Jump to ratings and reviews
Rate this book

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்

Rate this book
தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் "இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்" என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய விவரங்கள் (facts) முழுவதும் மார்க்சீயப் பேரறிஞர் தேபி பிரஸாத் சட்டோபாத்யாயாவின் 'Indian Atheism' என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. ஆனால் இந்நூல் அந்நூலின் சுருக்கமோ, மொழிபெயர்ப்போ அன்று. தேபி பிரஸாத் விளக்காமல் விட்டுவிட்ட பல கூறுகளை நான் விளக்கியுள்ளேன். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கூற்றுக்களை அவர்கள் நூல்களில் இருந்தே மேற்கோளாகக் கொடுத்துள்ளேன். பொதுவாக இதுவோர் மூலநூல். ⁠இது எழுதக் காரணமாயிருந்தது தூத்துக்குடி படிப்பாளிகள் குழுவும், தேபி பிரஸாத்தின் நூலும்.

56 pages, Kindle Edition

First published October 1, 1978

4 people are currently reading
15 people want to read

About the author

நா. வானமாமலை (1917 - 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது 22 நூல்கள் 2008-09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (36%)
4 stars
7 (36%)
3 stars
4 (21%)
2 stars
0 (0%)
1 star
1 (5%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Vivek KuRa.
281 reviews52 followers
October 15, 2022
"இந்திய தத்துவங்கள் எல்லாமே எப்பொழுதுமே கடவுள் நம்பிக்கையை மட்டுமே போதித்தன" என்கின்ற பிரபலமான நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் இந்திய பண்டை நாத்திகவாத கொள்கைகளை கொண்டோரை வரிசை படுத்துகிறார் ந.வானமாமலை . சாருவாகர் , லோகாயதர் ,பூதவாதி , சாங்கியவாதி ,மீமாம்சகர்கள் ,நியாய வைசேசிகர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலை அறிமுக படுத்துகிறார் . ஆத்திகர்கள் எப்படி காலப்போக்கில் எதிர்கருத்துக்களை தன்னுடைய கொள்கைகளுக்கு பொருத்தமாக மாற்றி கூறி "சாமான்ய சாலம் " (aka அறிவியல் அயோக்கியத்தனம் ) செய்தார்கள் என்று எடுத்து காட்டுகிறார் !!! ஒரு கடவுள் மறுப்பு கொள்கைகளை பெளத்தம் ,சமணம் அத்வைதம் ,மாத்வம் கொண்டிருந்தன என்று விளக்குகிறார் .

எப்படி வேதகால கடவுள்களுமே தோன்றி மறைந்தார்கள் , எப்படி சில கடவுள்களின் மவுசு குறைந்தது போன்ற சுவாரசியமான கருத்துக்களை முன் வைக்கின்றார். மேலும் மேற்கத்திய நாத்திகத்துக்கும் , இந்திய நாத்திகத்துக்கும் உள்ள வேற்றுமைகளும், ஒற்றுமைகளும் ஆராய்கிறார்.

இந்த சிக்கலான சமன்பாட்டில் மார்க்ஸின் தத்துவம் எவ்வாறு பொருந்துகிறது , அது எப்படி மற்ற நாத்திக கருத்துக்களை முழுமையடைய செய்கிறது என்று அருமையாக விளக்கியுள்ளார்.

"உணர்வுகள் வாழ்வை தீர்மானிப்பதில்லை , வாழ்க்கைதான் உணர்வுகளை தீர்மானிகின்றன" மற்றும் "பொருளாதார அடிப்படையே மனதின் சிந்தனையின் வேர்" என்ற மார்க்ஸின் பொருள் முதல்வாத வாதத்தையும் , ஏன் மனிதன் மதத்தை உருவாக்கினான் , அது இன்னும் ஏன் பலருக்கு தேவைப்படுகிறது என்ற ஆராய்ச்சியில் , அரசு மற்றும் மதத்தின் கள்ள உறவையும் , அது எப்படி ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் பெருமூச்சாக இருக்கிறது , இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது அனால் உண்மையில் மக்களை மயக்கும் அபினியாகவே இருக்கிறது மதம் என்ற மார்க்ஸின் மேற்கோள் மனதில் எதிரொலிக்கிறது . .


மார்க்சியத்தில் நாத்திகத்தின் இடம் பற்றி அறியவும், அவை இரண்டின் உறவை அறிய இந்த சிறிய நூல் மிகவும் உதவும்.
Profile Image for Karthick.
371 reviews123 followers
November 7, 2023
இந்தியாவில் நாத்திக கோட்பாடுகள் பற்றியும், மார்க்சிய தத்துவம் அதை வேறு வடிவில் காட்டுவதை பற்றியும் இந்த புத்தகம் கூறுகிறது.

