காதல் கதைகளையோ, துப்பறியும் கெட்டிக்காரத்தனத்தையோ எழுதுபவன் அல்ல நான். புரிந்தும் புரியாத சூட்சுமத்தை உள்ளடக்கிய மேட்டுக்குடி கதைகளும் அல்ல. இந்தக் கதைகள் நூறு. எழுபது, அறுபது, வருடங்களுக்கு முந்தைய சேதுநாட்டு மக்களைப் பற்றியவை. உறவுகளை பாதுகாத்த, நட்புக்கு உயிர்கொடுத்த, ஜாதிபேதம் பாராட்டாத, எதிரிகளை நேருக்குநேர் நின்று சாய்த்த, மானுடம்போற்றிய மக்களைப் பற்றியவை. எளிய மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, அவர்கள் மொழியில் பேசுபவை.
வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழியில் பிறந்தவர். தற்போ இவர் பாயும் புலி (2015 திரைப்படம்) மற்றும் சேதுபதி (2016 திரைப்படம்) ஆகியவற்றில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், சினிமா என்று பல்துறை வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்.
நீளும் ரெக்கை, வேட்டை போன்றவை இவரது சிறுகதை நுால்களாகும். பட்டத்து யானை, குற்றப்பரம்பரை (முன்னதாக கூட்டாஞ்சோறு என அழைக்கப்பட்டது) மற்றும் குருதி ஆட்டம் ஆகியவை இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் அட்டகாசமாக வந்திருக்க வேண்டிய ஒரு இரண்டாம் பாகம் , அவசரகதியில் முடிக்கப்பட்டிருக்கிறது . எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி என்றால் குற்றப்பரம்பரை நியாபகத்திற்கு வரும் என்று சொல்பவர்கள் பட்டது யானை நாவலை படிக்காதவர்கள் என்றே நான் சொல்லுவேன் . பட்டது யானை படித்த யாரும் ரணசிங்கத்தை மறக்கமாட்டார்கள் . தமிழில் ஒரு யுத்த களத்தை இவ்வளவு நேர்த்தியாக பட்டதுயானை புத்தகத்தை தவிர்த்து எந்த புத்தகமும் விவரிக்கவில்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை . அதுவும் மும்முனைகளில் நடக்கும் கொரில்லா போர்முறை தாக்குதலை வாசகர்களுக்கு குழப்பமில்லாமல் விவரிப்பதில் எழுத்தாளர் தன் தனித்திறமையை தன்னிரகரற்று வெளிப்படுத்தியிருந்த புத்தகம் தான் பட்டது யானை . அப்படிப்பட்ட புத்தகத்தின் அடுத்த பாகம் புத்தகம் அதை விட 10 மடங்காவது இருக்கும் என்று வாசகராய் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை . பட்டது யானையின் அடுத்த பாகமாக ஆரம்பிக்கும் குருதி ஆட்டம் ஒரு மாபெரும் கதைக்களத்தையும் , அதன் முந்தைய பாகத்தின் பகை , கொலை , வேகத்தையும் , எதிர்பார்ப்பையும் சுமந்து ஆரம்பித்தது . கதாபாத்திர வடிவமைப்பு , கதை நகரும் விதம் என்று அனைத்தும் மற்றுமொரு மாபெரும் நாவலை நோக்கி நகர ஆரம்பிக்க , நாவல் 100 பக்கத்திற்குள் கதை மாந்தர்களே எதிர்பாராவண்ணம் முடிந்து விடுகிறது . இப்படி ஒரு கதைக்களம் அடுத்ததடுத்த பாகங்களில் கிடைப்பதென்பது அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும் . அப்படி அமைந்தும் இந்த நாவலை ஒரு குறுநாவலாக எழுதிய , அப்படி எழுதினால் போதும் என்று எண்ணிய எழுத்தாளரின் எண்ணம் நம் துரதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் .
புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயத்தின் பக்கங்கள் திரும்ப திரும்ப விருவிருப்பாகவும், இறுதி அத்தியாயங்களை நெருங்க திக் திக் என மனதில் பதற்றத்தையும் உருவாக்குகிறது ‘குருதி ஆட்டம்’.
ஆப்பநாட்டு மாவீரனான ரணசிங்கம் உள்ளூரை சேர்ந்த சில கைக்கூலிகள் வெள்ளைக்காரனுடன் சேரந்துக்கொணடதால் கொல்லப்படுகிறான். தந்தையின் மரணம் குழந்தை துரைச்சிங்கத்தை ஊமையாய் மாற்றிவிடுகிறது. வெள்ளைகார ஆதிகாரியான டி.ஸ்.பி. ஸ்காட் ரணசிங்கத்தின் மகனான துரைசிங்கத்தையும் அவள் அத்தையும் ரணசிங்கத்தின் தங்கையுமான அரியாநாச்சியையும் மலாயா காட்டிற்க்கு நாடு கடத்துகிறான்.
திரும்பி வந்து தன் அண்ணனை கொன்றவர்களையும் அதற்க்குத் துணைபோனவற்களையும் பழி வாங்குவேன் என்று சபதமிட்டு சென்ற அரியநாச்சி 20 வருடங்கள் கழித்து இந்தியாவிற்க்கு தனது அண்ணன் மகன் துரைசிங்கத்திற்க்கு அனைத்துவிதமான பயிர்ச்சிகளையும் கற்றுத் தந்து வெறிபிடித்தவள் போல நுழைகிறாள்.
அவள் இந்தியாவிற்ககுள் வந்தாளா? அவள் அண்ணனை கொன்று அண்ணன் மகனை ஊமையாக்கியவர்களை பழித்தீர்த்தாளா? என்பது தான் கதை.
நான்கு இடங்களில் நடக்கும் வேவ்வேறு மனிதர்களுக்கு நடக்கும் நிகழ்வுகளையும் அவர்களகன் எண்ணங்களையும் தொடர்ச்சியாக வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படதாவாறு சொல்லிக்கொண்டே வந்து இறுதியில் அனைவரையும் ஒரே புள்ளியில் ஒரே இடத்தில் சேர்க்கும் விதம் ஆசிரியரின் எழுத்தில் இருக்கும் சாமார்த்தியத்தை வெளிபடுத்துகிறது.
குறுதியாட்டம் - புத்தகத்தின் தலைப்புக்கேற்ப்ப இதில் வரும் கதாபாத்திரங்களும் பழிவுணர்ச்சியுடன் பல ஆண்டுகாலமாய் தங்கள் வாளிர்க்கு இரத்த காவு வாங்க துடிதுடிக்கும் நொடிகளை படிக்கும்போது அவ்வளவு ஆர்வமாய் புத்தகத்தை கீழேக்கூட வைக்கமுடியாத விருவிருப்பை வாசகர்களுக்கு தூண்டும் ஆற்றல் உடையவை.
ஆனால் எனக்கு புத்தகத்தின் நிறைவு பகுதி சிறு ஏமாற்றத்தை கொடுத்தது. இறுதி கட்டத்தை முடிக்கவேண்டும் என்பதற்க்காக எழுதியது போல இருந்தது ஒருசிறு ஏமாற்றம்.
இது நான் வாசிக்கும் வேலராமமூர்த்தியின் இரண்டாவது புத்தகம் . முதல் புத்தகம் குற்றப் பரம்பரை . அந்த புத்தகம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் . அப்படி ஒரு எழுத்து . அதில் வரும் வேயன்னா கதபாத்திரத்தை அந்த புத்தகம் படித்தவர்கள் யாராலும் மறக்க இயலாது. நிச்சயம் அந்த புத்தகத்தை அனைவரும் ஒருநாள் வாசிக்க வேண்டும் .
