Jump to ratings and reviews
Rate this book

க்ளிக்: கச்சிதமான வெற்றியைச் சாத்தியமாக்கும் வாழ்வியல் உத்திகள்

Rate this book
‘க்ளிக்’

இந்த மேஜிக் சத்தம் உலகில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கேமெராவிலிருந்து வருவதுமட்டும் ‘க்ளிக்’ அல்ல, எல்லாமே சரியாக அதன் இடத்தில் சரியாக அமைவதுதான் ‘க்ளிக்’, அதாவது, கச்சிதமான வெற்றி.

பெரிய சாதனையாளர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பிரமாதமான ‘க்ளிக்’ நமக்குத் தெரிகிறது. ‘அசத்திட்டான்ய்யா’ என்று அதை நினைத்து மகிழ்கிறோம்.

ஆனால், அந்த ‘க்ளிக்’ ஒலிக்குப் பின்னால் எத்தனை ‘அடச்சே’கள் இருந்தனவோ? யாருக்குத் தெரியும்?

உண்மையில் நாம் ஏங்கவேண்டியது அந்த ‘க்ளிக்’குக்காக அல்ல, அதன் பின்னே இருக்கிற கதைக்காக. அதைப் புரிந்துகொண்டு, அவர்கள் தோல்விகளை எப்படிச் சமாளித்தார்கள், சிறிய வெற்றிகளை எப்படிக் கொண்டாடினார்கள், அங்கிருந்து பெரிய வெற்றிக்கு எப்படி முன்னேறினார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டால், நமக்கும் அதேமாதிரி சூழல் வரும்போது அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி முன்னேறலாம்.

பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் வந்த 'க்ளிக்'குகளை அலசி ஆராய்ந்து வெற்றிப்பாடங்களைக் கற்றுத்தரும் நூல் இது.

52 pages, Kindle Edition

Published May 17, 2019

7 people are currently reading
6 people want to read

About the author

என். சொக்கன்

104 books53 followers
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (54%)
4 stars
5 (22%)
3 stars
4 (18%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Author 16 books4 followers
January 21, 2024
அருமையான நூல்

பொதுவாகவே வெற்றியாளர்களின் வரலாற்றை வாசிக்க பெரும் விருப்பமுள்ள எனக்கு இந்நூல் வரப்பிரசாதமாக அமைந்தது.

தெளிந்த நடையுடன் கூடிய சுவாரஸ்யமான எழுத்து! இனிய வாசிப்பனுபவத்தை நல்கிய ஆசிரியருக்கு நன்றியும் வாழ்த்தும்
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.