பண்டைய இந்தியாவின் தத்துவங்கள் கடவுள் நம்பிக்கை மறுப்பையே அழுத்தி சொல்கிறது. அதாவது, கடவுள் மறுப்பை ஒரு தர்க்கவாதத்தின் நோக்கில் தான் குறிக்கிறது. அப்படி இருந்தும் இன்று வரை கடவுள் பிழைத்துக்கொண்டு தானே இருக்கிறார்?

இதை, பண்டைய இந்திய நாத்திகத்தின் பலவீனமாக பார்க்க முடிகிறது. காரணம், தர்க்கவாதத்தின் (Logic) வழியில் கடவுள் மறுப்பு பேசுகிறதே தவிர, கடவுளை சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கவும், கடவுள் நம்பிக்கைக்கு உணவளிக்கும் அடிப்படை அல்லது ஊற்றுக்கண் - சமூகம் தான் என்பதை பார்க்க தவறி விட்டது.

இந்த இந்திய நாத்திகத்தில் உள்ள இடைவெளியை தான், மார்க்சியம் அடிக்கோடிட்டு நிரப்புகிறது. மார்க்சிய தத்துவம் சொல்வதென்ன?

1. மனிதர்கள் எவ்வித உறவு கொள்ளுகிறார்கள் என்பது உற்பத்திமுறை அமைப்பை பொறுத்தது. உற்பத்தி முறை வளர்ச்சியும், அந்த வளர்ச்சிக்கேற்ப ஒரு கட்டத்தில் நம்பிக்கை தோன்றியது, சமூக அமைப்பு மாறியது. இதுவே மத கட்டமைப்பிற்கு அடிப்படையானது. அரசு உருவானது.

2. சமூக வளர்ச்சியால் பொருளாதார முரண்பாடுகள் தோன்றி, ஏற்ற தாழ்வு உருவானது. இதனால் பகை உருவாகி அழிவு நேராமல் இருக்க, சமூக அமைப்பால் அரசு உருவாக்கப்பட்டது. ஆனால், அரசு மக்களை கட்டுப்படுத்தும் கருவியாக இயங்கியது. அரசால் மதம், ஆன்மிகம் போற்றப்பட்டது.

கடவுள் இருப்பையும், நம்பிக்கையையும், மதத்தையும் தகர்த்தெறிய நாத்திக கருத்துக்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே ஒரே வழி.

See Religion not just through the lense of logic, but also the structure of society through Anthropology, Archeology, Psychology and science.
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
August 13, 2016
இந்திய தத்துவச் சிந்தனையில் நாத்திகத்தின் இருப்பைச் சுட்டிக்காட்டி இந்திய நாத்திகத்தின் தோற்றம், பிரிவுகள், நாத்திகம் என்பதற்கான வரைவிலக்கணம் காலத்தோடு மாறிய விதம், இந்தியாவில் 'ஒரே கடவுள்' கொள்கையினது தோற்றத்தின் பின்னணி, சுபாவவாதம் மற்றும் யதேச்சைவாதம் பற்றி சுருக்கமாக விவரித்து இறுதியில் நாத்திகத்தை மார்க்ஸியம் எவ்வாறு முழுமையாக்கின்றது என்பதை பற்றி சுருக்கமாக கூறியிருக்கிறார் ஆசிரியர். இந்திய நாத்திகம் பற்றி விளக்கும் பகுதிகள் சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் மிகவும் சிறந்த முறையில் எளிமையாக எழுதப்பட்டிருக்கின்றன.சுபாவவாதம் பற்றிய பகுதியில் பொருட்களின் சுபாவமே(இயல்பே) உலக மாற்றங்களுக்கு காரணம் எனவும் இதனை இந்திய நாத்திகப் பிரிவுகள் ஏற்றுக்கொள்கின்றன என்று குறிப்பிடும் ஆசிரியர் வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு சுபாவங்களை கொண்டமைந்தமைக்கான காரணங்களையோ சுபாவவாதத்தை நிரூபிக்கும் ஆதாரங்களையோ குறிப்பிடாதது மைனஸ். நாத்திகத்தை முழுமைப்படுத்துவதில் மார்க்ஸியத்தின் பங்கு குறித்த பகுதிகளில் மார்க்ஸிய கொள்கைகளை எளிய முறையில் விளக்கியிருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். அதே போல் சில இடங்களில் மார்க்ஸியம், பொருளாதாரம் சார்ந்த கலைச்சொற்களுக்கு உரிய ஆங்கிலச் சொற்களையும் குறிப்பிட்டிருந்தால் வாசகர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.
Profile Image for Jagan K.
50 reviews15 followers
October 20, 2019
Perfect introduction to Marxist atheism

It's not just about research and study but the inferences the author makes through them is what makes this book special. While doing so he also maintains his subjectivity rather than resorting to slanders. A perfect introduction to Marxist atheism
1 review
May 31, 2022
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.