"குருதி ஆட்டம்" நடிகர் மற்றும் எழுத்தாளர் திரு. வேல ராமமூர்த்தி அவர்களின் சிறந்த படைப்புகளில் ஒன்று.
நான்கு இடங்களில் நடக்கும் வெவ்வேறு மனிதர்களுக்கு நடக்கும் நிகழ்வுகளையும், அவர்களின�� எண்ணங்களையும், தொடர்ச்சியாக வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படதாவாறு சொல்லிக்கொண்டே வந்து இறுதியில் அனைவரையும் ஒரே புள்ளியில் ஒரே இடத்தில் சேர்க்கும் விதம் ஆசிரியரின் எழுத்தில் இருக்கும் சாமார்த்தியத்தை வெளிபடுத்துகிறது.
ஆப்பநாட்டு மாவீரனான ரணசிங்கம் உள்ளூரை சேர்ந்த சில கைக்கூலிகளின் உதவியுடன் வெள்ளைக்காரனால் கொல்லப்படுகிறான். தன் அண்ணனை கொன்றவர்களையும் அதற்க்குத் துணைபோனவர்களையும் பழி வாங்குவேன் என்று சபதமிடுகிராள் மாயழகி. 20 வருடங்கள் கழித்து தன் அண்ணனை கொன்றவர்களை, தன் அண்ணன் மகனுடன் சேர்ந்து பழி தீர்த்தாளா? என்பது தான் கதை.
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களான அரண்மனை, லோட்டா, தவசியாண்டி, கணக்குப்பிள்ளை ரத்தனாபிஷேகம், வெள்ளையம்மா போன்றவர்கள் இன்னும் நிறைய பக்கங்களில் வந்திருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
புத்தகத்தின் தலைப்புக்கேற்ப்ப இதில் வரும் கதாபாத்திரங்களும் பழிவுணர்ச்சியுடன் பல ஆண்டுகாலமாய் தங்கள் வாளுக்கு இரத்த காவு வாங்க துடிதுடிக்கும் நொடிகளை படிக்கும்போது, அவ்வளவு ஆர்வமாய் புத்தகத்தை கீழேக்கூட வைக்கமுடியாத விருவிருப்பை வாசகர்களுக்கு தூண்டுகிறது.
இந்த புத்தகம் படிக்க ஆரம்பித்த முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் முன்புவரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. கடைசி அத்தியாயம் வந்தவுடன் சட்டென்று முடிந்தது போல தோன்றியது. இதற்கு காரணத்தை ஆசிரியர் முன்பே சொல்லி இருந்தாலும், இறுதியில் அவசர அவசரமாய் கதை முடிவு பெறுவது சற்று ஏமாற்றம்தான். ஆனாலும் தமிழ் நாவல்களில் திரு. வேல இராமமூர்த்தி அவர்களின் இந்த படைப்பு முக்கியமாக படிக்க வேண்டிய ஒன்று.
வெள்ளையர்களை எதிர்த்ததால் ரணசிங்கம் உள்ளூரில் சில துரோகிகளின் உதவிகளால் ஆங்கிலேயரால் கொல்லப்படுகிறான். பின்பு ரணசிங்கத்தின் நாலு வயது ஊமை மகன் துரைசிங்கம் தங்கை அரியநாச்சி கப்பலில் ஏற்றி நாடுகடத்தப்படுகிறார்கள். தகப்பனைக் கொன்ற சதிக்கு பழிதீர்க்க தேசம் திரும்புகிறான் ஊமையன். வந்திறங்கிய ஊமையன் துரைசிங்கம் வைக்கோல் பிரி சுற்றி ஆடிய ஆட்டமே குருதி ஆட்டம்.
இந்த புத்தகம் படிக்க ஆரம்பித்த முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் முன்புவரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. கடைசி அத்தியாயம் வந்தவுடன் சட்டென்று முடிந்தது போல குருதி ஆட்டம் முடிந்தது.
