இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் நடக்கும் இன்னொரு போராட்டம் இது.... சிவநேசப்பாண்டியன் ஆங்கில அரசாங்கத்திற்கு உபயம் செய்யும் பண்ணையார். சத்தியஜோதி குடும்பத்தோடு விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு இறங்கியவள். ஜோதியை தன்னவளாக்கிக் கொள்ள பண்ணையார் தன் அதிகார பலத்தை உபயோகித்தான். ஆனால் ஜோதி உலகெங்கும் பரவிக் கிடந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அஹிம்சையால் வெல்ல முடியும் என்று நம்புகிறவள் ஆயிற்றே! அவள் சிவநேசப் பாண்டியனை வெல்ல பிரம்மாஸ்திரத்தை அல்லவோ எடுத்து விட்டாள் ?
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.
சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது..
தன்னலத்தை மட்டுமே பார்க்கும் ஜமீன்தாரனான சிவநேசப்பாண்டியனிடம் உதவி கேட்டு வரும் சத்தியஜோதியிடம் பிரதிபலனாக அவளையே கேட்பதற்கு ஒத்துக்கொள்கிறாள்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உடம்பில் குண்டடி வாங்கிய சத்தியஜோதி உடல்நலம் தேறும் வரை ஜமீன்தாரின் வீட்லே இருப்பவள் அவனின் தாயின் மனதை மாற்றிச் சுதந்திர போராட்டத்தின் பக்கம் திசை திருப்பி அவரின் மூலம் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறாள்.
வெள்ளைக்காரர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஜமீன்தார் அவர்களின் மூலம் தன் தாய்க்கு ஆபத்து ஏற்படும் போது தான் சுயமரியாதை விழித்துக் கொண்டு அவர்களை எதிர்த்துப் போராட்டத்தில் கலந்து கொண்டு சுதந்திரம் அடைந்த பிறகு சத்தியஜோதியை மணந்து கொள்கிறார்.
உயர்பதவியில் இருந்த தந்தை ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்டதால் சிறையில் அடைபட்டு போக உடல்நலம் குன்றிய தாயையும் இழந்து போராட்டத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தவள் பல இன்னல்களைக் கடந்து சுதந்திரம் கிடைக்கப் போகும் நேரத்தில் உண்டான மதக்கலவரத்தில் தன் பெண்மையையும் இழந்து தனித்து வாழப் போகும் முடிவை எடுத்த சத்தியஜோதியின் மனதை ஜமீன்தாரும் அவரின் தாயும் மாற்றி அவளைக் குடும்பவாழ்விற்குள் அழைத்து வருகின்றனர்.