லத்தீன் அமெரிக்கா - Born in blood and fire - தமிழில் ந.மாலதி
லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடு நாள் ஆசை... 1500 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான லத்தீன் அமெரிக்க வரலாறு சுருக்கமாகவும் மிக அடர்த்தியாகவும் பதிவு செய்யப்பட்ட புத்தகம் Born in blood and fire. இந்த புத்தகத்தை ஐந்து காலகட்டமாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.
1. காலனியாத்திக்க காலகட்டம் 2. தேசியவாதம் வலுப்பெற்ற காலம் 3. நவகாலனியாதிக்க காலம் 4. பனிப்போர் காலம் 5. நவதாராளவாதம்
முதலாவதாக காலனியாதிக்க காலம் 15 ம் நூற்றாண்டு இறுதாயில் போர்த்துகலும் ஸ்பெயினும் லத்தீன் அமெரிக்க நாடுகளை தங்கள் காலனிகளாக மாற்றுகின்றன 15 ம் நூற்றாண்டு தொடங்கி 19-ம் நூற்றாண்டு இறுதி வரை தங்கள் காலனிகளாக வைத்துள்ளனர். இந்த காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் நிலமும் இனமும் பல மாறுதல்களை அடைகிறது... ஆப்பிரிக்க அடிமைகளின் இறக்குமதி மற்றும் இனக்கலப்பின் விளைவாக லத்தீன் அமெரிக்க நிலப்பரப்பு பல்கலாச்சார மக்களை கொண்டதாக மாறுகிறது. இந்த காலகட்டதின் ஆரம்பத்தில் இன்கா, ஆஸ்டெக் மற்றும் மாயன் பேரரசுகள் வீழ்தப்பட்டு ஸ்பானிய-அமெரிக்கா மற்றும் போர்த்துகல்லின் காலனியாக பிரேசிலும் உருவாகியது.
காலனியாதிக்கத்திற்கு எதிராக போராட தேசியவாதம் மற்றும் பழமைவாத சக்திகள் தனித்தனியாக போராடியிருக்கிறார்கள். 400 வருட இனக்கலப்பில் உருவான, லத்தீன் அமெரிக்க வாழ் ஐரோப்பிய அமெரிக்க Elitist group தேசியவாதத்தை முன்னெடுத்தனர். இந்த குழு அமெரிக்கானோஸ் என்ற குடையின் கீழ் பூர்வகுடியினர், ஆப்பிரிக அமெரிக்கர்கள், ஐரோப்பிய கலப்பினர் ஆகியவர்களை ஒருங்கிணைத்து போராடிய நாடுகளில் சில வெற்றிகளை அடைந்தனர். காலனியாதிக்கத்திலிருந்து வெளியேற தேசியவாதம் உதவியது. மேலும் நெப்போலியனின் ஸ்பெயின் மீதான படையெடுப்பும் அதன் வெற்றியும் ஸ்பானிய அமெரிக்காவில் தேசியவாத சக்திகளுக்கு உதவியது...ஆனால் இந்த வெற்றி பூர்வகுடி மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் பெரிய அளவில் உதவவில்லை. Caudillo என்று அழைக்கப்பட்ட ஸ்பானிய-அமெரிக்கர்கள் ஆதிக்கம் பெற்றனர் அவர்களே தொடர்ந்து ஆட்சியில் நீடித்தனர்.
அடுத்ததாக caudillo களின் செல்வாக்கு குறைய தொடங்கி மீண்டும் தேசியவாதம் ஓங்கிய 1880 முதல் 1930 வரை நவகாலனியாதிக்க காலமாக இருந்திருக்கிறது. அரசியல் சுதந்திரம் இருந்த போதிலும், இராணுவத் தலையீடுகளும், பொருளாதார தாக்கங்களும் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து வந்திருக்கிறது. இந்த காலத்தில் “தன்னல ஆட்சிக் குழுகள்” , அதாவது குறிப்பிட்ட சில நிலவுடைமையாளர்களின் கையில் ஆட்சி இருந்திருக்கிறது.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து லத்தீன் அமெரிக்க இராணுவம் பங்கு பெற்றிருக்கிறது, இதன் விளைவாக இராணுவ தளபதிகள் ஐக்கிய அமெரிக்க ஆட்சியாளர்களிடம் நெருக்கமாக இருந்திருக்கின்றனர் இதுவே பனிப்போர் காலங்களில் சோசியலிச கொள்கைகளை முன்னெடுக்கும் புரச்சிக் குழுக்களை ஒழிப்பதில் ஐக்கிய அமெரிக்காவிற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர். மேலும் பல சோசியலிச சாயல் கொண்ட ஆட்சி கவிழ்ப்பு நிகழ்ந்து லத்தீன் அமெரிக்கா முழுவதும் இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற பல வன்முறைகளை அந்தந்த நாட்டின் இராணுவம் பொண்டே ஐக்கிய அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.
இறுதியாக நவதாராளவாத காலத்தில் கம்யுனிச சிந்தனை கொண்ட புரட்சிக்குழுக்கள் இல்லாமல் போனது, மேலும் உலகமயமாக்களாலும் லத்தீன் அமெரிக்கா ஒரு சில முன்னேற்றமடைந்தது. எல்லா பலன்களும் மேல்தட்டு மக்களுக்கும் நடுத்தர குடும்பத்திற்கு மட்டுமே கிடைக்கப்பெற்றது. மறுபுறம் அதனுடைய வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டுள்ளது, பல பழங்குடியினர் தங்களின் நிலங்களை இழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்காவின் முக்கிய வளமான அமேசான் காடுகள் விவசாய நிலங்களுக்காக அழிக்ப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் பிழப்பு தேடி ஐக்கிய அமெரிக்காவை நோக்கி குடிபெயர்ந்துள்ளனர். தடையில்லாத திறந்த சந்தைக்கு எதிராக தற்போது பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது இது லத்தீன் அமெரிக்காவின் நிலையை மாற்றுமா என்ற கேள்வியுடன் இந்த புத்தகம் முடிகிறது
பி.கு: 400 பக்கங்களில் 500 ஆண்டு கால வரலாற்றை சுருக்குவது கடினமான ஒன்று என்ற போதிலும் இந்த புத்தகம் அதை நன்றாகவே செய்துள்ளது... என்ன எனக்கு தெரிந்த தமிழுக்கே எழுத்து பிழை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.