பல துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சாதனையாளர்களுடைய இளவயது வெற்றிக்கதைகளை விறுவிறுப்பாக விவரிக்கும் நூல் இது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைச் சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லித்தருகிறது.
இதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சாதனையாளர்கள் (அதாவது, அவர்களுடைய இளவயது வடிவங்கள்) ஒவ்வொருவரும் வலியுறுத்தும் செய்தி ஒன்றுதான், 'பிரச்னைங்க வரும், போகும், எல்லாம் சமாளிச்சுக்கலாம், நாங்க அப்படிதான் சமாளிச்சோம், நீங்களும் வாங்க ப்ரோ!'
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.