ஹாய் செல்ல குட்டிஸ் , "கல்நெஞ்சே கசிந்திடு" அழகிய காதல் கதை.. கதையை பற்றி நான் கூறுவதை விட அருமை தோழி கொடுத்த கவிதை உங்களுக்காக.. கவிதையே கதையை சொல்லும் டியர்ஸ்.. படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மா.. ********************************** காலம் செய்த கோலத்தால் உள்ளம் கல்லாய் இறுகி நின்றேன் காதல் கொண்ட பெண்ணவளால் உள்ளம் இலகி நின்றேன். அன்பை பொழியும் அன்னையை தவறான புரிதலால் தவறவிட்டேன்.... காதல் கொண்டேன் தாயின் அன்பை தருவாள் என்று நினைத்தேன்.. அவளோ என் நிலை இறங்கிய பின் அவள் இதயத்தில் இருந்து என்னை இறக்கிவிட்டாள்...... இது தான் பெண்கள் என்று விலகிவிட்டேன்.... இவர்கள் மட்டும் பெண்னல்ல என்று உணரவைத்தாள் என்னவள்....