திருப்பங்கள் என்பதை மிகச்சரியாக வரையறுக்க முடியாது. "அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பது தெரியாது" என்பதே சரியான விளக்கமாயிருக்கும். இந்த வகையில் இந்த சிறிய புத்தகம் எட்டாம் பாகமாகும். இந்த சிறிய புத்தகத்தில் பத்து தகவல்களைத் தந்துள்ளேன். கதையின் நீளம் ஒரே ஒரு வரி தான். அந்த ஒரு வரியில் முடிந்த வரையில் ஒரு சூழ்நிலையை தந்துள்ளேன். கதையும் முக்கியம் அல்ல; அந்த சூழ்நிலையும் முக்கியம் அல்ல. அதில் வருகின்ற திருப்பம் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது தான் எனது எதிர்ப்பார்ப்பு. நீங்கள் செலவழிக்கவேண்டியது குறைந்த நேரமே. இடது கையில் சூடான் காப்பியை வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது கதைகளைப்படியுங்கள்.