வாசக நெஞ்சங்களுக்கு, இனிய வணக்கங்கள்! முகநூல், மின்னஞ்சல் மற்றும் அலைபேசி வாயிலாக, தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே வரும் வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நவம்பர், 2015-ல் உங்கள் அனைவரது அன்பின் அடைமழையோடு துவங்கிய என்னுடைய எழுத்துப் பயணம், கடந்த மூன்றாண்டுகளில் மறக்கவியலா எண்ணற்ற மகிழ்ச்சிகளை உள்ளடக்கியவாறு ‘மறப்பேன் என்றே நினைத்தாயோ!’ போன்ற அர்த்தமுள்ள கேள்விகள் பலவற்றையும் எழுப்பியபடியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இனிமையான தருணத்தில், இதுவரை நான் எழுதிய எட்டு படைப்புகளை உள்ளடக்கிய முழுத் தொகுப்பை, அமேசான் வாசகர்களுக்கு அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். வாசகர்களது ஈடுஇணையற்ற நல்லாதரவையும், ஆகĮ