கூட்டுச் சமூகத்தில் தங்களை முதன்மைப்படுத்திக் காட்ட செய்யும் செயலே வன்மமாக வெடிக்கும்.
ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் வழக்கம் போல் ஒருத்தி ஆராதிக்கப்படுகிறாள் அதனால் மற்றொருத்தியின் மனதில் வெறுப்பின் கணல் கொழுந்துவிட்டு எரிகிறது, எரிவதை அணைக்காமல் வீட்டில் இருக்கும் ஒரு பெரியவர் அதன் உக்கிரத்தை குறையாமல் பார்த்து கொள்கிறார்.
வீட்டின் செல்லராணியான ஸ்ரீநிதி பயப்படுவது கிருஷுக்கு மட்டுமே, சிலவருடங்களாக அக்கா மகள் ஸ்ரீநிதியிடம் காதல் கொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருப்பவனுக்கு மற்றொரு முறை பெண்ணான மீராவின் மனதில் தன்னால் சலனம் உண்டாகியிருப்பது தெரியாமல் போகிறது.
தான் காதலிக்கும் கிருஷ் ஸ்ரீநிதியை விரும்புவதை அறிந்த மீரா அந்த உறவை உடைக்க பலவகையில் முயல்கிறாள்.
ஸ்ரீநிதியின் மேல் கோபத்தில் இருக்கும் மீராவின் நடவடிக்கை அவளையே பாதித்துக் கோமா வரைக்கும் கொண்டு செல்கிறது.
பாட்டி தன்னிடம் பாராமுகத்தைக் காட்டுவது ஏன் என்று தெரியாமல் தவிக்கும் ஸ்ரீநிதி,தான் ஓர் அனாதை என்று தெரியும்போது அக்குடும்பத்தை விட்டு பிரிய முடிவெடுத்தவளை அங்கேயே கட்டிப்போடுவது மாதிரி ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இவ்வளவு ஆண்டுகளாகப் பெரியப்பா என்று கூப்பிட்டு வந்தவருக்கும் அவரின் காதலிக்கும் தான் பிறந்தேன் என்பதை அறிந்தவளுக்கு அவரைத் தந்தை என்று கூப்பிட வாய்வரவில்லை.
தன் தந்தை தான் ஸ்ரீநிதிக்கும் தந்தை என்றான பிறகு கோமாவில் இருந்து மீண்டெழுந்த மீராவின் மனது தெளிவாகிறது.
காதலித்தவர்கள் இணைகின்றனர். தவறு செய்த குடும்ப உறுப்பினர்களின் தவறுகள் மன்னிக்கப்படுகிறது.