அரசனின் வாளைவிடப் பேனா முனைக்கு வலிமை அதிகம். தமது பேனாவின் மூலம் சமுதாயத்தை மாற்றியவர் லியோ டால்ஸ்டாய். இவர் உலகின் மிகச்சிறந்த புதின எழுத்தாளர்களில் ஒருவர். ரஷ்யாவில் 1828-இல் மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே தாய்தந்தை இருவரையும் இழந்த டால்ஸ்டாய் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். ரஷியாவின் கசான் பல்கலைக்கழகத்தில் டால்ஸ்டாய் படித்தார். கல்வியில் பின்தங்கியவராகவே அவரைக்கருதிய அவருடைய பேராசிரியர்கள், படிப்பதில் விருப்பமில்லாதவர், அதற்கான தகுதியும் இல்லாதவர் என்றெல்லாம் அவர் மீது முத்திரை குத்தினர். எனவே மனவருத்தமுற்றுக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.