Vaikom Muhammad Basheer is regarded as one of the prominent literary figures ever existed in india. He was a legend in Kerala.
He was one of those outspoken figures who revolutionized Malayalam Literature, and Thus the World Literature itself with his dauntless sarcasm, satire, and black humor.
Often referred to as the Beypore Sultan (the king of Beypore) by the colleagues, he was one of the prominent figures behind the artistical, economical, and social reformation of the Kerala Culture.
His novel Shabdangal (The Voices) was once banned due to its echo that cyclonized a once feudalistic society.
He is also regarded as the translators nightmare. This is mainly because of the colloquial touch he added to his writings, which ethnically speaking would lose its humor and meaning when translated to other languages.
He was the sufi among the writers and and the greatest exponent of Gandhian Thought.
He was awarded with Padma Sri in 1982 for his overall contributions to nation as a freedom fighter, writer, and as a political activist.
ആയിരം വാക്കുകളേക്കാൾ ഉച്ചത്തിൽ ഒരു ചിത്രം സംസാരിക്കും എന്നാണു പറയപ്പെടുന്നത്. എന്നാൽ, ചുരുങ്ങിയ വാക്കുകൾ കൊണ്ട് വായനക്കാരന്റെ മനസ്സിൽ ഒരു ചിത്രം വരച്ചിടാൻ കഴിഞ്ഞാലോ? ബേപ്പൂർ സുൽത്താൻ തന്റെ ചെറുകഥകളിലൂടെ ഏറ്റവും കുറഞ്ഞ വാക്കുകൾ കൊണ്ട് വായനക്കാരന് മറക്കാൻ കഴിയാത്ത ചിത്രങ്ങൾ സമ്മാനിക്കുന്നു. ദാരിദ്ര്യത്തിന്റെയും, വിശപ്പിന്റെയും, മോഹങ്ങളുടെയും, മോഹഭംഗങ്ങളുടെയും, ദുരഭിമാനത്തിന്റെയും, അടിച്ചമർത്തലിന്റെയും, ചെറുത്തുനില്പിന്റെയും ഒക്കെ മിഴിവുള്ള ചിത്രങ്ങൾ എത്ര അനായാസമായി ആണ് മനസ്സിലേയ്ക്ക് ഒഴുക്കി വിടാൻ കഴിയുന്നത്. എങ്ങനെയാണോ ഉന്നതമായ ഗിരിശൃംഗങ്ങളിൽ നിന്നും താഴേയ്ക്ക് പുഴ അനുസ്യൂതമായി, ശാന്തമായി ഒഴുകുന്നത് അതുപോലെയാണ് ബഷീറിന്റെ തീക്ഷണങ്ങളായ അനുഭവങ്ങളും അവയിൽ നിന്നുൾക്കൊണ്ട ജീവിതവീക്ഷണവും ഈ കഥകളിലൂടെ വായനക്കാരന്റെ മനസ്സിലേയ്ക്ക് ഒഴുകി വരുന്നത്.
വഞ്ചിക്കപ്പെട്ടു എന്ന ബോധത്താൽ തന്നെ സ്നേഹിച്ച്, സ്വീകരിച്ച മനുഷ്യന് തന്നെ വെറുപ്പാണെന്ന് ചിന്തിക്കുന്ന ശാരദയുടെ കഥയാണ് എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ടത്. ഒരു പുരുഷനാൽ വഞ്ചിതയായ സ്ത്രീ നശിച്ചവൾ ആണെന്നും, അവളെ സമൂഹം വെറുക്കാൻ മാത്രമേ പാടുള്ളു എന്നുമുള്ള പാപബോധവും അതുമൂലമുള്ള ആത്മനിരാസവും വെറും ബുദ്ധിമോശമാണെന്ന് കാണിച്ചു തരുന്ന കഥാന്ത്യം. "സെക്കന്റ് ഹാൻഡ്" ഗുഡ്സ് ആണ് തന്റെ പങ്കാളി എന്ന് പറയുന്ന, അവളെ ചതിച്ച കവിയോട്, തനിക്കെല്ലാം അറിയാമെന്ന് പറയുന്ന ഭർത്താവ്. അതുകേട്ട് ചൂളിപ്പോകുന്ന കവി. 1945ൽ കേരളത്തിൽ എഴുതപ്പെട്ട ഒരു പുസ്തകത്തിൽ ഇങ്ങനെയൊക്കെ നമുക്ക് വായിക്കാൻ കഴിയുന്നു എന്നത് തന്നെയാണ് ബഷീർ എന്ന എഴുത്തുകാരന്റെ ഔന്നത്യം. തൊണ്ണൂറുകളിൽ ഇറങ്ങിയ ചില മലയാള സിനിമകളുടെ സംവിധാനകേസരികൾക്ക് ഇതിന്റെ നാലിലൊന്ന് പുരോഗമനം ഉണ്ടായിരുന്നെങ്കിൽ എന്നാശിച്ചു പോയി.
