தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம்: Tamilil Naamum Thavarillamal Ezhuthalam (பேராசிரியர் பொற்கோவின் படைப்புகள் | Collection of works by Dr Pon Kothandaraman (Portko))
இன்றைய தமிழில் தவறில்லாமல் எழுத உதவும் வகையில் இந்த நூலில் விதிகள் முறையாக வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் நீங்களும் தவறில்லாமல் எழுத இந்த நூல் மிக நல்ல அளவுக்கு உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.இன்று பலர் எழுதும் எழுத்துகளில் மிகுதியாகப் பிழைகள் இருப்பதைக் காண்கிறோம். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் தொகை மிகுதியாகும் பொழுது இப்படிப் பிழைகள் மிகுதியாவதும் தவிர்க்க இயலாத ஒன்று என்றே கூறலாம். இருப்பினும் பிழைகள் மலியாமல் பிழைகளைக் குறைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற வேண்டும். அப்படிப்பட்ட முயற்சிகள் போதிய அளவுக்கு இங்கே நடைபெறவில்லை என்று சொல்வது தவறாகாது. நாம் காணும் பிழைகளில் மிகுதியான பிழைகள் சந்திப் பிழைகளாகவே இரĬ