மரணத்திற்குப் பின்..... செத்துத் தொலைத்த பிறகு, ஆவி என்றோ ஆன்மா, பூதம், பேய், பிசாசு என்றோ ஏதோ ஒரு வடிவில், கடவுளைப் போலவே மரணமில்லாப் பெருவாழ்வு வாழ நம் எல்லோருக்கும் ஆசைதான். அந்த ஆசைதான் சொர்க்கம், மறுபிறவி, இறைவனின் திருவடி நீழல் என்று எதை எதையோ நம்மவர்களைக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆவி முதலானவை இருப்பது உண்மை என்று ஏற்றாலும், அவற்றிற்கு ஐம்புல நுகர்ச்சி உண்டா, பரு உடலுடன் வாழ்ந்தபோது பெற்ற அனுபவங்களை அசை போடும் திறன் உண்டா, உணர்ச்சியுண்டா என்பன பற்றியெல்லாம் நம்மவர்கள் சிந்திப்பதில்லை. ஆயினும், நம்மில் பெரும்பாலோர் அவற்றை நம்புகிறார்கள். காரணங்கள்..... இறந்த பிறகு என்ன ஆவோம் என்று யோசிப்பதால் தோன்றும் அச்சம்! அனுபவித்த சுகங்களை மீண்டும்