സ്വാതന്ത്ര്യപ്രസ്ഥാത്തിൽ പങ്കെടുത്ത് ജയിലിൽ ആയ വിപ്ലവകാരിക്ക് കത്തയക്കുന്ന, മഠത്തിന്റെ കന്മതിലിനുള്ളിൽ തടവിൽ കഴിയുന്ന കന്യാസ്ത്രീയും ഇതുപോലെ തന്നെ ഒരത്ഭുതമായിരുന്നു. വെയിൽ ഉറയ്ക്കുമ്പോൾ നേർത്ത് നേർത്ത് ഇല്ലാതെ ആകുന്ന കോടമഞ്ഞു പോലെ ആണ് മോഹങ്ങളും, വികാരങ്ങളും കടിച്ചമർത്തി തിരുവസ്ത്രത്തിനുള്ളിൽ കഴിയുന്ന പെണ്ണിന്റെ അവസ്ഥ എന്ന് അരനൂറ്റാണ്ട് മുൻപ് ബഷീർ എഴുതിയിരുന്നു എന്നതും എഴുപതോളം വർഷങ്ങൾക്ക് ശേഷം നീതിക്ക് വേണ്ടി കന്യാസ്ത്രീകൾ സമരം ചെയ്യുന്നു എന്നതും ഒരു സമൂഹം എന്ന നിലയിൽ നമ്മുടെ അധഃപതനമാണ് തുറന്നുകാണിക്കുന്നത്. ഇതേ കഥയിൽ തന്നെ ജയിലിലേക്കും, മനുഷ്യൻ മനുഷ്യനിൽ അടിച്ചേൽപ്പിക്കുന്ന പീഡനങ്ങളിലേയ്ക്കും, വിപ്ലവകാരികളുടെ സ്വാതന്ത്ര്യദാഹത്തിലേയ്ക്കും ചുരുങ്ങിയ വാക്കുകളിലൂടെ നമ്മെ കൂട്ടിക്കൊണ്ട്പോകുന്നു. ഗവണ്മെന്റ് ദൈവമാണോ എന്ന് ചോദിക്കുന്ന, അമ്മച്ചിയോടും അപ്പച്ചനോടും താൻ ഉടൻ തിരിച്ചു വരും എന്ന് പറയണം എന്ന് മറിയാമ്മയ്ക്ക് കത്തെഴുതുന്നു ജോസഫ്, സ്വാതന്ത്ര്യത്തിന്റെ വില അറിയാത്ത ഇന്നത്തെ തലമുറയ്ക്ക് ഒരു പാഠമാണ്.
വിശപ്പ് സഹിക്കവയ്യാഞ്ഞിട്ടും ചായ വേണ്ട എന്ന് ദുരഭിമാനം പറഞ്ഞ ജന്മദിനക്കാരനും, ഡാക്കിട്ടർ വരാതെ പെറൂല്ല എന്ന് വാശിപിടിച്ചു ഐഷുട്ടിയുമൊക്കെ മനസ്സിൽ ഒരേ സമയം ചിരിയും, നൊമ്പരവും ഉണർത്തുന്നു.
வைக்கம் முஹம்மது பஷீரின் "ஜென்ம தி��ம்" சிறுகதை ஒர் அறிமுகம் / மதிப்புரை / விமர்சனம்
"அவன் இரண்டு கால்களையும் நீட்டி உட்கார்ந்து பார்த்தான். ஒரு காலை நீட்டி , ஒரு காலை மடக்கி பார்த்தான். இரண்டு கால்களையும் இணைத்து சப்பணங்கால் போட்டு அமர்ந்து பார்த்தான். சுவற்றில் சாய்ந்தவாறு ஒரு காலை நீட்டிப் பார்த்தான். எப்படி உட்கார்ந்த போதும் பசித்தது."
என்று ச.தமிழ் செல்வன் எழுதிய பாவனைகள் எனும் கதையில் வந்துள்ளதாக கதை சொல்லி பவா செல்லதுரை பல இடங்களில் சொன்னதை கேட்டிருக்கிறேன்.
