அகரமுதல்வன் (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1992) தமிழில் புனைவுகளும் கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையில் பணியாற்றுபவர். இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்பவர். ஈழநிலத்தின் பின்னணியில் படைப்புகளை உருவாக்குகிறார்.
ஆசிரியர் - அகரமுதல்வன் குறுநாவல்கள் தொகுப்பு நூல்வணம் பதிப்பகம் 192 பக்கங்கள்
போர் என்பது நாம் அறிந்தவரை ஒரு வரலாறு மட்டுமே. ஆனால் போர் என்பது அது மட்டுமே கிடையாது. போர் என்பது ஒரு நெஞ்சில் ஆழமான கோடுகிழிக்கும் ஒரு சுடுகத்தி. அந்த வடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த வழியும் வேதனையும் புரியும். போர் இந்த உலகில் எந்த மூலையில், யாருக்காகவோ, எதற்காகவோ நடக்கலாம் ஆனால் அங்கு எல்லாம் ஒன்று மட்டும் நிச்சயம் - அது மனித குலத்தின் ஓலம். அந்த ஓலம் போர் முடிந்து எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சிலர் மனதிலும், சிலர் வாழ்விலும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சராசரி மனிதன் தன் துன்பவேலையில் அவன் தன் பசுமையான நினைவுக்கூட்டில் தான் சேமித்து அடைக்காத்து வைத்த இன்பங்களை நோக்கி பறந்து செல்கிறான். ஆனால் போர் கண்ட இவர்களுக்கோ அந்த கூடுகள் பிணந்திண்ணி கழுகுகளாலும், சில அமைதி புறாரக்களாலும் சூரையாப்பட்டு சிதைந்து நிகழ் உலகத்துக்குள்ளேயும் நிம்மதியில்லாமல், கடந்த வாழ்வின் நினைவுகளுக்குள்ளும் செல்ல முடியாமல் அந்தரத்தில் தள்ளாடும் நிலையை எவராலும் கற்பனையாக சொல்லிவிட முடியாது, அந்த வாழ்வில் இருந்து வந்த ஒருவரால் மட்டுமே ரத்தமும் சதையுமாக அந்த வாழ்வை விவரிக்க முடியும். அப்படி ஒரு தொகுப்பே இந்த உலகின் மிக நீண்ட கழிவறை . அகரமுதல்வன் எங்கு பிறந்திருந்தாலும் சரி, அவர் தமிழ் இலக்கியம் எழுதும் ஒரு தமிழன்.
அகரமுதல்வனின் எழுத்து என்னை ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஒரு சேர மூழ்கியெடுத்தது. அவரின் எழுத்துநடை என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவர் எழுதிய வாழ்வு என்னை அதிர்ச்சியில் உளுக்கியது. கவிநடையில் உரைநடை எழுதுவது மிக அரிது மிக கடினம். ஒரு குயவன் தன் மண்குதிரைக்கு உயிர் கொடுப்பது போல. அந்த குயவனுக்கும் குதிரைக்கும் ஒரு ரகசிய உறவும் உரையாடலும் உண்டு. அப்படி தான் அகரமுதல்வனின் எழுத்து நடையை நான் பார்க்கிறேன். அவரின் கவிநடை எந்திரத்தை வெகு லாவகமாக உபயோகிக்கிறார். சில இடங்களில் எழுத்தில் கடக்க முடியா உணர்வுகளை கவி வழி கடந்து விடுகிறார். உதாரணமாக "அகல் " கதையில் கைதான போராளிகளின் மனநிலையை கூறுகிறார் " அடிக்கடி அழுகிற மனிதர்களின் கண்ணீரை பூமி சபிக்கிறது. நீதியானது கைதிகளை கைவிடுகிறது ". சில இடங்களில் அங்கு தெறிக்கும் ரத்தத்தை நம் மேல் படாமல் இருக்க ஒரு திரைசீலையாக்கி விடுகிறார்."நெடுநீர் முழை " கதையில் பதுங்கி தாக்கும் ஒரு ஈழப்போராளியின் எண்ண ஓட்டதை இப்படி கூறுகிறார் " என் கழுத்திலும் ஜெபமாலை தொங்கிகொண்டிருக்கிறது. சிலுவையும் சயணைட் குப்பியும் கழுத்தில் முட்டிமுட்டி தேய்ப்படுகிற நிமிடக்குழவில் எனக்குள் நகைச்சுவை எழும். என்னை ஜெபமாலை காப்பாற்றுமென அம்மாவும் சயணைட் குப்பி காப்பாற்றுமென நானும் நம்பினோம் ".
அகரமுதல்வனின் கதை சொல்லும் பாங்கு சற்று மாறுபட்டது. காலத்தில் முன்னும் பின்னும் நகர்ந்து கதை சொல்கிறார். சில நேரங்களில் ஒரே கதை மாந்தரின் மூன்று வெவ்வேறு காலகட்டத்தை முன்னும் பின்னுமாக கூறுகிறார் { அகல் }. ஒரு நிகழ்வை விவரித்து அந்த நிகழ்விற்கான காரணத்தை கதையின் வேறு இடத்தில் வேறு கதை மந்தரை கொண்டு விவரிப்பது புதுமையான முயற்சி { எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல் }.
