நான் ரம்யாவாக இருக்கிறேன் என்ற இந்த அறிவியல் த்ரில்லர் தமிழகத்தின் பிரபலமான வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடனில் வெளியானது. வெளியான நேரத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. காரணம்? தமிழில் இதுவரை சொல்லப்படாத பேரலல் யூனிவர்ஸ் என்ற அறிவியல் ஆய்வின் பின்னணியில் இந்தக் கதை பின்னப்பட்டிருந்ததுதான். பிரபஞ்சம் தோன்றியபோதே இணையாக இன்னொரு பிரபஞ்சமும் உருவானது. இங்கே இருப்பது போலவே அங்கும் மனிதர்களும் மரங்களும் உயிரினங்களும் இருக்கின்றன. இன்னொரு பூமியில் அமேசான் கிண்டிலில் நான் ரம்யாவாக இருக்கிறேன் என்ற தொடர் பதிவேற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த அறிவியல் தியரியின் சுவாரஸ்யம். கதையில் இங்கு பூமியில் இருக்கும் ரம்யாவைப் போலவே இன்னொரு ரம்யா
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
அறிவியல் நிகழ்வுகளைப் புனைவுகளாக மாற்றி மக்களிடம் சேர்க்கும் போது அதன் அடர்த்தியைக் குறைத்துப் புரிந்து கொள்ளும் அளவில் காட்சியமைப்பதில் தான் அப்படைப்பின் வெற்றி இருக்கிறது. இக்கதையில் கையாளப்பட்டிருக்கும் சம்பவங்களும் அதுபோலத் தான்.
வீடியோ கேம் தயாரிக்கும் இடத்தில் இருக்கும் வினோத்தின் கண்ணில் புதியதாக வேலைக்கு வந்த ரம்யா விழும் போது மனதில் ஓர் அசைவை உண்டாக்கிவிட்டவள் உடனடியாக அவனின் கண் முன்னே ஒரு கொலையை நிகழ்த்தும் போது மர்ம பெண்ணாக மாறிவிடுகிறாள்.
அடுத்தடுத்துக் கொலைகள் நடந்தேறுகிறது அதுவும் புதிராக, கொலைகள் நடக்குமிடத்தில் சாட்சியாக வினோத்தும் நின்று கொண்டு தான் இருக்கிறான்.
கொலைகள் நடந்த முறையில் மர்ம கதையில் இருந்து அமானுஷ்ய கதையாக மெல்ல மாற்றமடைகிறது.
டெல்லியில் இருக்கும் ஒரு விஞ்ஞானியின் கொலைக்குப் பிறகு கதை தன் அறிவியல் புனைவு தடத்தில் முழுமையாக நின்றுவிடுகிறது.
இன்று வரை வெறும் நம்பப்படுதலில் மட்டுமே இருக்கும் பூமிக்கு இணையான மற்றொரு உலகத்தின் கருத்தை நோக்கிக் கதை நகரத்தொடங்கிவிடுகிறது.
பலகோடி வருடங்களுக்கு முன்பு பூமி தோன்ற உண்டான வெடிப்பின் மூலமே பூமிக்கு இணையாக மற்றோர் உலகமும் விண்வெளியில் உண்டாகி இருக்க வேண்டும் என்ற தகவல் உண்மை என்று சொல்ல விஞ்ஞானிகள் தற்போது செயற்கையாக உண்டாக்கிய வெடிப்பால் கருந்துளை மூலம் அவ்வுலகத்திலிருந்த ரம்யா இங்கே வந்து சேர்வதும், அதன் மூலம் பூமியில் இருக்கும் ரம்யாவின் மனதில் இருக்கும் ஆக்ரோஷத்தை சாந்தப்படுத்த ரம்யாவாக இருப்பவள் அடுத்தடுத்த கொலைகளில் ஈடுபட்டது ஒருவகையாகத் தியரிகள் மூலம் விஞ்ஞானிகள் நிரூபிக்கின்றனர்.
அவ்வளவு எளிமைப்படுத்தப்பட்ட உதாரணங்கள் மூலம் எழுதப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் சாதாரண வாசகனையும் திருப்தி படுத்திவிடுகிறது.
இணைவுலகத்திலிருந்து இங்கே வர முடியும் என்றால் இங்கே இருந்து அங்கேயும் செல்ல முடியும் தானே என்ற கேள்விக்கான விடை முடிவில் கவின் என்ற கதாபாத்திரத்தின் நகர்வு மூலம் பதில் சொல்லப்படுகிறது.