அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இராக்கில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷியா முஸ்லிம்களின் கோர மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்காத மக்கள் வாழ வழியின்றி சிரியாவை விட்டுத் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டிருப்பதில் ஐ.எஸ்ஸின் பங்கு கணிசமானது. சிரியா உள்நாட்டு யுத்தங்களில் ஐ.எஸ். ஒரு முக்கியக் கண்ணி.
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.
அல்காய்தா வுக்கு பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதுஐ.எஸ் என்கிற இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம் மத்திய கிழக்கில் குறிப்பாக ஈராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்று குவித்து வருகிறது. ஈராக்கில் மட்டுமே ஆயிரக்கணக்கான ஷியா முசுலிம்களின் கோர மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்கா அப்பாவி பொதுமக்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி சிரியாவை விட்டு இன்று இடம்பெயர்ந்து கொண்டிருப்பதில் அதில் பங்கு பெரியது. சிரியா உள்நாட்டு யுத்தத்தில் ஒரு மிக முக்கிய கண்ணி.சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கோடி கோடியாக கொட்டும் பணம் உலகம் தழுவிய நெட்வொர்க் பலம். சந்தேகமின்றி ஐஏஎஸ் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்.ஐஎஸ் அமைப்பினர் திகிலூட்டும் வளர்ச்சி மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள மத்திய கிழக்கு தேசங்களின் ஜாதி அரசியல் மற்றும் எண்ணை அரசியலின் வேர் வரை வெளியே இழுத்து விளக்குகிறார் ராகவன்.
நான் வாசித்த வரைக்கும் டாலர் தேசத்துக்கு அடுத்தாக பா.ராவின் நூல்களில் மிகச் சிறந்தவை அவர் மத்தியகிழக்கு தீவிரவாத இயக்கங்களை பற்றி எழுதிய நூல்கள் தான். அவ்வகையில் ISIS இன் வரலாற்றை அப் பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கிய ஸர்க்காவியின் பிறப்பில் ஆரம்பித்து அவனது வாழ்க்கை,ISIS இன் தோற்றம், அவர்களின் காட்டுமிராண்டித்தனங்கள், பாக்தாதியின் கீழ் அவ் அமைப்பு கண்ட மாற்றங்கள், கடத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தம் என 2015 இன் இறுதிப் பகுதி வரையான ISIS வரலாற்றை சுருக்கமாகவும் சுவாரஸ்யமான முறையிலும் விவரிக்கிறது இந்நூல். ISIS இன் வரலாற்றை தமிழில் வாசிக்க எண்ணுபவர்கள் இந்நூல் சிறந்த தெரிவாகி அமையும்.
I learnt lot of things about ISIS, Iraq and how ISIS is different from other terrorist organisation. But I felt the lack of continuation in the narration. It made me curious to read more about Arab countries, other extremist organisations and why US is very much interested in wiping out the terrorist, or is it so ?