கடல் - மழை இவ்விரண்டும் அகரமுதல்வனின் கதைகள் முழுக்க பரவிக்கிடக்கின்றன. கடல் மேல் அவருக்கு உச்சபட்ச கோபம். மழை மேல் அவருக்கு பேரன்பு. அவர் கதை நெடுக மழை பெய்துகொண்டே இருக்கிறது. அது போராளிகளின் பயிற்சி முகாமானாலும் சரி, துரோகம் இளைக்கும் நிலத்திலும் சரி, பிணகுவியல்கள் எலும்பு கூட்டங்களாக புதைந்து போன ஆமை குளத்திலும் சரி, நெஞ்சோடு ஆயுதத்தை அனைத்து மரணத்தின் வாசர்படியில் ஊர்ந்து செல்லும் மண்ணிலும் சரி, சராசரி நிலத்துடைய பெண்ணின் கைகளை கோர்த்து கடலை வேறு முனையில் இருந்து பார்க்கும் போதும் சரி,மழை விடாமல் பெய்து கொண்டே இருக்கிறது. ஆம்," மேலிருந்து வீழும் மழைத்துளியை கீழிருந்து எழும்பிய நீர்த்துளிகள் அந்தரத்தில் முத்தமிட்டு கரைந்தன ".
தமிழ் ஈழ மக்களை பற்றிய கதைகள் என்பதால் இதற்கு புலம் பெயர்வு இலக்கியம் என்று முத்திரை குத்தி விடாதீர்கள். இது தமிழ் ஈழ மண்ணில் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ ஆசைப்பட்ட ஒரு சில சாதாரண மக்களை பற்றிய கதைகள். போர் நடந்துகொண்டு இருந்தாலும் அங்கு காதல், காமம், இன்பம், உறவு, கோபம், வஞ்சம், கொலை, பிரிவு, என எல்லா மனித உணர்வுகளுக்கும் அங்கும் இடம் உண்டு என்று கூறுவதே இந்த கதைகள். நெடுநீர் முழை கதையில் போர் முனையில் ஒரு போராளியின் கண்ணுக்கு முன்னே ஒரு தாமரை சிலிர்த்து விரிகிறது. அவன் வேண்டுவது மழையின் வேகம் அந்த தாமரையை முறித்துவிட கூடாது என்பதும், வீழும் குண்டு அதன் மீது வீழக்கூடாது என்பது மட்டுமே. இந்த உணர்வைத்தான் அகரமுதல்வன் கூற முயல்கிறார் தன் கதைகள் மூலம்.
நிதமும் சூரியன் மறையத்தான் போகிறது, நிலவு ஒளிரத்தான் போகிறது, பூக்கள் மலரத்தான் போகிறது, துவக்குகள் வெடிக்கத்தான் போகிறது, இடிமுரசும், மீராவை போல பல போராளிகள் இம்மண்ணில் வீழத்தான் போகிறார்கள், மழை பெய்து கொண்டே இருக்கும், கடலும் தன் பங்கிற்கு பேரலைகள் கொண்டு இவர்களை வதைத்து கொண்டுதான் இருக்கும், அங்கும் ஒரு அகரமுதல்வன் பிறக்கத்தான் போகிறான். கேள்வி கேட்பதற்கு அல்ல, நாம் ஏன் அன்று கேட்க வேண்டிய நேரத்தில் கேள்வி எழுப்பாமல் ஒரு கரும்பாறையை போல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு இன்று கதையாய் மட்டும் கேட்கிறோம் என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளத்தான். இதற்கு வெட்கி தலைக்குணிந்து அவரிடம் மன்னிப்பு மட்டும்தான் இப்பொழுது நம்மால் கேட்க முடியும்.
ஆசிரியர் - அகரமுதல்வன் குறுநாவல்கள் தொகுப்பு நூல்வணம் பதிப்பகம் 192 பக்கங்கள்
போர் என்பது நாம் அறிந்தவரை ஒரு வரலாறு மட்டுமே. ஆனால் போர் என்பது அது மட்டுமே கிடையாது. போர் என்பது ஒரு நெஞ்சில் ஆழமான கோடுகிழிக்கும் ஒரு சுடுகத்தி. அந்த வடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த வழியும் வேதனையும் புரியும். போர் இந்த உலகில் எந்த மூலையில், யாருக்காகவோ, எதற்காகவோ நடக்கலாம் ஆனால் அங்கு எல்லாம் ஒன்று மட்டும் நிச்சயம் - அது மனித குலத்தின் ஓலம். அந்த ஓலம் போர் முடிந்து எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சிலர் மனதிலும், சிலர் வாழ்விலும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு சராசரி மனிதன் தன் துன்பவேலையில் அவன் தன் பசுமையான நினைவுக்கூட்டில் தான் சேமித்து அடைக்காத்து வைத்த இன்பங்கள�� நோக்கி பறந்து செல்கிறான். ஆனால் போர் கண்ட இவர்களுக்கோ அந்த கூடுகள் பிணந்திண்ணி கழுகுகளாலும், சில அமைதி புறாரக்களாலும் சூரையாப்பட்டு சிதைந்து நிகழ் உலகத்துக்குள்ளேயும் நிம்மதியில்லாமல், கடந்த வாழ்வின் நினைவுகளுக்குள்ளும் செல்ல முடியாமல் அந்தரத்தில் தள்ளாடும் நிலையை எவராலும் கற்பனையாக சொல்லிவிட முடியாது, அந்த வாழ்வில் இருந்து வந்த ஒருவரால் மட்டுமே ரத்தமும் சதையுமாக அந்த வாழ்வை விவரிக்க முடியும். அப்படி ஒரு தொகுப்பே இந்த உலகின் மிக நீண்ட கழிவறை . அகரமுதல்வன் எங்கு பிறந்திருந்தாலும் சரி, அவர் தமிழ் இலக்கியம் எழுதும் ஒரு தமிழன்.