ஹாய் நட்பூக்களே, நான் ரியா மூர்த்தி. மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...
வித்தியாசமான முயற்சி வரவேற்கத்தக்கது... பென்டசி (fantasy), சஸ்பென்ஸ் , மேஜிக் கதை பிரியர்களுக்கு பொருத்தமானது .... கற்பனை உலகை கண்முன் விரிய வைப்பதான காட்சியமைப்பு கதையின் சிறப்பு ... வாழ்த்துக்கள் 💐💐💐