பஷீரின் ஜென்ம தினம் எனும் சிறுகதை முழுக்க முழுக்க பசி எனும் கொடூரத்தை குறித்தே பேசுகிறது. பசி எனும் அவலத்தை குறித்து நாள்தோறும் பல கட்டுரைகளும் , கதைகளும், ஆக்கங்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
தன் பிறந்த நாள் அல்லது தனக்கு பிடித்த ஒரு நாளின் தொடக்கத்தில் குளித்து , உடை மாற்றி நாளை தொடங்குவதற்கு ஆயத்தமாக ஒரு சாயாவுக்கு என்ன வழி என்பதிலிருந்து இந்த கதை தொடங்குகிறது. ஒரு நாளில் ஒரு வேளைக்கு மட்டும் உணவுக்கு வழி கிடைத்தாயிற்று ஆனால் உடலும், மனமும், தலையும் ஏதோவொரு பதற்றத்தில் கடிகாரத்தின் அசைவுகளுக்கு நிகராக அதிகரித்து கொண்டே இருந்தன.
ஒரு நாள் சாயா கிடைப்பது நமக்கெல்லாம் சாதரணமானதுதான் ஆனால் அத்தனை சாதரணமானது இல்லை என பஷீர் உட்பட உலகம் போற்றும் அத்தனை எழுத்தாளர்களும் எழுதித் தீர்த்து விட்டனர். யோசித்து பாருங்களேன் ஒற்றை தேநீரின் வரவு இல்லாமல் பொழுது புலர்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. உடல் ஆரோக்கிய குறிப்புகளை தூக்கிக் கொண்டு சாயாக்களை வலுக்கட்டயமாக சுய தடை செய்து கொள்ளும் மனிதர்களை பற்றி நான் பேசுவதே இல்லை.
கல்லூரி காலங்களில் வறுமை காலங்கள் என சில நாட்கள் எனக்கு இருக்கவே செய்தன. ஒரு ஜும்ஆ தினத்தை நான் மறக்கவே மாட்டேன். அதுவொரு விடுமுறை நாட்கள் நிறைந்த ஓர் ஜும்ஆ தினம். அந்த தினத்துக்கே உரித்தான துள்ளலும், நல்ல உடையும், அத்தரும் , சுர்மாவும் இட்டு பள்ளிவாசலுக்கு முன்பே சென்று இடம் பிடித்து அமர்ந்து நானும் என் நண்பனும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டோம். எங்கள் அறையில் இருந்த 8 பேரில் ஆறு பேர் ஊருக்கு சென்றுவிட்டனர். அறை முழுக்க அலசி ஆராய்ந்ததில் கிடைத்த சில்லறைகளும் தீர்ந்து போயிருந்தன. Google Pay, Phone Pay இல்லாத காலக்கட்டம் அது. பணமதிப்பிழப்பு என்ற சொற்றொடர் புழக்கத்திற்கு வராத நாட்கள் அவை.
ஜும்ஆ முடித்து கடுமையான பசியோடு வெறுங்கையை பிசைந்து கொண்டு பள்ளிவாசலையே நோக்கியவாறு இறை உதவியை எதிர்பார்த்து காத்திருந்தோம். கிட்டத்தட்ட எல்லோருமே சென்று விட்டார்கள். நானும் அவனும் மட்டுமே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம். திடீரென ஓர் அழைப்பு.. பள்ளியின் மோதினார் கூப்பிட்டார். ஏழைகளுக்கு கொடுக்க சொன்ன சாப்பாட்டு பொட்டலங்கள் கொடுத்தது போக இரண்டு மீதமுள்ளது. நீங்கள் சாப்பிடுங்கள் என தந்தார். வாழ்வின் மறக்க முடியாத பசி குறித்த நினைவலைகள் இவை.
பசியெல்லாம் ஒரு மேட்டரா.? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இதனையே எழுதிக் கொண்டிருப்பீர்கள் என சீரியஸான விடயங்களை சட்டை செய்யாமல் நகர்ந்து விடும் மனிதர்களுக்கு முன்பு பசி Itself is a matter என சொல்ல வேண்டும் போலிருக்கிறது. கடந்த 6மாதங்களாக பெருநகரத்தில் வசிக்கிறேன். அபார்மெண்ட் வாழ்க்கை முதல் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள வில்லாக்களைப் போன்ற Gated Community க்கள் வரை ஒருநாள் கூட.. ஒரே ஒருநாள் கூட ஆணோ , பெண்ணோ, குழந்தைகளோ கூட வீடேறி வந்து பசிக்குது சாப்பாடு இருக்கா என்று கேட்டதே இல்லை. காரணம் சாப்பாடு நாம் கொடுப்பதே இல்லை என்பதை தாண்டி சாப்பாடு இருக்கா என கேட்பதற்கான வாசலையும் நாம் இறுக்கமாக மூடி வைத்திருக்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.