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களான அரண்மனை என்கிற உடையப்பன், லோட்டா, அரியநாச்சி, தவசியாண்டி, கணக்குப்பிள்ளை ரத்தனாபிஷேகம், வெள்ளையம்மா போன்றவர்கள் இன்னும் நிறைய பக்கங்களில் வந்திருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
தவிர்க்க முடியாத சில சினிமா சூழல்களால் இந்த கதையை மேலும் எழுத முடியவில்லை என்று திரு.வேல ராமமூர்த்தி அவர்கள் குருதி சடங்கில் குறிப்பிட்டுள்ளார்.
Vela Ramamurthy, known for his gripping tales of Southern Tamil Nadu, has once again delivered a well-written story. The revenge plot, told in his signature style, is filled with intense moments. As the name suggests, the color red dominates the story, but there are also glimpses of black, blue, and green.
The author's storytelling skills keep the reader hooked from start to finish, and the plot twists and turns keep you guessing until the very end. This book is a must-read for those who enjoy fast-paced and engaging stories with a touch of suspense and mystery.
Kuruthi aatam is the second part of Pattathu Aanai... way of writing is too good but its ending is disappointed. 100 pages of writing, starting is very curious , with that excitement ending become shortspan..
The book starts good with strong character setting and development. The ending is very short and did not do justice to the story even though it is mentioned that the author did not get enough time as he expected in the preface.
விறு விருப்பாக சென்று சட்டென முடிந்து விட்டது. முதன் முறையாக வேல ராமமூர்த்தி அவர்களை படிக்கிறேன். அருமையான கதை சொல்லி. புத்தகத்தை கீழே வைக்க முடிய வில்லை..
"குருதி ஆட்டம்" நாவல் பட்டத்துயானையின் தொடர்ச்சியான தான நிகழ்வுகளை கொண்டது. குருதி ஆட்டம் "பட்டத்துயானை" நாவலின் காட்சிகளை மீண்டும் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது சிறப்பு...
This book is set in the pre-independence time, when the ruling palace holds hands with the British ruling and betrays the people of the land. Ranasingam is the local hero in a small village in Tamil Nadu. He fights for the rights of his people and against his own palace which has joined hands with the British. The British government, under the guidance of DSP Scott decides to kill Ranasingam and abduct his son and sister to Malaysia. Watching his father being killed in front of his eyes, Duraisingam becomes mute. Ranasingam`s sister Ariyanaachi brings up Duraisingam to avenge the death of his father. When the time is right, she brings him to their land.
Will he ever succeed in his life long mission? Will Ariyanachi avenge her brother`s death? A thrilling, short novel, describes four main characters living in four different backgrounds in a way that keeps you in awe of the writing. Reasons to love the author`s works, are his raw, cut to the point stories that will linger in your brain for longer. Beautiful yet simple descriptions make his characters so much more easier to love and hate.
பட்டத்து யானை என்னும் புகழ்பெற்ற புதினத்தின் தொடர்ச்சியாகவே ‘குருதி ஆட்டம்’ அமைந்துள்ளது. ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடிய விதத்தில், வேல ராமமூர்த்தியின் எழுத்து நடை அசத்தலாகும். இந்த புதினத்தின் ஒவ்வொரு நிகழ்வும் வாசகனை தன்னுள் இழுத்துக்கொண்டு போகும். சிறப்பான முன்னோட்டங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் அனைத்தும் நாவலை சுவாரசியமாக்குகின்றன. எனினும், இறுதிக் காட்சியில் எழுத்தாளர் கொஞ்சம் விரைவாக முடித்து விட்டார் போல ஒரு நுண்மையான பாவனை ஏற்படுகிறது. ஆனால் அது ஐயா வேல ராமமூர்த்தியின் தனிச்சிறப்பான எழுத்து பாணியை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.