Jump to ratings and reviews
Rate this book

அல்லி [Alli]

Rate this book
'உயர்ந்த குறிக்கோளுக்காக எளியவாழ்க்கை - அளவான வாழ்க்கை - நடத்த வேண்டும்' என்று நினைக்கிற இனத்தை சேர்ந்தவள் அல்லி. 'எப்படியாவது வாழவேண்டும்; ஆடம்பரமாக வாழவேண்டும்' என்ற எண்ணத்தில் ஊறிய இனத்தைச் சேர்ந்தவன் சுப்பு ரத்தினம். இருவர்க்கும் திருமணம் நடக்கிறது. இந்த கலப்புமணம்' தான் காதலின் இயல்பையெல்லாம் நாம் அறிவதற்குத் துணைபுரியும் கதையாக விரிகிறது. கதையின் ஒவ்வோர் எல்லையிலும், ஒவ்வொரு திருப்பத்திலும் எல்லாம் வல்ல அந்த மென்மையான உணர்ச்சியில் இயல்பு தெளிவாகிறது. நாகரீகம் நாகரீகம் என்று நாம் எதையோ குறிக்கிறோமே அந்நாகரீகத்தின் புகலிடமாகிய மருத்துவக் கல்லூரியில் தொடங்குகிறது கதை. அது வளர்ந்து வளர்ந்து மேற்கையும் கிழக்கையும் இணைத்து நிற்கும் உலகமாகவே காட்சியளிக்கிறது. எல்லா நிகஸ்ச்சிகளிலும் ஆண் - பெண் உறவே ஊடுருவி நிற்கிறது. பால் - இயல் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இந்த நாவல் எடுத்துக்காட்டாக விளங்கும்.

328 pages, Paperback

Published January 1, 1984

3 people are currently reading
22 people want to read

About the author

மு. வரதராசன்

78 books44 followers
Mu. Varadarasan (மு. வரதராசன்), also known as Mu. Va. and Varatharasanar, was a Tamil scholar, author and academic from Tamil Nadu, India. He was a prolific writer whose published works include 13 novels, 6 plays, 2 short story collections, 11 essay anthologies, a book on the history of Tamil literature, books on Tamil linguistics and children's books. During 1961–71, he was the head of the Tamil department at the University of Madras. In 1961, he was awarded the Sahitya Academy Award for Tamil for his novel Agalvilaku. During 1971–74, he was the vice-chancellor of the University of Madurai.

மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்

மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. மு.வ. வின் கல்வி, வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.

எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். 1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.

திரைப்படமான மு.வரதராசரின் கதை - பெற்ற மனம் (1960)

விருதுகள்:

மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (60%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
1 (20%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Kalies N.
13 reviews
March 24, 2025
I’ve noticed that some of his books have been translated into other languages, like Russian and English. I really hope this one gets an English translation someday. Since Tamil is one of my native languages...along with Telugu.I was able to understand it well. There’s so much wisdom in this book, and just like how many people read the Bhagavad Gita, I hope more people get the chance to read this too. There are so many valuable lessons to take from it.

Funny thing is, I actually thought this was a book I had finished about three years ago. It had been lying around my room, and when I picked it up, I realized it was a completely different one hehe..I’m so glad I decided to read it! I’ve become a huge fan of his work 🥰 this is my third book of his, including Alli. Looking forward to reading more of his books in the coming days!❤️
6 reviews4 followers
March 26, 2020
Compare to அகள் விளக்கு this book not much interesting. But i like it too.. A motivating book for woman..
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.