80களின் வாழ்க்கை என்பது வரம் அந்தக்கால கட்டத்தின் காதல் என்பது தெய்வீகம்.இது இரண்டையும் கடந்த தமிழ் திரைப்பட உலகம் என்பது..என்ன வார்த்தை கூறினால் சரியாய் இருக்கும்?நிச்சயம் தெரியவில்லை. நான் அந்த காலத்தில் வாழவில்லை ஆனால் இளையராஜா எஸ்பிபி ஜேசுதாஸ் என்ற கலைஞர்கள்… இல்லை இல்லை இசை அசுரர்களால் கோடிமுறை வாழ்ந்து பார்த்தாயிற்று அந்த உலகில். இப்போது என் கற்பனையில் என்னோடு சேர்ந்து வாகர்களாகிய உங்களையும் 80களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்...நம் கண்ணனையும் இராதையையும் பார்த்து வருவதற்காக...
ஹாய் ஸ்ரீ மா.. வாவ் என்ன ஒரு கதை.. மிகவும் அழுத்தமான அழகான் கதை டா.. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு பாடலும் அத்தனை அருமை... கண்ணனின் ராதை கண்ணனிடமே.. உணர்வுகள் அனைத்தையும் எழுத்தில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது... வாழ்த்துக்கள் டா... 😍😍🥰😘😘😘😘😘