பசியின் உச்சத்தில் நாம் இருக்கும் போது சாப்பாட்டிற்கு ஒருவர் அழைப்பதெல்லாம் நமது காலத்தில் இல்லாத விஷயம். ஆனால் பஷீருக்கு அப்படி நிகழ்ந்தும் கூட நீண்ட தூரம் அந்த வீட்டை அடைந்து அழைத்தவர் வீட்டில் இல்லை என வீட்டார் சொல்வதைக் கேட்பது எத்தனை துயரமானது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தெரியும்.
பஷீரின் எல்லா கதைகளிலும் வறுமை, பசி போன்ற அனுபவக் கருத்துக்கள் மெல்லமாக இழையோடும். நகரத்தில், வாடகைக்கு அறை எடுத்து தங்கும் இடங்களில் பல நேரங்களில் அவர்களது பசியை போக்குவது ஒற்றை தேநீர் மட்டும் தான். சில போது ஒரு கடலை மிட்டாய். பஷீருக்கு ஒரு சாயாவும் பீடியும் போதுமானது.
மனிதர்களின் இயலாமையை பற்றி ஏராளமான கதைகள் வந்துள்ளன. காதல், வெறுமை, வறுமை, தனிமை, வெறுப்பு, துரோகம், பிரிவு, பசி, தோல்வி என எல்லாவற்றை பற்றியும் தனித்தனியாக ஆக்கங்கள் வந்துள்ளன. பசியோடு தனிமை சேர்ந்து கொள்ளும் ஓர் அவலத்தை பஷீரின் எழுத்துக்களில் நிறைய வாசித்திருக்கிறேன்.
ஒரு விடுமுறை நாளின் தனிமை அறை , குடிக்க தண்ணீரை தவிர வேறொன்றுமில்லை. எனக்கு பசிக்குது எனச் சொல்லக் கூட ஆட்கள் இல்லை. பள்ளிவாசலுக்கு சென்றால் நம்மைப் போலவே சாப்பாடை எதிர்பார்த்து ஒரு முதியவர் இருப்பார். அவருக்கு யாரோ ஒருவர் உணவு வாங்கித் தந்து விடுவார்கள். திரும்பி அறை வந்து சேர்ந்து விடுவேன். தனிமையும் பசியும் சேரும் Combo மிகக் கொடூரமானது. நேரம் அதி மெதுவாக நகரும். அறை முழுக்க அதுவரை இல்லாத உஷ்ணம் பரவத் தொடங்கும். அதோடு சேர்ந்து கொள்ளும் பகல் பொழுதும் வாட்டி வதைத்தது. கையில் 10 ரூ மட்டுமே. நிச்சயம் சாயாவால் வயிறு நிறையாது. கற்பூர வள்ளி பழம் 5 ரூபாய், கடலை மிட்டாய் 4 ரூபாய், குளிர்ந்த தண்ணீர் பாக்கெட் 1 ரூபாய் என சாப்பிட்டு மதிய நேரப் பொழுதை நகர்த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். ஊரிலிருந்து திரும்பி வரும் அறை நண்பர்கள் இரவு 1 மணிக்கு வந்து சேர்வார்கள். அவர்களிடம் தான் ஒரு தோசை சொல்லி அதற்காக காத்திருந்த நாட்களை இப்பொழுது நினைத்தாலும் கொஞ்சம் மயக்கமாகவே இருக்கிறது. பசியின்போது நேரத்தை எப்படி கடத்த முடியாமல் வதைபடுகிறோம் என படிப்படியாக பஷீர் எழுதியுள்ள என்னால் வாசித்து கடக்கவே முடியவில்லை.
பஷீரின் சொற்களுக்கு எப்போதுமே ஒரு கிரக்கம் உண்டு. அவர் எழுதிய கதைகளிலே எனக்கு மிக நெருக்கமானது "பால்ய கால சகி" எனும் நாவல் தான். It is a Master Piece from Basheer. மனித ஜீவிதத்தை மிக நேர்த்தியாக புட்டு புட்டு வைப்பதில் பஷீர் கை தேர்ந்தவர். மனிதன் எப்படிப் பட்டவன்.. என்பதை பஷீரின் சொற்களில் இருந்தே சொல்கிறேன்.
"வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும்..!"
