும் ஒருவன் பரிசுத்தமற்றவன் என்பது அந்த தனிமனிதனின் உரிமையை அவனது உணவை கேலி செய்வதாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று இந்தக் கதை சொல்வது போல இருந்தாலும், அது அவர்களின் மீது பரிதாபப்பட்டோ அல்லது சமத்துவம் வேண்டியோ அல்ல. இந்த தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்கள் சரிசமமாக நடத்தாமல் போனால், அவர்கள் சுயமரியாதையும் கல்வியும் கொடுக்கும் பிற மதங்களுக்கு மாறிவிடுவார்கள். அதனால், இந்துக்களின் மக்கள் தொகை குறையும் என்ற பயம் தான் காரணமாக இருக்கிறது.
‘சாதிகள் இருக்கலாம் ஆனால் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது’ என பாரதி கூறுகிறார். ஆனால், சாதிகள் இருக்கும் வரை சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்பதே நடைமுறை எதார்த்தம்.
எந்தவொரு அரசியல் கொள்கைகளும் காலம் கடந்து நிற்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், கலை காலம் கடந்து நிற்கும். நூறு வருடங்களுக்கு முன��னர் வாசித்த ஒரு வாசகனுக்கு உணர்ச்சி கொந்தளிப்பை தந்திருக்க கூடும். ஆனால், தற்போதையை வாசகனுக்கு ஒரு சராசரி பொழுதுபோக்கு கதை தரும் உணர்வையே தருகிறது.