(மெய்பொருள் வாசகர் வட்டம் சார்பாக வரும் 27ம் தேதி கலந்தாய்விற்கு இந்த கதைத் தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே தான் கதையை வாசித்து மதிப்புரை வழங்கியிருக்கிறேன். வாய்ப்புள்ள தோழர்கள் வாசித்து கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்)
கதை : ஜென்ம தினம் ஆசிரியர்: வைக்கம் முஹம்மது பஷீர் தமிழில் : குளச்சல் முஹம்மது யூசுஃப் புத்தகம் : பஷீரின் கதை தொகுப்புகள்
A nice little collection of short stories by Basheer
This collection includes the following short stories:
1. ജന്മദിനം 2. ഐശുകുട്ടി 3. ടൈഗർ 4. നൈരാശ്യം 5. കള്ളനോട്ട് 6. ഒരു ചിത്രത്തിന്റെ കഥ 7. സെക്കന്റ് ഹാൻഡ് 8. ഒരു ജയിൽ പുള്ളിയുടെ ചിത്രം
Loved reading each one of them. Highly recommended to all those who want to read a nice collection of short stories happening in the pre-independance India (Kerela).
ഇപ്പോഴും അർത്ഥവത്താകുന്ന വരികൾ... "ഭീകരതയുടെ നർത്തന വേദിയാണ് നമ്മുടെ മാതൃരാജ്യം! ഭൂമിയിലെ എല്ലാ രാജ്യങ്ങളും! പൗരന്മാരില്ല. ഭരണകർത്താക്കളും ഭരിക്കപ്പെടുന്നവരും. അടിമകൾ, അടിമകൾ!" ---ഒരു ജയിൽപ്പുള്ളിയുടെ ചിത്രം---
8 കുഞ്ഞിക്കഥകൾ നിറഞ്ഞ സമാഹാരം.ആദ്യം തന്റെ ജന്മദിനത്തെ പറ്റിയാണ് പറയുന്നത്. ജന്മദിനത്തിന്റെ അന്ന് പട്ടിണി കിടന്നത���ം ഭക്ഷണം മോഷ്ടിച്ചു കഴിച്ചതും ഒരു കൊച്ചു കുട്ടിയുടെ കൈയിൽ നിന്നും കടം വാങ്ങിയത് മുതലായ കാര്യങ്ങൾ. രണ്ടാമത്തെ കഥ വയറ്റാട്ടി വന്നിട്ടും ഡോക്ടർ വന്നാലേ പ്രസവിക്കൂ എന്ന് വാശിപിടിക്കുന്ന ഐഷുകുട്ടിയെ പറ്റിയാണ്. ആ കഥയിൽ ആവശ്യത്തിലധികം സ്ത്രീകളെ നർമ്മത്തിലൂടെ വിമർശിക്കുന്നുണ്ട് കഥാകൃത്ത്. ടൈഗർ എന്ന കഥയിലൂടെ തടിച്ചുകൊഴുത്ത എപ്പോഴും ഭക്ഷണം കിട്ടുന്ന പോലീസ് സ്റ്റേഷനിൽ കഴിയുന്ന നായനെ പറ്റി പറയുന്നതിലൂടെ പട്ടിണി കിടക്കുന്ന ജയിൽ പുള്ളികളെ കാണിച്ചുതരുന്നു. സമൂഹത്തിലെ ഭരണവ്യവസ്ഥയുടെ തകർച്ചയാണ് കള്ളനോട്ട് എന്ന കഥയിൽ കാണുന്നത്. ചതിക്കപ്പെട്ട ഒരു സ്ത്രീയെ സെക്കൻഡ് ഹാൻഡ് എന്ന കഥയിൽ കാണുമ്പോൾ ജയിൽ പുള്ളികളെ സ്നേഹിക്കുന്ന മറിയാമ്മയെ അവസാന കഥയിൽ കാണാൻ കഴിയും.
ജന്മദിനം, ഐഷുക്കുട്ടി, ടൈഗര്, നൈരാശ്യം, കള്ളനോട്ട്, ഒരു ചിത്രത്തിന്റെ കഥ, സെക്കന്ഡ് ഹാന്ഡ്, ഒരു ജയില്പുള്ളിയുടെ ചിത്രം എന്നീ കഥകളടങ്ങുന്ന ഒരു ചെറിയ പുസ്തകം. പണ്ടീ കഥകളൊക്കെയും വായിച്ചിരുന്നുവോ എന്ന് തീര്ച്ചയില്ല. എന്നാല് ഐഷുക്കുട്ടി എന്നും ഓര്മ്മയില് തന്നെയുണ്ടായിരുന്നു, പലപ്പോഴും പലരോടും പറഞ്ഞു ചിരിക്കാന് പാകത്തില്.